100 ஆண்டுகளுக்கு முன் – மாமியார்களால் நிர்வகிக்கப்பட்ட மருமகள் -களுக்கான “ஜிம்” …!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to 100 ஆண்டுகளுக்கு முன் – மாமியார்களால் நிர்வகிக்கப்பட்ட மருமகள் -களுக்கான “ஜிம்” …!!!

  1. இளங்கோ சொல்கிறார்:

    ஓ – இந்த angle-ல கூட இதை பார்க்கலாமா. fine sir.

  2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    பார்வையின் கோணத்தை மாற்றினால் உண்மைகள் வெளிப்படும்!!

  3. சிவம் சொல்கிறார்:

    நினைத்தாலே கசக்கும் –
    ஒரு காலத்தில் இந்த ஜிம் சித்திரவதை கூடமாக இருந்தது.
    டெக்னாலஜி படிப்படியாக கிச்சனுக்குள் வந்ததோ,
    பெண்கள் பிழைத்தார்கள்.
    இன்றைய தலைமுறை பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் 🙂

    • ஸ்ரீனிவாசன் சொல்கிறார்:

      உங்கள் கருத்து மேலோட்டமான பார்வை என்றே கருதுகிறேன்

      அன்று

      அனேகம் ஆண்கள் உடல் உழைப்பில் சம்பாத்தியம் இருந்தது
      அதேபோல் பெண்களுக்கும் உடல் உழைப்பில் வீட்டு வேலைகள் இருந்தன.

      இன்று அது அப்படியே தலைகீழாக மாறி

      அனேகம் ஆண்களுக்கு உடல் உழைப்பில்லாத மூளைக்கு வேலை தரக்கூடிய சம்பாத்தியம் இருக்கிறது. அதைத்தான் விரும்புகிறார்கள்

      அதேபோல் பெண்களுக்கும் வீட்டு வேலைகளும் உடல் உழைப்பில்லாததாக
      மாறிவிட்டன.

      அதற்கு தகுந்தார்போல் நம் உடலும், சாப்பிடும் உணவும் சத்தற்றதாக, சத்து குறைவானதாகிவிட்டது.

      விளைவு:
      சுகப்பிரசவங்கள் குறைந்தது முதல் பல்வேறு பிரச்சனைகள்.

      சுகப்பிரசவங்களை விடுங்கள், படிக்கும் ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்தவர்களில் எண்ணிப்பாருங்கள், எத்தனை தம்பதிகள் திருமணமாகி பலவருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கிறார்கள்

    • தமிழன் சொல்கிறார்:

      இன்றைய தலைமுறைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கொடுத்துவைத்தவர்கள்தான். இல்லாட்டா சுலபமா ஆண்களும் தங்களுக்குத் தேவையான உணவை குறைந்த அவகாசத்தில் தயாரித்துக்கொள்ள இயலுமா?

      டெக்னாலஜியால், மனிதர்களின் ஆரோக்கியத்துக்குக் கேடு வந்துவிட்டது என்பது அர்த்தம் இல்லாதது. அப்படி எண்ணுபவர்கள், அந்தக் காலத்தில் சமையல் (அதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இன்னும் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்) என்பது எவ்வளவு கஷ்டமானதாக இருந்தது என்பதை அனுபவிக்காதவர்கள்.

      இப்போது உடலுழைப்புச் சார்ந்த பணியில் இல்லாதவர்கள், வேறு வழியில்லாமல் ஜிம்முக்குப் போகவேண்டியுள்ளது (இல்லைனா நடைப் பயிற்சிக்கு) இதன் காரணம், உண்ணும் உணவின் அளவு (சக்தி) அபரிமிதமாக ஆனதுதான். 70கள்ல, டிபன் என்பதே எப்பவாவது அல்லது மிஞ்சிப்போனா ஒரு வேளைதான் (அதுவும் இட்லி போன்றவைகள்தான். பூரி மசால் போன்றவை டிபனாக வருவது ரொம்ப ரொம்ப அபூர்வம்). சாதம், காய், குழம்பு என்று பெரும்பாலானவர்களின் உணவு. அடுத்த வேளை, மோர் சாதம். இனிப்பு சாப்பிடுவது, குளிர்பானங்கள், ஃப்ரிட்ஜ், எதுவும் எப்போதும் கிடைக்கும் என்ற உணவு மாற்றம்தான் பிரச்சனைகளுக்குக் காரணம்.

      • தமிழன் சொல்கிறார்:

        ஸ்ரீனிவாசன் – அந்தக் காலங்கள்ல (70கள் வரை) இருந்த பிரச்சனை,
        1. வீடுகளில் பெரும்பாலும் கழிவறை கிடையாது. எல்லோரும் ஆற்றங்கரைகளுக்குத்தான் செல்லவேண்டும்.
        2. தண்ணீரை தினமும் அங்கிருந்துதான் கொண்டுவரவேண்டும். பெரும்பாலும் இது பெண்களின் வேலை.
        3. விறகு அடுப்பு. கொஞ்சம் மண்ணெண்ணெய் உபயோகப்படுத்தி எரிக்க. ஒரே புகை. அதுல வேற, களிமண்ணுல செஞ்ச அடுப்பு.
        4. குளிர்சாதனப் பெட்டி கிடையாது. ஒரு நாளைக்கு ஒரு முறை டிபன் (இருக்கலாம்), ஒரு முறை சூடான சாப்பாடு. அடுத்த வேளைக்கும், பல சமயங்களில் அடுத்த நாள் காலையும் மோர் சாதம்.
        5. அப்பளாம் போன்றவை தயாரிக்கணும்னா, ஊர்ல அக்கம்பக்கத்துல இருக்கற வயதானவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்துகொடுப்பார்கள்.
        6. ஒரு விசேஷம்னா, ஊர்ல நிறையபேர் வந்து உதவுவார்கள் (சமையல் முதல்கொண்டு)
        7.ஸ்கூலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு எவனும் எங்கயும் போகமுடியாது. ஊர்ல இருக்கற ஒருத்தனுக்கு விஷயம் தெரிஞ்சதுனா உடனே பரவிடும். பசங்களையும் வாத்தியாரிடம் முழுவதுமாக ஒப்படைப்பார்கள்.

