…
…

…
திரு.ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளுக்கு
நான் நேரில் சென்ற அனுபவம் உண்டு… எதைப்பற்றி பேசினாலும்,
மனம் திறந்து பளிச்சென்று பேசும் குணம் அவருடையது….!
மனதில் உள்ளதை அப்படியே வெளிப்பட பேசுவது எளிதல்ல…
அதற்கு ஒரு தனி மனப்பக்குவம் வேண்டும்.
முக்கியமாக ஈகோவை விட்டொழிக்க வேண்டும்.
அநேகமாக, பொதுவாழ்வில் உள்ளவர்கள், தங்களை சங்கடத்துக்கு
உள்ளாக்கிய பழைய நிகழ்வுகளைப்பற்றி பேசுவதைத் தவிர்த்து
விடுவார்கள்.
ஆனால், ரஜினியிடம் இந்த தயக்கம் இல்லை…
ஜெயலலிதா அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட சங்கடமான
அனுபவங்களையும், ஜெயலலிதா அவர்களின் குணாதிசயங்களையும்
எந்தவித தயக்கமும் இல்லாமல், மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும்
காணொளி ஒன்றை பார்த்தேன்…
இந்த சமயத்தில் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
வேண்டுமென்று தோன்றியது…. கீழே –
….

…
————————————————————————————————————-



பொதுவாழ்வில் உண்மை பேசணும்னா, மனசாட்சியோட பேசணும்னா, அதுக்கு ஈகோ இருக்கக்கூடாது என்பது உண்மை. இதுக்கு எனக்குத் தெரிந்து இரண்டு பேர்கள்தான் மனசுல தோன்றுகிறார்கள். ஒன்று சோ, இரண்டாவது ரஜினி. (அஜித், அரசியல் பேசியதில்லை, ஆனால் உண்மையைப் பேசியிருக்கிறார்)
ரஜினி பெரும்பாலும் உண்மையையே பேசியிருக்கிறார். தன் ‘நட்சத்திர’ அந்தஸ்தைக் காண்பித்ததில்லை. கொஞ்சம் பாலிஷ்டாகவும் இருந்திருக்கிறார். அவர், தமிழகத்துக்கு தலைமை தாங்கும் வாய்ப்பை காலம் அவருக்குத் தரவில்லை என்றே நினைக்கிறேன். ஜெயலலிதா என்ற தூண் இருந்த வரை, அத்தகைய வாய்ப்பு அவருக்கு இருந்ததில்லை.
இன்றைக்கு ஜெ.வின் படங்களைப் போட்டு மனதில் சலனத்தைக் கிளப்பிவிட்டீர்கள். புழுக்கள், சிறு நரிகள், எலிகள், பெருச்சாளிகள், யானையைக் குறை சொல்லுகின்றன. அவர்களின் வருத்தமெல்லாம் ‘யானை’ போல் தாங்கள் ஆகமுடியவில்லையே, மக்களின் பேராதரவு தங்களுக்குக் கிட்டவில்லையே என்ற பொருமல்தான்.
யாரை வேண்டுமானாலும் கேளுங்கள். இன்றைக்கு மத்திய அரசு எடுக்கின்ற பல முடிவுகளை, தைரியமாக விமர்சிப்பவர், ஆதரவு/எதிர்ப்பு என்ற நிலைகளை தீர்க்கமாக எடுப்பவர், கட்சியில் ஒரு சலனத்தையும் வரவிடாமல், ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்தவர், தனிப்பட்ட நட்பு-தமிழக நலன் என்பதை ஸ்டிரிக்டாக இருவேறு விஷயங்களாக நினைத்தவர், எதையும் சட்டப்படி எதிர்கொண்டவர், பொதுவாழ்வில் கொஞ்சம்கூட எதற்கும் கலங்கியவர் அல்லர். இவரைப்போல் கடந்த 50 ஆண்டுகளில் தனிப்பட்ட நட்சத்திரமாக ஒளிர்ந்தவர், எம்ஜியார் அவர்கள் மட்டுமே. இருவரையும் ஒப்பீடமுடியாதெனினும், எம்ஜியாரின் ஆதரவுத் தளத்தை பன் மடங்காக்கி அதிமுகவை உச்சத்துக்குக் கொண்டுசென்றவர் ஜெ. எம்ஜியார், காங்கிரசோடு சிறிது காம்ப்ரமைஸ் செய்துகொண்டார் (அரசியல் ரீதியாக). ஆனால் ஜெ. எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல், மக்கள் ஆதரவு என்ற வாளோடு மிகத் தைரியமாக் இருந்தவர். நண்பர் மோடியிடமே, I have more Hindus in my vote bank than BJP என்று தைரியமாகச் சொன்னவர். உச்ச நீதிமன்ற நீதிபதி, பாஜக தலைமை இரண்டுக்கும் தெரியும், தன் தனிப்பட்ட வழக்குகளுக்காக அவர்கள் உதவியை ஜெ. எதிர்பார்த்தவர் அல்லர் என்று. அதனால்தான் இந்திய மக்களின் பெரும் ஆதரவு மோடிக்கு இருக்கப்போகிறது என்று தெரிந்தும், தான் தான் பிரதமர் வேட்பாளர், மோடியா இல்லை இந்த லேடியா என்று தமிழகத்தில் சிம்ம கர்ஜனை செய்தவர்.
