…
…


…
இன்று நாம் இருக்கும் நிலை தான் ஜனநாயகத்திற்கு
கொடுக்க்கப்படும் விலை என்றால் –
இந்த ஜனநாயகத்தால் நமக்கு என்ன பயன் ?
இத்தகைய ஜனநாயகம் தான் நமக்கு எதற்கு ?
இந்த 70 ஆண்டுக்கால அனுபவம் நமக்குப் போதாதா ?
இன்னும் எத்தனைக் காலம் இந்த ஏமாற்றும்
அரசியல்வாதிகளையும், ஊழல் சக்திகளையும்,
மக்களை சுரண்டிக் காசு பண்ணும்
பெரும் பண முதலைகளையும்
அனுமதித்துக் கொண்டிருக்கப் போகிறோம் ?
அனைவருக்கும் வயிறாற உணவு,
இருக்க ஓரளவு வசதியான இருப்பிடம்,
உடுக்க உருப்படியான உடை,
அனைவருக்கும் முழு மருத்துவக் காப்பீடு,
அனைவருக்கும் தரமான கல்வி,
தேவைப்படும் துறைகளில் தொழிற்கல்வி,
மருத்துவக் கல்வி,
பாதுகாப்பான குடிதண்ணீர்,
சுகாதார வசதிகள்,
தரமான சாலைகள்,
நல்ல போக்குவரத்து வசதி,
அனைவருக்கும் வேலை வாய்ப்பு,
ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகம்,
உழைப்புக்கும், திறமைக்கும் தகுந்த பலன்.
இவற்றை ஒரு அரசால் தன் மக்களுக்கு
கொடுக்க முடியாதா ? அப்படி கொடுக்கக்கூடிய
அரசு தானே நமக்குத் தேவை ?
அது ஜனநாயகமாக இருந்தால் என்ன –
வேறு எதுவாக இருந்தால் தான் என்ன ?
இது வெறும் கனவு தான் –
உலகில் எந்த நாட்டில் நடக்கும் என்கிறீர்களா ?
ஆகஸ்ட் 9, 1965 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம்
பெற்ற ஒரு நாடு.
மொத்த ஜனத்தொகை – 57 லட்சம் தான்.
ஆனால் உலகின் 4வது மிகப்பெரிய நிதிச்சந்தையாக
உருவெடுத்துள்ள நாடு அது. விவசாயம் பண்ண காணி நிலம்
கூட கிடையாது. குடிதண்ணீர் கூட பக்கத்து நாட்டிலிருந்து
தான் இறக்குமதி செய்ய வேண்டும் என்கிற நிலைமையில்
இருந்த ஒரு நாடு.
ஆனால் –
இன்று தனி நபர் வருமானத்தைப் பொருத்தவரையில்
உலகின் மூன்றாவது முன்னணி நாடு.
உலகின் மிகவும் பிஸியாக உள்ள 5 துறைமுகங்களில்
இதுவும் ஒன்று.
ஊழலற்ற நிர்வாகத்தில் உலகில் 7-வது இடம்
( டென்மார்க், நியூசிலாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடன், ஸ்விஸ்,
நார்வே – சிங்கப்பூர் ) இடத்தைப் பெற்றுள்ள நாடு இது.
மிகவும் உறுதியான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு.
கண்டிப்பான,வெளிப்படையான காவல்துறை செயல்பாடு.
1987ல் முதல் முறையாக இந்த நாட்டிற்குச் சென்ற
நான் – நள்ளிரவு 2 மணிக்கு நான் தங்கியிருந்த
அடுக்குமாடி கட்டிடத்தின் 12வது மாடியிலிருந்து
வெளியில் ஜெகஜ்ஜோதியாகத் தெரிந்த ஊரை
பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வெளியே நீண்ட நெடுஞ்சாலையில்,
போக்குவரத்து எதுவும் இல்லாத நிலையில்,
காந்திஜி சொன்னது போல் – நிஜமாகவே
எந்தவித அச்ச உணர்வும் இன்றி ஒரு இளம்பெண்
தன்னந்தனியே நடந்து போய்க் கொண்டிருந்தாள்.
இது எப்படி முடிந்தது ?
