…
…

…
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கிட்டத்தட்ட முழுவதுமாகப் படித்துப் பார்த்து விட்டேன்… மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட வேண்டிய ஒரு மிக நல்ல தீர்ப்பு…!!!
இதனை குறை கூறியும், திரித்தும், எதிர்த்தும் பேசும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்…மிகுந்த பொறுப்புணர்வோடு, இத்தகைய நல்லதொரு தீர்ப்பை தந்ததற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மூவருக்கும் தமிழக மக்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைகிறது என்கிற ஒரே ஒரு
குறையைத் தவிர, தமிழ் நாட்டின் 50 ஆண்டுக்கால பிரச்சினைகள்
அத்தனைக்கும் தீர்வைத் தந்திருக்கிறது இந்த தீர்ப்பு.
அதன் முத்து முத்தான ஆணைகள் கீழே –
– நதி நீர் எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல. எந்த மாநிலமும் தனிப்பட உரிமை கொண்டாட முடியாது. அது இந்த தேசத்தின் பொதுச்சொத்து…
– வெள்ளம் வரும்போது மட்டும் தான் அணைகளைத் திறப்பது என்பதோ,
மழை வந்தால் தான், தண்ணீர் தருவோம் என்று சொல்வதோ – இனி
நடக்காது.
– காவிரி ஆணையம் ( Tribunal ) ஏற்கெனவே, வருடம் முழுவதற்கும் –
மாதா மாதம் இவ்வளவு டிஎம்சி தண்ணீர், என்று பங்கிட்டு பிரித்துக்
கொடுத்திருப்பது – இனி, நாம் யாரையும் கெஞ்சிக் கேட்காமலே,
சண்டை போட்டு, கோர்ட் படி ஏறாமலே தானாகவே நமக்கு கிடைப்பது
உறுதி செய்யப்பட்டிருக்கிறது…!
– மேகதாதுவில் குடிநீருக்காக அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின்சாரத்திற்காக அணை என்று இனி கர்நாடகா நம்மை அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது….
தமிழ்நாட்டின் சம்மதம் இல்லாமல், காவிரியில் இனி எந்த அணையையும் கட்டக் கூடாது / கட்ட முடியாது…!!!
– (காவிரி மேலாண்மை வாரியம்) cavery water management board –
அமைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. அது நாடாளுமன்றத்தின் உரிமை… அமைப்பதா, வேண்டாமா என்று நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும் என்று சொன்ன மத்திய அரசின் பிடரியில் அடிப்பது போல் –
– நீ எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்… ஆனால்
காவிரிக்காக ஒரு அமைப்பை உருவாக்கியே தீர வேண்டும்;
தீர்ப்பாயத்தில் சொன்னது போல் – மாதா மாதம், வருடம் முழுவதும் தண்ணீர் விடப்படுவதை அந்த அமைப்பு உறுதி செய்ய வேண்டும்…
இது தவறினால், மீண்டும் சுப்ரீம் கோர்ட் தலையிட நேரிடும்…!!!
– இந்த அமைப்பை உருவாக்குவதிலும் காலதாமதம் செய்ய முடியாது.
இன்றிலிருந்து சரியாக 6 (ஆறு) வாரங்களுக்குள், அந்த அமைப்பு உருவாகி, செயல்படத் துவங்கியாக வேண்டும்…
இதில் எந்த காரணத்தைச் சொல்லி தாமதப்படுத்தினாலும்,
சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளாது…!!!
– இன்று கொடுக்கும் தீர்ப்பு இறுதியானது… இதன் மீது இனி எத்தகைய
அப்பீலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது… அடுத்த 15 வருடங்களுக்கு இந்த தீர்ப்பு செயலில் இருக்கும்.
இதைவிட வேறென்ன வேண்டும்…
காவிரிப் பாசன விவசாயிகள் –
மகிழ்ச்சி கொள்ள வேண்டிய நேரம் இது…
———————————————————————————————-
மேலே நான் சொல்லியுள்ள விவரங்களுக்கு ஆதாரமாக,
தீர்ப்பிலிருந்து சில முக்கிய பகுதிகள் கீழே –
– The Report of the Commission as the language would suggest,
was to make the final decision of the Tribunal binding on both
the States and once it is treated as a decree of this Court,
then it has the binding effect. It was suggested to make the award
effectively enforceable. The language employed in Section 6(2) s
suggests that the decision of the Tribunal shall have the same force as the
order or decree of this Court.
——————————————
The argument of the Union of India that
Section 6A of the 1956 Act
by employing the word “may” has left room for discretion
to the Central Government for the purpose of
framing a scheme does not stand to reason
and further it does not meet the substance test.
