.
.
ஆளும் வளரணும்… அறிவும் வளரணும் …
வயது ஏற ஏற சிந்தனையில் ஒரு முதிர்ச்சி,
செயலில் ஒரு பக்குவம்
அனேகமாக எல்லாருக்கும்,
முக்கியமாக பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களுக்கு – வரும்….
வர வேண்டும்…!
ஆனால், எவ்வளவு வயதானாலும், சிந்திக்கும் விதத்திலும்,
செயலிலும், எந்தவித முதிர்ச்சியையும் காணவில்லை….
எம்.ஜி.ஆர்.அவர்களை திமுகவிலிருந்து வெளியேற்றி –
கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் ஆகியும், அன்றிலிருந்து இன்று வரை –
கலைஞரின் குணாதிசயங்கள் சற்றும் மாறவே இல்லை….
ஆனாலும் அதைப்பற்றி அவர்
சற்றும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.
இது பெரிய அதிசயம் தான்….!
எம்.ஜி.ஆர். அவர்கள் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டபோது.
திருவாளர் கருணாநிதியையும், திமுகவின் மற்ற தலைவர்களையும்
எதிர்த்து, தமிழகம் முழுவதும் தன்னிச்சையாக மிகப்பெரிய அளவில்
போராட்டங்கள் வெடித்தன. யாரும் குரலெடுத்து கூப்பிடாமலே
ஆங்காங்கே பெரும் அளவில் மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.
பஸ்கள் ஓடவில்லை. பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அந்த சமயத்தில் நான் தமிழகத்திற்கு வெகு தூரத்தில், வடக்கே
பணி புரிந்து வந்தேன். தொலைதொடர்பு வசதிகள் இப்போது போல்
அப்போது இல்லாததால், ஓரளவு விஷயங்கள் தெரிய வந்தாலும்,
நடந்த விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக, விவரமாக
தெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
வடக்கே இருந்தாலும், நான் சில தமிழ் வார இதழ்களுக்கு
சந்தா கட்டி வரவழைத்துக் கொண்டிருந்தேன்.
வார இதழ்கள் மூலம் ஓரளவு விவரங்கள் தெரிந்தன.
அண்மையில், இது குறித்து விஸ்தாரமாக, விவரமாக –
நடந்தவை அனைத்தையும் பற்றி, தேடித்தேடி படித்துக் கொண்டிருந்தேன்.
தினமணி வலைத்தளத்தில், இது குறித்த பழைய செய்தித்தாள்கள்
வரிசையாக கிடைத்தன. இருந்தாலும், நேரில் பார்த்தவர் யாராவது
விவரித்தால் – இன்னும் சுவையாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஒரு வார இதழில்,
எழுத்தாளர் கதிரவன் அவர்கள் இது குறித்து விவரமாக எழுதிய
ஒரு கட்டுரை கண்ணில் பட்டது.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின்னர்,
எம்.ஜி.ஆர் அவர்கள் பேசிய முதல் பொதுக்கூட்டமாகிய
காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் நடந்தது எப்படி என்பதை
விவரிக்கிறார் கதிரவன்.
மிக விருவிருப்பாகச் செல்லும் அந்த கட்டுரையை நீங்களும்
அவசியம் படிக்க வேண்டும் என்று விரும்பினேன் –
எனவே கட்டுரை கீழே –





எம்ஜியாருக்கும் கருணானிதிக்கும் உள்ள ஆதரவாளர்கள் கூட்டம் மிகவும் வித்தியாசமானது. கருணானிதி ஆதரவாளர்கள் பெரும்பாலும், திமுக கொள்கையின்பாலும், பெரியார்/அண்ணா வழிவந்தவர்களாலும் நிரம்பியது. ஆனால், எம்ஜியாரின் ஆதரவாளர்கள் அவரிடம் இருந்த எல்லையில்லா ஈர்ப்பினாலும், அவர் மிகவும் நல்லவர் என்று எப்போதும் நம்புகின்ற மக்களாலும், எளியவர்களிடம் அவர் கொண்டிருந்த எல்லையில்லா அன்பை நேசித்தவர்களாலும், கருணானிதி ஒரு தீய சக்தி என்பதை நம்புவர்களாலும் நிரம்பியது. அது வெறும் சினிமாக் கவர்ச்சி என்று சொல்பவர்கள் தவறாக அனுமானிப்பவர்கள்.