காலம், வேறு கணக்கோடு, அவரது பயணத்தை முடித்துவைத்தது.
காலம் வடித்த இந்த கற் சிலையைப் பார்த்து, இன்று கட்-அவுட்டுகள் ஊளையிடுகின்றன.
பகிர்வுக்கு நன்றி.
புதியவன்,
நீங்கள் சொன்னது –
—————-
// இன்றைக்கு ஜெ.வின் படங்களைப் போட்டு மனதில் சலனத்தைக் கிளப்பிவிட்டீர்கள். புழுக்கள், சிறு நரிகள், எலிகள், பெருச்சாளிகள், யானையைக் குறை சொல்லுகின்றன.//
—————-
உயிரோடு இருந்த வரையில், அவரை நேரடியாக எதிர்கொள்ள முடியாத, வெல்ல முடியாத கசடுகள் எல்லாம் பேசுவதை காணச் சகிக்க முடியாமல் தான் இதைத் தேடியெடுத்து பதிவு செய்தேன்…
எனக்கும் சேர்த்து நீங்களே எழுதி விட்டீர்கள்… நன்றி..!
திரு.ஸ்டாலின் தேர்தல் கமிஷனுக்கு அஃபிடவிட் கொடுத்தபோது சுமார் 30 கோடி வரை சொத்து காண்பித்திருக்கிறாரே… என்ன தொழில் செய்து அவர் இந்த சொத்தை சேகரித்தார் என்று அவரால் விளக்க முடியுமா…? அரசியலைத்தவிர அவர் வேறு எந்த தொழிலையும் செய்ததாக நினைவில்லையே… கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த 208 கோடியில் அவருக்கு எதுவும் பங்கில்லையா..? ராஜா’வின் டீல்’கள் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாதா…?
கொள்ளையடிக்காமலா இவ்வளவு பொறியியல் கல்லூரிகள்.. திருவாளர்கள் பொன்முடி…? எ.வ…? ஆற்காடு…?
மா.சு..?
துரதிருஷ்டவசமாக, இவர்களை எதிர்க்கேள்வி கேட்கும் அளவிற்கு இன்றைய அதிமுக தலைவர்கள் யாரும் சுத்தமாக இல்லை…!!!
நம்மைப் போன்ற பொது மனிதர்கள் கேட்டால் தான் உண்டு.
தமிழ் நாட்டில் – அடித்தட்டு மக்களுக்கு, குறிப்பாக
ஏழைப்பெண்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், படிக்கும் வயதிலுள்ள சிறுவர், சிறுமிகளுக்கும் – அவரைப்போல் பார்த்து பார்த்து, அக்கறையுடன் உதவி செய்தவர்கள் வேறு யாருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கட்சிசார்பில்லாமல் யோசிக்கும் மனசாட்சியுள்ள மக்கள் உண்மையை உணர்வார்கள்…. ரஜினி பேசிய சில வார்த்தைகள் சத்தியமானவை.
அதே உணர்வில் தான் நானும் இதை எழுதுகிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றியும், பாராட்டுகளும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
‘நீங்கள் எழுதியது எனக்கு உத்ஸாகத்தைத் தருகிறது கா.மை சார்.