Accordingly, the said submission stands repelled.
——————————————-
– Keeping that in view,
we direct that a scheme shall be framed by the Central
Government within a span of six weeks from today
so that the authorities under the scheme can see to it
that the present decision which has modified the award
passed by the Tribunal is smoothly made functional
and the rights of the States as determined by us
re appositely carried out.
– framing the scheme is exclusively for
implementation of the award.
—————————-
When we say so, we also categorically convey that
the need based monthly release has to be respected.
——————————-
It is hereby made clear that no extension shall be granted
for framing of the scheme on any ground
—————————-
-It needs no special emphasis to state that the purpose of
Section 6A is to act in the manner in which the award
determines the allocation and decides the dispute
with regard to allocation or sharing of water.
—————————
-When we say so, we also categorically convey that
the need based monthly release has to be respected.
—————————
– the State of Karnataka would now be required
to release 177.25 TMC of water at the inter-state border
with Tamil Nadu, i.e., at Billigundulu.
————————————
with regard to the monthly releases and not
inconsistent with anything decided herein,
are hereby endorsed for the present for
a period of 15 (fifteen) years hence.
———————————————————————————————-



God is great.
//அடுத்த 15 வருடங்களுக்கு இந்த தீர்ப்பு செயலில் இருக்கும்.//
அதன் பிறகு என்ன?
Tharmathin valavuthani soothu kavvum, tharmam marupadium vellum. Nandri supreme court.
பிங்குபாக்: God is great – Cherish the Memories
நேற்று காலை ஆரம்பித்து நள்ளிரவு வரை ஒவ்வொரு அரசியல்வாதியும்,
ஒவ்வொருதொலைக்காட்சியும், செய்தி வெப்சைட்களும் குழப்பிக்கொண்டே
இருந்தன. தமிழ் நாட்டுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக எல்லாரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். விவசாயிகளையும், மக்களையும் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்கள். இப்போது நீங்கள் ஆதாரங்களுடன்
எழுதி இருப்பதை பார்க்கும்போது தான் நம்மிடையே எத்தனை சுயநலவாத
அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பது புரிகிறது. மிகத்தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள் காவிரிமைந்தன்.
தெளிவாக எடுத்து கூறியுள்ளீர்கள்….. நன்றி…
பொறுப்பான விமரிசனம். நல்ல அணுகுமுறை.
உங்களைப் போன்றவர்கள் தான் இன்றைய தேவை.
நல்லது எதுவும் நடக்கக்கூடாது என்று எண்ணும் ‘சிறியவர்கள்’, இந்தத் தீர்ப்பை விமரிசிக்கிறார்கள். இந்தத் தீர்ப்பின்மீது மீண்டும் எந்தவித மனுவும் அனுப்பக்கூடாது என்று உச்ச’நீதி மன்றம் சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து. 15 வருடங்கள் என்பதை 20 அல்லது 25 வருடங்கள் என்று சொல்லியிருக்கலாம். அப்போது மழை’நீர் வரத்தைப் பொறுத்து தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கலாம்.
காவிரிக்காக ஒரு அமைப்பு உண்டாக்கவேண்டியது மத்திய அரசு. ஆனால் இதனை பாஜக செய்யும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம், கர்னாடகா தேர்தலும், அதில் செய்யவேண்டிய எதிர்கால அரசியலும்தான். எப்போது, ‘நியாயம்’, அரசியலுக்காகக் காவு கொடுக்கப்படுகிறதோ, அப்போது, ‘இந்தச் சமூகம்/மதம், அயல் நாடுகளை ஆதரிக்கிறது’ என்ற கூற்று அர்த்தமில்லாததாகிவிடும். பாஜக செய்யவேண்டியது, ஒரு ஆணையத்தை உச்ச நீதிமன்ற ஆணையினால் நியமித்து, அதனை, அரசியலிலிருந்து தள்ளி இருக்கும் அமைப்பாக ஆக்கிவிடவேண்டும். (ஆனால் செய்யமாட்டார்கள். மற்றவர்களை ‘சிறுபான்மையினர்’ வாக்கு என்று இந்துக்களுக்கு எதிராக நடந்துகொண்டனர் என்று சொல்லும் பாஜக, தாங்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்)
தமிழக அரசு, காவிரிப் படுகைகளில் நீர் வீணாகாமலும், மாசுபடாமலும், தேவை ஏற்பட்டால், சிறிய சிறிய தடுப்பணைகள் கட்டியும், காவிரி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உபயோகம் ஆகுமாறு செய்யவேண்டும்.
காவிரி தமிழக நிலங்களின் தாகம் தீர்க்க வரும்போது, தமிழன் ஜெ.வையும் நினைத்துக்கொள்வான்.