
டாக்டர் சு.சுவாமி ஒரு வாரம் முன்பாக,
ஒரு கிரிமினல் புகார் கொடுத்திருக்கிறார்…
பிரதமர் மோடிஜிக்கு விலாசமிட்டு, புலன் விசாரணை
அமைப்புகளுக்கும் இதன் நகலை அனுப்பி இருக்கிறார்…
இதில் CBI மற்றும் Enforcement Directorate நடவடிக்கை
எடுக்கத்தவறிய சில விஷயங்களை
பட்டியல் போட்டிருக்கிறார். இதற்கு மேலும் மேற்கண்ட
ஏஜென்சிக்கள் முறையான விசாரணையை
தீவிரப்படுத்தவில்லை என்றால், நீதிமன்றத்திற்கு செல்வது
அவரது அடுத்த உத்தேசம் என்று தெரிகிறது….
தன்னுடைய புகாரில் அவர் சொல்வது – சுருக்கமாக….

1) NDTV யின் முக்கிய பங்குதாரர்களான,
திருவாளர்கள் பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய்,
பர்கா தத் விக்ரம் சந்திரா மற்றும் சோனியா சிங் ஆகியோர்
மீது, பங்கு வர்த்தக முறைகேடுகள், அந்நியச் செலாவணி
முறைகேடுகள், முறையற்ற வழியில் பணம் பெற்றது
ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக உடனடியாக CBI மற்றும்
Enforcement Directorate Directorate விசாரணைக்கு
உட்படுத்தப்பட வேண்டும். முன்னாள் நிதியமைச்சர்
திருவாளர் ப.சிதம்பரம் அவர்களுக்கு மிக நெருக்கமான
சில அதிகாரிகள், கிரிமினல் குற்றச்சாட்டுகளிலிருந்து
இவர்கள் சுலபமாக தப்பி விட உதவியாக இருக்கிறார்கள்…
2) 2ஜி அலைவரிசை வழக்குக்கு தொடர்புடைய ஏர்செல்-
மேக்ஸிஸ் நிறுவனத்திடமிருந்து, இவர்களுக்கு
சட்டவிரோதமான முறைகளில் ( ஒரு முறை 2030 கோடி
ரூபாயும், மற்றொரு முறை 640 கோடியும்…)
பணம் கைமாறி இருக்கிறது. NDTV நிறுவனம் லண்டனில்
நிறுவியுள்ள அதன் துணை நிறுவனமான
NDTV Networks PLC (NNPLC) மூலம் இந்த பரிமாற்றங்கள்
நிகழ்ந்திருக்கின்றன. அதன் முக்கிய பங்குதாரர்களும்
இதே நபர்களே…
3) கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு 3 முதல் 7 ஆண்டு
வரை சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றங்களிலிருந்து
அவர்களை நழுவ விட்டு விட்டு,
மிகச்சாதாரண, வெறும் அபராதத் தொகை மட்டுமே
விதிக்கப்படக்கூடிய arbitration விதிகளின் கீழ்
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது….
– இந்த வகையில் போகிறது புகார்….
டாக்டர் சு.சுவாமி, பிரதமருக்கு எழுதிய
ஆகஸ்ட் 10-ந்தேதியிட்ட கடிதத்தின் நகல் கீழே –






NDTV reply to Swami’s allegations.
http://www.ndtv.com/press-release/the-lies-of-subramanian-swamy-1442886
ஸ்ரீநி,
NDTV விளக்கத்தை நானே அடுத்த பதிவில்
போடுவதாக இருந்தேன். நீங்களே கவனித்து
போட்டு விட்டீர்கள்… நன்றி.
NDTV விவகாரத்தில் இன்னும் கொஞ்சம்
விஷயங்கள் தெளிவாகாமல் இருக்கின்றன.
கொஞ்சம் போகட்டும்… விவரங்கள்
தெரிய வரக்கூடும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்