குற்றவாளிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு
முடக்கப்படுவது, விரைவான விசாரணை,
நேர்மையான நீதித்துறை –
ஆசியாவிலேயே நீதித்துறையில் முதல் இடத்தைப்
பெற்றுள்ள நாடு. கசையடி முதற்கொண்டு, தூக்கு தண்டனை
வரை கடும் தண்டனைகளை இன்றும் தயவு தாட்சண்யம்
இன்றி நிறைவேற்றும் ஒரு நாடு.
இந்த நாட்டில் குற்றம் புரிய எத்தனை பேருக்கு
துணிவு இருக்கும் …?
அனைத்து மதத்தினருக்கும்,
அனைத்து மொழியினருக்கும்,
ஒரே விதத்தில் சமமான இடம் அளித்திருக்கும் ஒரு நாடு.
உலகில் உள்ள ஒவ்வொருவரும் இங்கு வந்து
குடியிருக்க ஆசைப்படுவார்கள்.
இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று ?

தன்னலம் கருதாத ஒரு தலைமை –
நாட்டின் எதிர்காலத்தையும்,
மக்களின் நலனையும் மட்டுமே
தன் உயிர்மூச்சாக, லட்சியமாகக் கொண்டு
செயல்பட்ட ஒரு மிக உறுதியான,
கண்டிப்பான தலைமை
லீ குவான் யூ என்கிற பிரதமரின்
உருவத்தில் கிடைத்ததால் தான்.

ஒரு கட்சி ஆட்சி முறை தான் சிங்கப்பூரில் இருப்பது.
அதை கட்டுப்படுத்தப்பட்ட(controlled) அல்லது
மட்டுப்படுத்தப்பட்ட(limited) ஜனநாயகம்
என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் அதை
விவரிப்பது வழிகாட்டப்பட்ட ஜனநாயகம்
(guided democracy )என்று.
நான் முதல் முறை சென்றபோது –
30 ஆண்டுகளுக்கு முன்னர் –
( அப்போது லீ குவான் யூ பிரதமராக இருந்தார்- ஒரு முறை
அவரை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் பாக்கியமும்
கிடைத்தது )
விவரம் தெரிந்த சிலரிடம் –
மிகவும் ஆர்வமாக அவர்களது system பற்றி
விசாரித்து தெரிந்து கொண்டேன்.
பொதுச் சேவையில் விருப்பம் இருப்பவர்கள்,
கட்சியில் சேருகிறார்கள். ஓரளவு மேல் நிலைக்கு
வந்த பிறகு நிர்வாகத்தில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
தங்களை நிரூபித்தால் – தொடர்ந்து பெரிய பொறுப்புகள்
கொடுக்கப்படுகின்றன.
லீ தன் டீமைத் தேர்ந்தெடுத்த விதமே தனி ரகம்.
தலைமையை புகழ்ந்து பேசுவது, ஜால்ரா அடிப்பது,
கட்சியில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வது
போன்ற வழக்கமான முறைகள் எல்லாம் இவரிடம்
பலிப்பதில்லை.
ஓரளவிற்கு நம்பிக்கை கொடுப்பவர்களை நேரில்
அழைத்து விவாதிக்கிறார். நாட்டு மக்கள் மற்றும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி,
மற்றும் வாழ்க்கை முறையை –
மேம்படுத்த அவர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது
என்று கேட்கிறார்.
அவர்களால் நிறைவேற்ற முடியும் என்று தோன்றுகிற
ஒரு project பற்றி ஒரு report -ஐ
தயார் பண்ணிக் கொடுக்கச் சொல்கிறார்.
project அவருக்கு திருப்தியாக இருந்தால் –
அந்த நபரை அமைச்சராக நியமித்து –
அந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை
அந்த நபரிடமே கொடுக்கிறார். குறிப்பிட்ட காலத்தில்,
திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் –
அந்த நபரிடம் அடுத்த project report
கேட்கப்படுகிறது / பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றால் –
அடுத்த கணமே அந்த நபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.
அடுத்தவருக்கு வாய்ப்பு தரப்படுகிறது.
லஞ்சம், ஊழல், காண்ட்ராக்ட், கமிஷன் – எதுவும்
மூச்சே விட முடியாது.
அவரது கேபினட் மீட்டிங் எல்லாம் கம்பெனிகளின்
board of directors meeting போலவே இருக்கும் என்பார்கள்.
