…
…

…
“நிதி ஆயோக்”
The National Institution for Transforming India
பெயரிலேயே சொல்கிறது அதன் வேலை
என்ன என்பதை –
இந்தியாவை வளமான பாதையில் செல்லுமாறு
மாற்றி அமைக்க உருப்படியான யோசனைகளை
சொல்வது தான் அதன் வேலை….
ஆனால், நிஜத்தில் நடப்பதென்ன…?
நேற்று வெளியாகியிருக்கும் ஒரு செய்தியிலிருந்து சில பகுதிகள் –
( இப்போது தான் நாட்டில், தென்மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கி பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வரும்போது இப்படி ஒரு தலைப்புச் செய்தி..)
– ” நாடு முழுவதும் வரலாறு காணாத வறட்சி “-
‘நிடி ஆயோக்’ அறிக்கையில், ‘பகீர்’
..

–
..
நிடி ஆயோக் அறிக்கையை, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நீர்வளத்துறை
அமைச்சர், நிதின் கட்கரி நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:
நம் நாட்டில், வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. பல மாநிலங்களில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சில நகரங்களில், நீர் அதிக மாசடைந்துள்ளது. நாட்டின், 70 சதவீத தண்ணீர், கடும் மாசடைந்ததாக உள்ளது.
தண்ணீர் தர குறியீட்டில், உலகின், 122 நாடுகளின் பட்டியலில், இந்தியா, 120வது இடத்தில் உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், நாட்டின், 21 முக்கிய நகரங்களில், 2020ல், நிலத்தடி நீரே இல்லாத நிலை உருவாகும். தற்போதைய தண்ணீர் பற்றாக்குறை, 2030ல், இரு மடங்கு அதிகரிக்கும்.
10 கோடி பேர், தண்ணீர் கிடைக்காமல்,
வறட்சியில் தவிக்கும் நிலை உருவாகும்.
தற்போதைய நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால்
நாடு முழுவதும், ஆறு கோடி பேர், கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், போதிய அளவு
தண்ணீர் கிடைக்காததால்,
இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
———————————————————————————
பருவமழை துவங்கி, நல்ல மழை பெய்து வரும்போது
இத்தகைய ஒரு அறிக்கையை வெளியிடுவது –
எப்பேற்பட்ட முட்டாள்தனமான செயல்பாடு… ?
மேலும், பிரச்சினையை பூதாகாரமாக பலமடங்கு பெரியதாக்கி
காட்டி விட்டு, தீர்வு எதையும் கூறாமல் இருப்பது எப்படி…?
நிதி ஆயோகின் வேலை என்ன…?
பிரச்சினையை பூதாகாரமாக்குவதா…?
அல்லது பிரச்சினையை சரியான முறையில் விளக்கி,
அதற்கான யோசனைகளையும், தீர்வுகளையும் காண்பதா…?
” ஒவ்வொரு ஆண்டும், போதிய அளவு
தண்ணீர் கிடைக்காததால், இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.”
-என்று அறிக்கையில் சொல்கிறார்களே… பொறுப்போடு தான்
இதைச் சொல்கிறார்களா…? இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்க
அரசு வெட்கப்பட வேண்டாமா…?
குடிக்கத் தண்ணீர் இல்லாமல், இந்தியாவில் ஆண்டுக்கு
இரண்டு லட்சம் பேர் செத்துப் போகிறார்கள் என்கிற செய்தியை
மத்திய அரசு ஏற்கிறதா…?
அப்படியானால், கடந்த 4 வருடங்களாக, இதைத்தவிர்க்க –
இந்த நிலையை சீராக்க, நிதி ஆயோக் என்ன ஆலோசனை
கொடுத்தது…?
மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது..?
ட்ரம் அடித்து, மரத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்ததா…?
அல்லது பின்பக்கமாகவே நடந்து போய்க்கொண்டிருந்ததா…?
.
———————————————————————————



பிங்குபாக்: நிதி ஆயோக் வேலை என்ன…? எல்லாரையும் பயமுறுத்துவதா …? – TamilBlogs
It is not a fair comment.It is a projection of a possibility if the present practices of wastage and pollution and effects of global warming continue.Sometime back one western think tank predicted the off the next war would be water.Thiruvengadam
My dear Mr.Thiruvengadam,
What is the job of Niti Ayog….?
It is spelt in its LOGO –
TRANSFORMING THE NATION….
Please go through the Article once again.
I have told the Niti Ayog should not stop with threatening people
of bleak future; but come out with REAL TIME SOLUTIONS…!!!
Don’t you think FINDDING OUT AND SUGGESTING SOLUTIONS is its job … ???
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Thiruvengadam,
தண்ணீர் பஞ்சத்தைப் போக்க இந்த நிதி ஆயோக் இதுவரை உருப்படியாக எதையாவது செய்திருக்கிறதா…?
ஏற்கெனவே இருந்த planning commission -ஐ ஒழித்து விட்டு, புதிய நாமகரணமிட்டு, தனது ரசிகர்
பனாக்ரியாவை இதன் தலைவராக மோடிஜி அமர்த்தியது இப்படி பயமுறுத்தலிலும், மாநில பங்குகளை
குறைப்பதிலும் யோசனைகள் சொல்லத்தானா…?
குறைந்த பட்சம் கடலில் கலந்து வீணாகும் மஹாநதி, கோதாவரி தண்ணீரையாவது சேமித்து,
மற்ற ஆறுகளுடன் இணைக்க, இதுவரை எந்த முயற்சியிலாவது ஈடுபட்டிருக்கிறதா இந்த உருப்படாத ஆயோக் ..?
எதை வைத்து not a fair comment… என்று சொல்கிறீர்கள்…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஐயா,
உங்களுக்கு தெரியாதா…!?
இந்த ஆட்சியே எல்லாரையும் பயமுறுத்துவது தானே அதன் நீட்சியாக இருக்கிறது….!
இந்த நான்கு வருடத்தில் ஒன்றா இரண்டா…!?
இந்த நான்கு வருடத்தையும் பெரும் பாலும் அதற்கு தானே இந்த அரசு செலவிட்டிருக்கிறது. அல்லது அதன் துணை பயங்கரவாத அமைப்புகள் செய்வதை கண்டும் காணாமல் இருக்கிறது.
இந்த ஆட்சி மீண்டும் வரணுமாம்…!