கருணானிதி, திமுகாவின் ஐவர் அணியில் இருந்ததில்லை. ஆனாலும் தன் சாதுர்யத்தால் கட்சித் தலைவரானார். (அவருக்கு யோக்கியதை, திறமை இருந்தது. அதை யாராலும் மறுக்க இயலாது. ஐவர் அணியில் இருந்தவர்களால் கட்சியை இவ்வளவு காலத்துக்குக் கொண்டுசென்றிருக்க முடியாது. தலைவராவதற்கு எம்ஜியாரின் ஆதரவும் அவருக்குக் கிடைத்தது). அவரிடம் பேச்சாற்றலும் ஓரளவு தலைமைப் பண்பும் இருந்திருந்தாலும், (அந்தக் காலகட்டத்தில்), அவர்தான் ஒரே தலைவர் என்ற நிலை இல்லை. அதை அடைவதற்காக அரசியல் விளையாட்டில் ஈடுபட்டார். அதில் தவறொன்றுமில்லை. ஆனாலும், எம்ஜியார் என்ற ஆளுமையுடன் அவரால் ஒத்துப்போயிருந்திருக்க முடியாது. அதற்கேற்றவாறு, கருணானிதியைப் பிடிக்காதவர்கள், பொதுவாகவே எம்ஜியார் பக்கம் செல்லத் தலைப்பட்டார்கள். அதை இயல்பாகச் செய்யமுடியாத கொள்கைப் பிடிப்புடன் கூடிய தலைவர்கள் (ஐவரணி மற்றும் அடுத்த வரிசையில் பலர்), அதனைச் சிறிது காலம் கழித்துச் செய்ய நேர்ந்தது. இதனால் பதட்டம் அடைந்த கருணானிதி, எம்ஜியாருக்குத் தொல்லை தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். (தன் பையனை எம்ஜியார் போலவே மேனரிசத்துடன் வேஷம் போடவைத்து, அதன்மூலம் எம்ஜியாரின் புகழைக் குலைக்கலாம், அவரின் முன்னேற்றத்தைத் தடுக்கலாம் என்பதுபோன்ற). இதில் உஷாரான எம்ஜியார், கருணானிதியின் தீய நோக்கத்தைப் புரிந்துகொண்டார். அதற்கேற்ற வியூகம் வகுத்தார். தான் செல்வாக்கு மிக்கவன் என்று கருணானிதிக்குக் காட்டத் தலைப்பட்டார். (கருணானிதியின் ஒரு கூட்டத்தில் வேண்டுமென்றே தாமதமாக வந்து, கருணானிதி பாதியில் பேச்சை நிறுத்தி, கூட்டத்தில் எம்ஜியாரின் ஆதரவாளர்கள் ஆரவாரம் அடங்குவதற்குக் காத்திருக்க நேரிட்டது) ஒரே உறையில் இரு வாள்கள் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கருணானிதி எம்ஜியாருக்கு இடைஞ்சல் செய்யத் தலைப்பட்டார். எம்ஜியாரும் கட்சிக் கணக்குக் கேட்டு கருணானிதியின் அடிமடியிலேயே கைவைத்துவிட்டார். எம்ஜியார் அப்போதே கருணானிதியின் ஊழல் செய்யும் நோக்கத்தை மக்கள் மத்தியில் புரிபடவைத்தார். இதைத் தாங்காத கருணானிதி, உடனே கருணானிதியைக் கட்சியை விட்டு வெளியேற்றினார். எம்ஜியார் மட்டும், கருணானிதியை மட்டும் கட்சிக் கணக்கைக் காட்டவேண்டும் என்று சொல்லி அதற்கேற்றவாறு செயல்பட்டிருந்தால் கருணானிதியைத் தனிமைப் படுத்தியிருக்கலாம். கருணானிதியின் நல்ல நேரம், எம்ஜியார், எல்லா மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சிக்கணக்கைக் காட்டவேண்டும் என்று சொன்னார். இதனால்தான் கருணானிதியிடம், கொள்கைப் பிடிப்புள்ளவர்களும், கெட்ட நோக்கம் கொண்டவர்களும் தங்கிவிட்டனர்.