அவ்வப்போது சம்பந்தப்பட்ட அமைச்சருடன் அவரது
ப்ரொஜெக்ட் -ல் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து
விசாரித்து தெரிந்து கொள்வார்.
மிகச்சிறந்த, வெளிப்படையான,
கண்டிப்பான நிர்வாகம்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுக்காலத்தில் (1965-1990),
லீ குவான் யூ அவர்களின் நேரடி நிர்வாகத்தில்,
உலகில் மிகச்சிறந்த நாடாக சிங்கப்பூர் உருவானது.
அவரால் வழிகாட்டப்பட்டு, தயார் செய்யப்பட்ட
கோ சோக் டோங் அடுத்த 14 ஆண்டுகளுக்கு
(1990-2004) பிரதமர். இந்த கால கட்டத்தில் லீ –
பிரதமர் என்கிற பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டாலும்,
சீனியர் மினிஸ்டர் என்கிற பொறுப்பில் பார்வையாளராக
கூடவே இருந்து வழி நடத்தினார்.
உலகில் மிகச்சிறிய நாடாக,
வெறும் அரைக் கோடி மக்கள் மட்டும் இருந்தும்
மிகச்செழிப்பாக
வளர்ந்துள்ள சிங்கப்பூரையும் பார்த்தோம்.
மிகப்பெரிய நாடாக, மிக அதிக மக்கள் தொகை
-144 கோடி -கொண்ட நாடாக இருந்தும்,
பிரம்மாண்டமாக முன்னேறியுள்ள
சீனாவையும் பார்த்தோம்.
பூகோளத்தில் இடவசதியோ,
மக்கள் தொகையோ – ஒரு நாட்டின்
வளர்ச்சிக்கு துணையாக இருக்கலாம்.ஆனால்
இந்த நாடுகள் வளர்ந்துள்ளதற்கு காரணம்
-அவை மட்டுமே அல்ல.
அதுவும் ஒரு காரணம் -அவ்வளவே !
அர்ப்பணிப்புடன் பணியாற்றும் உன்னதமான
தலைமை தானே இவற்றின் அடிப்படை.
என்று கிடைக்கும் நமக்கு அத்தகைய ஒரு தலைமை…???
பின் குறிப்பு –
இந்த வலைத்தளம் சிங்கப்பூரிலிருந்து நிறைய வாசக
நண்பர்களை கொண்டிருக்கிறது….. நான் சிங்கப்பூர் போய்வந்து நிறைய வருடங்களாகி விட்டன…
தற்போதைய சிங்கப்பூரைப் பற்றிய விசேஷ செய்திகளை
சிங்கப்பூர் நண்பர்கள் யாராவது சொல்ல விரும்பினால், பின்னூட்டங்களில் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நானும் மாற்றங்களை, வளர்ச்சியை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.



Dear K M Sir, I am working in Singapore for 7 years. Apart from what you said, there are no waste
left and every waste is recycled including the sewage and converted into reusable material. You can find dust bin in every public places. The environment regulation is very strict and every one is accountable. The government makes planning and implementing projects with forecasting the next 30 to 50 years growth in mind. They forecast manufacturing can not be sustainable and hence developed services industries (i.e tourism, medical education etc).The police and judiciary is very transparent and and every criminal/civil cases are investigated and adjudicated in shortest time.Almost 90% cases are completed 3 to 4 months. If any one goes for appeal and the crime is proved the punishment will be more than what the lower court given in most of the cases and therefore you can see cases going for appeal is less
You can see there are many constructions ongoing everywhere but the public are never inconvenienced and safety of every one is given utmost importance. and every vehicle coming out from the construction site is washed with water before entering the public roads. Every road is having separate walk ways for pedestrian and cycle ways for cyclist.
The personal tax is very nominal and GST is only 7%. No GST for groceries and foods served in the food courts (small eatery shops).
This is what the difference the “Leadership” makes.
நண்ப பகவான்,
உங்களின் விவரமான பின்னூட்டத்திற்கு நன்றி.
நம் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள,
செயல்படுத்த நிறைய இருக்கிறது…
நிதி ஒரு பொருட்டே அல்ல…
இன்று நிதி ஆதாரத்திற்கு எத்தனையோ வழிகள் உண்டு….
ஆனால், மக்களுக்கு உண்மையாக உழைக்க வேண்டும்
என்கிற உணர்வு தான் இவர்களிடம் இல்லை.