        சுகப்பிரசவத்தையும், குழந்தையின்மையையும் உழைப்போடு ஒப்பிடக்கூடாது. இரண்டு பிரச்சனையும் எந்தக் காலத்திலும் இருந்தது. அப்போது அவ்வளவு பெரிய இஷ்யூவாக குழந்தை இறப்பு இருந்ததில்லை. (அதாவது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு காலம் இல்லை). குழந்தை இன்மையும் நிறையபேரிடத்தில் இருக்கத்தான் செய்தது.

        கூட்டுக்குடும்பம், ஊரோடு இயைந்த சூழல், எல்லாவற்றிர்க்கும் ஊர் கூடுவது போன்றவைகளை இப்போது இழந்துவிட்டோம். அப்போ, ஒருத்தன் அவன் மனைவியை வெளியே அடித்தால், ஊர்கூடிப் பஞ்சாயத்து வைத்துவிடும். இப்போ எதுத்த பிளாட்டில் இருப்பவன் யார் என்றே தெரியாமல் வாழ்க்கை முழுவதும் கடந்துவிடுகிறோம்.

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          தமிழன்,

          மிக அழகாக அந்தக் காலத்தை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

        • ஸ்ரீனிவாசன் சொல்கிறார்:

          — அழகான அருமையான ஒப்பீடு

          ஆனால் “சுகப்பிரசவத்தை உழைப்போடு ஒப்பிடக்கூடாது” என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. மன்னிக்கவும்.

          • தமிழன் சொல்கிறார்:

            வெகு நாட்களுக்குப் பின் யதேச்சயாக உங்கள் பின்னூட்டம் கண்டேன். வாத்த்துக்காக கருத்து எழுதவில்லை.

            சுகப்பிரசவம் என்ற ஒன்று myth. அப்படி ஒன்று இல்லை. சிசேரியனோ, நேசுரலோ, பிரசவம் என்பது ரொம்ப ரிஸ்க், கடுமையான வேதனை பெண்களுக்கு. வயல்களில் வேலை பார்த்துக்கொண்டு, வலி வந்தபின் கூட வேலை செய்பவர்களின் துணையோடு மரத்தின் நிழலில் பிரசவம் கண்டவர்கள் பலருண்டு. குழந்தை வயிற்றில் பிரண்டுவிட்டது என்று வயதான கிழவிகள் (அனுபவமுடையதாக) பிரசவம் பார்த்த நிலையுண்டு.

            புகுந்த வீட்டில் கடைசி வரை வீட்டு வேலையும் பார்க்கவேண்டிவருமே, வாயக்கு சுவையான உணவு கிடைக்காதே என்ற கவலையினால்தான் ஏற்பட்டது 6-7 மாதமானபின் தாய்தந்தை வீட்டிற்கு சென்று பிரசவம் ஆனபின் குழந்தையோடு திரும்பும் வழக்கம். “உழைப்பு” என்பது ஒரு காலத்தில் (100 வருடங்களுக்கு உள்ளாக), பெண்களுக்கு கடுமையாக ஆகிவிட்டது. நான் தொலைக்காட்சி தொடர்கள் காலங்களுக்கு முந்தைய காலத்தைச் சொல்கிறேன். மதியம் இரண்டு மணி நேரம் ஓய்வு கிடைத்தால் அபூர்வம். வாய்க்கு வக்கணையாகச் சாப்பிடும் சமூகங்களில் உணவு தயாரிப்பு, வீட்டு பராமரிப்பு, குழந்தைகள், வயதானவர்களைப் பார்த்துக்கொள்ளுதல் என்று ஓய்வில்லாத உழைப்பு. மற்ற சமூகங்களில் பெண்களும் வயல் வெளியில் உழைப்பு, கடைகளுக்கான உழைப்பு, அதுதவிர வீட்டுப்பராமரிப்பு.

            கா.மை.சார் சில பொருட்களை மட்டும் காட்டியுள்ளார். உருளி, அண்டாத, அகப்பல், நெல் வேகவைத்து அரிசியாக்கும் பாத்திரங்கள் போன்ற பலவற்றைப் போடவில்லை.

            ஓரளவு சொல்லியுள்ள காலத்தின் கடைசிப் பகுதியைப் பார்த்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன், சுகப்பிரசவத்திற்கும், அடிமை போன்ற உழைப்புக்கும் சம்பந்தமில்லை.

            Rudeஆச் சொன்னால், சேரிகளில் சாக்கடை, குப்பை சூழலில் வாழ்பவர்களை எளிதாக நோய்கள் தாக்குவதில்லை. சுகமாக நல்ல சூழலில் இருப்பவர்களை அடிக்கடி ஜலதோஷம் முதற்கொண்டு தாக்குகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.