கட்சியைவிட்டு விலக்கியபின், எம்ஜியாருக்குத் தன்னாலான எவ்வளவோ தொல்லைகளைக் கருணானிதி கொடுத்தார். அதில் முக்கியமானது “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தை வெளியிடவிடாமல் தடுத்தது. அப்போதே அவருக்கு அடிமைப் பெண், நாடோடி மன்னன் போன்ற படங்களின்மூலம், வெறித்தனமாக அவரை நேசித்த ரசிகர்களும், மக்களும் இருந்தனர்.
எம்ஜியார், முதலில் தாமரைச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார் (அல்லது முதல் தேர்தலில் திண்டுக்கல்லில் தாமரைச் சின்னம் கிடைத்ததா என்பது நினைவில்லை). 5வது அல்லது 4வதுபடிக்கும்போது, மற்ற சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு (1973/4?) பஸ்களில் கையால் எழுதிய தாமரைச் சின்னம் கொண்ட பேப்பரை ஒட்டியது ஞாபகம் வருகிறது (காரணம் அறியாமல், ஆனால் கூடப் படிப்பவர்களுடன் சேர்ந்துகொண்டு. இடம். பொன்னமராவதி அருகில் உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊர்).
1975ல் மக்கள் பஞ்சத்திலோ அல்லது கஷ்டத்திலோ இருந்தபோது, பல இடங்களில் அவர் பொதுக்கூட்டங்கள் நடத்தி, கஞ்சித் தொட்டியைத் திறந்தார். அதை ஆர்கனைஸ் செய்ததில் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் பங்கும் உண்டு. இத்தகைய கூட்டங்கள் மாலை 5 மணி என்று போட்டிருந்தாலும், ‘நள்ளிரவு 2 மணிக்குகெல்லாம் நடக்கும். மக்கள் விலகாமல் அவருக்குக் காத்திருப்பார்கள். அவருக்குக் காலம் புகழ் சேர்க்கத் தொடங்கிவிட்டது. அதற்கேற்றவாறு, பலவிதப் பிரச்சனைகளில் கருணானிதி மாட்டிக்கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமளிக்க (‘நிச்சயம் அவர் தூண்டுதல்தான்), அதற்கு எதிராக இருந்த மாணவர்களை நசுக்கினார். அதில் உதயகுமார் என்பவர் இறந்தார். 1977 (என்று நினைவு), கோவையில் பொதுக்கூட்டம் நடந்தபோது, (‘நான் அப்போது தாளவாடி என்ற ஊரில் படித்துக்கொண்டிருந்தேன். சத்தியமங்கலம் அருகே.. ஆனால் மலையின்மேல் அமைந்த ஊர். அங்கிருந்து 1 1/2 கிலோமீட்டர் தொலைவில்தான் கன்னட நடிகர் ராஜ்குமாரின் சொந்த ஊர், அவரின் பண்ணை எல்லாம் உள்ளது. அங்கிருந்துதான் ராஜ்குமார் வீரப்பன் அவர்களால் கடத்தப்பட்டார். எங்கள் பள்ளியில், யார் யார் எல்லாம் கருணானிதியின் பொதுக்கூட்டத்துக்காக கோவை செல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போதே கருணானிதி, தனக்காகச் சட்டத்தை வளைக்கும் தன் எண்ணத்தைக் காண்பிக்க ஆரம்பித்தார். அவர் தினமலருக்கும் பெரும் தொல்லைகள் தந்தார். நன்றாக நடந்துகொண்டிருந்த டி.வி.எஸ் பஸ் கம்பெனியில், தனக்குக் கமிஷன் தராததால், பேருந்தை அரசு உடைமையாக்கினார். தன் ஆட்களை லஞ்சம் வாங்கிப் பதவியில் அமர்த்தினார்). கருணானிதியின் செய்கையினால்தான், எம்ஜியார் சொன்னதை மக்கள் நம்பினார்கள். எம்ஜியாருக்கு திரைப்படத்தினாலும், அவருடைய செய்கையினாலும் மக்கள் மனத்தில் நல்ல எண்ணம் இருந்தது. எம்ஜியார் தேர்தலில் 77ல் நின்றபோது, பொதுமக்கள் பெருவாரியாக ஆதரவு தெரிவித்தனர். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.