நான் 3 தடவை சிங்கப்பூர் வந்திருக்கிறேன்.
ஆனாலும் நீண்ட நாட்கள் ஆயிற்று….!
மனிதர் வாழ விரும்பும் அற்புதமான ஒரு இடம்.
இறைவன், இயற்கை அனுமதித்தால் –
போவதற்குள் இன்னும் ஒரு முறை வர ஆசை…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அடுத்த முறை சிங்கை வரும்போது தெரியப்படுத்தவும் ஐயா, தங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கிறேன்
ரமேஷ்,
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
2004ல் அங்கு சென்றேன். கிளம்பும் அன்று காலை 3 மணி டாக்சியில் ஏறினேன். ஓட்டுநரிடம், சிங்கப்பூரின் மெர்லின் சிலையை மட்டும் காணவில்லை, மிஸ் பண்ணிவிட்டேன் என்றேன். மழைத் தூரல். டிரைவர் ஏர்போர்ட் போகும் முன்னால் 10 நிமிடம் அந்த இடத்தின் வழியாகச் சென்று, வண்டியை நிறுத்தி அதிகாலையில் பார்க்கச்செய்தார் ஏர்போர்டில் என்ன சொல்லியும் அதிகமான காசு (மீட்டரில் சுற்றிப் போனதால் இவ்வளவு அதிகம். அஅதைக்கூட குறைத்துவிட்டுக் கொடுங்கள் என்று சொல்லி) வாங்க மறுத்துவிட்டார். அரசு கண்காணிப்பு உண்டு. இயல்பாக டூரிஸ்டை ஏய்க்கும் போக்கு கிடையாது (நம்ம நாட்டில் கடவுள் படம், பூஜை, ஊதுபத்திக்குக் குறைச்சல் இல்லை, ஆனால் பெரும்பான்மையிடம் நேர்மை இல்லை)
வணக்கம் கா. மை அய்யா,
நான் கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். இங்கு உள்ள காவல்துறை பற்றி நான் குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் எங்கள் அலுவலகத்தின் வெளியில் உள்ள ஒரு சின்ன குடிலில் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். காவல் வாகனம் ஒன்று அருகில் உள்ள சாலையில் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு காவல்துறை அதிகாரிகள் வந்தனர். நாங்கள் அமர்திருந்த குடிலின் அருகில் வந்து எங்களிடம் பேச ஆரம்பித்தார். அப்படி ஆரம்பிக்கும்போதே மன்னிப்புடன் ஆரம்பித்தார். “இந்த உணவு இடைவெளி நேரத்தில் உங்களிடம் பேசுவதற்கு மன்னிக்கவும், நாங்கள் எங்கள் கடமையை செய்ய வேண்டும்,(continuing in english) there are so many phone scams happening in Singapore calling the EP holders, but MOM won’t do that normally, if you’ve ever get calls, please ignore and don’t engage them. We’re trying to trace out the people who are doing it. We’re creating awareness about it. Please pass this notice to your friends in your office as well via Whatsapp. Sorry to bother you during your Lunch time” என்று கூறிவிட்டு தன்னிடம் இருந்த துண்டு பிரசுரங்களை அங்கே இருந்த ஒவ்வொருவரிடமும் கொடுத்தார்.
நம்ம ஊர்ல ஒரு காவல் துறை அதிகாரி பொதுமக்கள் கிட்ட இப்படி பேசுவாரா?
நாம் எதாவது ஒரு அரசாங்க அலுவலகத்திற்கு சென்றால் (குறிப்பாக முதியவர்களாக இருந்தால்) அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் வேலை முடியும் வரை ஒருவர் வழிகாட்டிக்கொண்டு இருப்பார்.
எனது மனைவி குழந்தைகள் நள்ளிரவில் கூட தைரியமாக வெளியில் சென்று வர முடியும்.
இன்னும் நிறைய எழுதலாம்…
இதெல்லாம் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு”
ரமேஷ்,
இப்படித்தான் சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்கள் அனைவருமே
ஒரு நிறைவான உணர்வுடன் எழுதுகிறார்கள்.
நீங்கள் பெறும் நிறைவு, இந்தியாவில் – குறைந்த பட்சம் தமிழகத்தில் –
வாழ்பவர்களுக்கும் கிடைக்க வேண்டுவோம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்