ராகுல் காந்தி – நம்பவே முடியவில்லை…!!!



சிங்கப்பூர் நேஷனல் யுனிவர்சிடி அரங்கத்தில்,
ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சி… அங்கே திரு.ராகுல்காந்தி முக்கிய விருந்தினர்…. அங்கே, கேட்கப்படும் கேள்விகளையும்,
ராகுல் காந்தி அவற்றை கையாளும் விதத்தையும்
கீழே காணொளியில் பார்க்கலாம்….

நான் சில வருடங்கள் பின் நோக்கிச் சென்று, 2014 மார்ச் மாதம்
பாராளுமன்ற தேர்தல்களையொட்டி, நடந்த ஒரு பேட்டியில்,
பிரபல டிவி ஜர்னலிஸ்ட் அர்னாப் கோஸ்வாமியிடம்
மாட்டிக் கொண்டு ராகுல் காந்தி அவர்கள் பட்ட அவஸ்தையை
எண்ணிப் பார்க்கிறேன்…. அவரது பலவீனங்களை
பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது
அந்த பேட்டி….

அதே ராகுல் காந்தியிடம், இன்று காணப்படும் தெளிவு, நிதானம்,
தன்னம்பிக்கை – மற்றவர்களை கையாளும் விதம் ஆகியவை பிரமிக்க
வைக்கின்றன….நிச்சயமாக இது ஒரு நல்ல வளர்ச்சி… மாற்றம்…!

இன்றைய ராகுல் காந்தி, வரப்போகும் தேர்தல்களில் மோடிஜிக்கு
நிச்சயம் ஒரு பெரிய சவாலாக இருப்பார் என்றே தோன்றுகிறது……!!!

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ராகுல் காந்தி – நம்பவே முடியவில்லை…!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    சார், முடிந்தால் இந்த வீடியோவையும் பாருங்களேன்.
    ராகுல் காந்தி பிரமாதமாக expose ஆகி இருக்கிறார்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி அரவிந்தன்,

      நான் இந்த பேட்டியை ஏற்கெனவே பார்த்தேன். ஒருவகையில், நான் இந்த இடுகையை எழுத இந்த பேட்டி கூட காரணமாக இருந்தது என்று சொல்லலாம். இருந்தாலும், இது கொஞ்சம் நீளமாக இருந்தது என்பதால் நண்பர்கள்
      சுலபமாகப் படிக்க வசதியாக இருக்குமென்று சிங்கப்பூர் நிகழ்ச்சியை சின்னதாக எடுத்துப் போட்டேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! // அதே ராகுல் காந்தியிடம், இன்று காணப்படும் தெளிவு, நிதானம்,
    தன்னம்பிக்கை – மற்றவர்களை கையாளும் விதம் ஆகியவை பிரமிக்க
    வைக்கின்றன….நிச்சயமாக இது ஒரு நல்ல வளர்ச்சி… மாற்றம்…! // …. இதுக்குமேல வேறு என்ன இருக்கிறது — சொல்வதற்கு …! நீங்க ஒருமுறை மறுமொழியில் யாரையோ ” வசிஷ்டர் ” என்று குறிப்பிட்டிர்கள் — உண்மையான வசிஷ்டர் தற்போது தாங்கள் தான் ..!!
    அடுத்து ஒரு செய்தி :– // நிகழ்களம்: பொய்ச் செய்திகளின் ஆபத்தான பயணம்! // https://www.minnambalam.com/k/2018/11/13/27 … எப்படியெல்லாம் இருக்கு நாட்டு நடப்பு ….?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      //நிகழ்களம்: பொய்ச் செய்திகளின் ஆபத்தான பயணம்! //

      இது குறித்து, பின்னால் ஒரு இடுகையுடன் வருகிறேன்.
      விவரமாக விவாதிக்கலாம்..

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Lala's avatar Lala சொல்கிறார்:

    ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டால் மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    மன்மோகன் போன்ற பொருளாதார வல்லுநர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் மோடி தோற்கடிக்கப்படலாம்

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    Lala

    இன்னும் 20 வருடங்களூக்கு மோடீஜீ தான் பிரதமர்;
    எவர் வந்தாலும் அசைக்கவே முடியாது;

    • Srikanth's avatar Srikanth சொல்கிறார்:

      Super Mani Sir. I totally agree.

      • Mani's avatar Mani சொல்கிறார்:

        Srikanth

        நக்கலுக்கும், நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையா ?

        முதலில் ஏப்ரல், 2019-ஐ தாண்டுங்கள்;
        அதன் பிறகு 50 வருட ஆட்சி, மொட்டை ஆட்சி என்பதை எல்லாம்
        பார்க்கலாம்.

        நாடு துடிப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது மோடிஜி கூட்டத்தை
        வீட்டுக்கு அனுப்ப;

  5. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுகிறார் .
    இது மாதிரி யாராவது மோடிஜியை கேட்க முடியுமா ?

    மோடிதான் அடுத்த 20 வருடங்களுக்கு பிரதமர் !
    அப்புறம் அடுத்த 50 வருடங்களுக்கு பா.ஜ.க ஆட்சி செய்யப் போகிறது !

  6. Srikanth's avatar Srikanth சொல்கிறார்:

    No way. In fact RG is the star campaigner for BJP in 2019 elections. Top leaders like Shah are having a gala time to have such a ridiculous and stupid fellow in the opposition. This will be once again proved in May 2019 and RG will disappear overnight to his homeland(Italy).

  7. Mani's avatar Mani சொல்கிறார்:

    Srikanth

    ஆமாம் பாஜக தலைகளின் பொய்களை எல்லாம் மக்கள் பார்த்து விட்டார்கள்.
    இனி அவர்கள் சொல்வதை யாரும் நம்பத்தயாரில்லை.
    In fact RG is the star campaigner for …… in 2019 elections. உண்மை தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.