நான் எழுதியது மிகக் குறைவுதான். அவர், தனிப்பட்ட நம்பிக்கைகளில் விளையாடியதில்லை. அவர் கோவில், கடவுள், பக்தி இவைகளை நம்பினார், அதற்காக, ‘கடவுள் மறுப்பாளர்களை’ வெறுத்ததில்லை. அவர்களுக்கும் அவர் முதல்வராக இருந்தார். ‘இந்து மதம் தான் உயர்ந்தது’ என்றும் சொல்லவில்லை, சிறுபான்மையினர்தான் மிக உசந்தவர்கள் என்று வாக்குக்காக, எலும்பில்லா நாக்கை வைத்து வருடிக்கொடுத்ததுமில்லை. (இங்குதான் ‘இந்து என்றால் திருடன்’ என்று வாக்குகளுக்காக நரம்பில்லாமல் பேசியவர் ஞாபகத்துக்கு வருவார்). ஜெ.தான் 69% இட ஒதுக்கீட்டை, சட்டபூர்வமாக்கியவர். அதற்காக ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று அவரது எதிரிகளால் பாராட்டுப்பத்திரம் வாசிக்கப்பட்டவர்.
நிறைய விஷயங்களைப் படித்தும் பார்த்தும், உணர்ந்தும், அனுமானித்தும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்கிறேன். மோடி அவர்கள், ஜெ. அவர்களுக்குச் செய்தது அநீதி. (ராகுல் கூட ஆச்சர்யமாக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்). கருணானிதியை, 2ஜி தீர்ப்புக்கு முன்பு சந்தித்தது மோடி அவர்களுடைய தனிப்பட்ட யோக்கியதாம்சத்தைப் புரிந்துகொள்ள வைக்கிறது.
நீங்கள் எழுதியுள்ளவர்களைவிட, எழுத விட்டுப்போனவர்கள் அனேகம். டி.ஆர். பாலு, நேரு, வீரபாண்டி ஆறுமுகம், என்.கே பெரியசாமி/ராஜா, மு..க.அழகிரி (இல்லை.. தயா பொறியியல் கல்லூரி அவர் பையனுடையது)….. என்று லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். ‘கவிதை’, ‘அரசியல்’ மட்டும் செய்து 30 கோடி கணக்கு காண்பித்த கனிமொழியை விட்டுவிட்டீர்களே. வீட்டில் தோசை, வடை மட்டும் செய்துகொண்டிருந்த தயாளு அம்மையார் தொலைக்காட்சி உரிமம் 20% பங்கு (30 கோடிகளுக்குமேல்) பணம் சேர்த்ததை விட்டுவிட்டீர்களே.
நானும் ஜெயலலிதா என்ற ஆளுமையைப் பார்த்து அதிசயித்தவன்தான்.
ஆனால், திரு. கா. மை அவர்களும் , அவருடைய வலைப்பூவில் பின்னூட்டமிடுபவரும் , ஜெயலலிதா-வை (அவருடைய நல்ல குணங்களை ) புகழும் பொது , ஒரு குற்றவாளியை எப்படி நல்லவர் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று ஆச்சரியமாகவும், (வேதனையாகவும்) இருக்கிறது.
வேறென்ன சொல்ல, மறதி தேசிய வியாதி ஆயிற்றே !!!
இதுவரை எழுதப்பட்டுள்ளவை உங்களை
convince செய்யவில்லை என்றால்,
இனி உங்களுக்கு எத்தகைய விளக்கங்கள்
கொடுத்தாலும் பயன் இல்லை.
நீங்கள் உங்கள் புரிதலின்படியே தாராளமாக
இருந்து கொள்ளலாம்.
திரு கா. மை. ஐயா ,
நீதி மன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தண்டனையும் கிடைக்கப்பெற்ற “மக்களால் கொண்டாடப்படும் ஒரு நல்ல பெண்மணியை ” , நீங்களும் உங்களுடைய வலைப்பூவில் பின்னூட்டமிடுபவரும் புகழ்ந்து தீர்ப்பதுதான் எனக்கு வித்தியாசமாக படுகிறது.
உங்களுடைய கட்டுரையின் ஓரிடத்தில் கூட , “அவர் ஊழல் செய்ததற்காக தண்டிக்கப்பட்டவர், இருந்தாலும் அவருடைய நல்ல குணாதிசயங்களை மட்டும் எழுதுகிறேன் ” என்று நீங்கள் குறிப்பிடவில்லை.
எனவேதான், நீங்களும் எம்மைப்போல மறந்துவிட்டீரோ என்று என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
திரு. ஸ்டாலின், மற்றும்பிற குப்பை ஊழல் வாதிகளை பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தில் எனக்கும் உடன்பாடுதான். அதேவேளையில், ஜெயலலிதா அவர்களின் ஊழல் பக்கங்களை வசதியாக மறந்தது (மறைத்தது??) தான் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை .
என்னை “கன்வின்ஸ்” செய்ய முயற்சித்தமைக்கு நன்றி.
சுந்தர்,
// உங்களுடைய கட்டுரையின் ஓரிடத்தில் கூட , “அவர் ஊழல் செய்ததற்காக தண்டிக்கப்பட்டவர், இருந்தாலும் அவருடைய நல்ல குணாதிசயங்களை மட்டும் எழுதுகிறேன் ” என்று நீங்கள் குறிப்பிடவில்லை.
எனவேதான், நீங்களும் எம்மைப்போல மறந்துவிட்டீரோ என்று என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.//
விமரிசனம் வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கு, நான் ஜெயலலிதா அவர்களின் “மைனஸ்” பக்கத்தை பற்றியும் ஒரு காலத்தில் சொல்லி இருந்தது தெரிந்திருக்கும்.
உங்களுக்காக, நான் ஒவ்வொரு இடுகையிலும் அதைப்பற்றி எழுத முடியாது…
மேலும் துரோகத்தின் காரணமாக, பரிதாபகரமான முறையில் இறந்து போன ஒருவரின் நினைவைப்பற்றி எழுதும்போது நான் இதையெல்லாம் குறிப்பிட வேண்டுமென்று நீங்கள் நினைப்பதே அவலம்.
இதற்கு மேல் இதை வளர்க்க எனக்கு விருப்பமில்லை. எனவே,
மீண்டும் உங்களிடமிருந்து இதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை.
கே.எம்.சார்
புதியவன் சார்
இன்னும் நிறைய பேரை விட்டுவிட்டீர்கள்.
ஜெகத்தையே ரட்சிப்பவர் ஒருவர் இருக்கிறார்.
அப்புறம் கே.டி.பிரதர்ஸ் ?
ஒவ்வொரு மாவட்டத்தலைவரும் ஒரு சுல்தான் அளவிற்கு
சொத்து பத்து வைத்திருக்கிறார்களே அவர்கள் ?
கருணாநிதியார், அவரது மனைவியார், துணைவியார், ஸ்டாலினார், அவரது மகன் “தம்பி சார்”, மருமகன் “மாப்பிள்ளை சார்”
அழகிரியார், அவரது மகனார், திருமதி கனிமொழி ஆக இத்தனை பேர்
சொத்துக்களையும் மொத்தமாக கூட்டினால் எத்தனை கோடி வரும் ?
இவர்கள் எல்லாருமே என்ன பிசினஸ் பண்ணுகிறார்கள் ?
இத்தனை கோடி எப்படி வந்தது ? 5 தடவை முதலமைச்சராக இருந்தவர் சம்பாதித்தது தானே ?
பல கோடி மக்களால் நேசிக்கப்படுபவர், வாழ்க்கை முழுவதும் போராடி இறந்துவிட்ட ஒரு பெண்மணி, என்று கூடப்பார்க்காமல், ஆத்திரம், அசூயை, பொறாமை அத்தனையும் கொண்டு ஸ்டாலின் ஏசுவதை தமிழ்நாட்டு பெண்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் யாராவது ஸ்டாலினுக்கு அடுத்த தடவை ஓட்டு போடுவார்களா ? திமுக கட்சிக்காரர்களின் வீட்டு பெண்கள் கூட போட மாட்டார்கள். அடுத்த தேர்தல் வந்தால் தெரியும். ஸ்டாலினுக்கு போன தடவை விழுந்த ஓட்டு கூட விழாது.
என் வீட்டில் ரஜினி பேசுவதை போட்டுக் காட்டினேன். 2 வயதில் தந்தையை இழந்து, 22 வயதில் தாயை இழந்து, எத்தனை அழகு, எத்தனை புகழ் அப்படியும் ஒரு கல்யாணமோ, குடும்ப வாழ்க்கையோ அமையாமல் –
என்று ரஜினி சொல்லும்போது என் வீட்டில் அழுது விட்டார்கள்.
எனக்கு கூட கலங்கி விட்டது.
நீங்கள் மனம் விட்டு இவ்வளவு எழுதியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் எதிர்பார்க்கவே இல்லை நீங்கள் இவ்வளவு தூரம் எழுதுவீர்களென்று. சத்தியம் உங்களை எழுத வைக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தப்படம் தூக்கி எறியப்படும் என்று துரைமுருகன்
வேலூரில் பேசி இருக்கிறார்.