ஆனாலும், திமுகவைப் பற்றி அப்போது மக்கள் எண்ணம்.. வேலைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால், கொடுத்தால், ஏமாற்றாமல் வேலை நிச்சயமாகக் கிடைத்துவிடும். இதுதான் திமுகாவைப் பற்றிப் பாஸிடிவ் எண்ணம்.
நெல்லைத்தமிழன்,
அற்புதமான பின்னூட்டம்…
இது போன்ற நுண்ணியமான விவரங்களைத்தான் நான்
தெரிந்து கொள்ள விரும்பினேன் – தேடிக்கொண்டிருந்தேன்.
இந்த சம்பவங்கள் நிகழ்ந்தபோது,
நான் தமிழகத்திலிருந்து
வெகு தொலைவில் இருந்ததால்,
இந்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை.
எம்ஜிஆர், கலைஞர் – இருவரின் குணாதிசயங்களையும்
மிக அழகாகவும், நேர்த்தியாகவும் சித்தரித்திருக்கிறீர்கள்.
உங்களது, மிகப்பிரமாதமான பின்னூட்டத்திற்காக,
எனது தனிப்பட்ட நன்றிகள்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இதில் ஒன்று எழுத விட்டுப்போய்விட்டது. 1977ல் எம்ஜியார் தேர்தலில் ஜெயித்த அன்று, தினமலர் முதல் பக்கத்தில், “சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்று எழுதி, கருணானிதின் ஆட்சி பறிபோனதைத் தலைப்புச் செய்தியாகத் தெரிவித்திருந்தார்கள். அதேபோன்று அவரின் 40+ திமுக சட்டசபை அங்கத்தினர்களை, மூட்டைப்பூச்சியைப் போன்று சித்தரித்திருந்தார்கள் என்று ஞாபகம்.
// 1972ல் அதிமுக உதயமான வரலாறு: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை வருட செய்திகள்
By Sriram Senkottai
First Published : 21 October 2013 08:56 AM IST
4
புகைப்படங்கள்
எத்தகைய சூழலில் அதிமுக என்ற கட்சி உதயமானது; எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட பிரச்னையின் ஆரம்பம் எங்கே உள்ளது; எதற்காக அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்; அந்தக் கால கட்டத்தில் தி.மு.க.வின் செயல்பாடு எப்படி இருந்தது; கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன? வன்முறை எவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்டது….
இத்தகைய வரலாற்றுச் சுவடுகளை மறக்காமல் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா?
தினமணியில் 1972ல் வெளியான இந்தச் செய்திகளைத் திறந்து படியுங்கள்!
இவை தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவுகள்.
11 அக். 1972 * திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். தற்காலிக நீக்கம் கழக மேலிடம் நடவடிக்கை : விரிவான செய்தி
12 அக். 1972 * கருணாநிதி, எம்.ஜி.ஆர். பேட்டிகள் சர்வாதிகார புகாரை முதல்வர் மறுக்கிறார் : விரிவான செய்தி
13 அக். 1972 * எம்.ஜி.ஆர். விவகாரம்: சமரச முயற்சி தோல்வி வருத்தம் தெரிவிக்க எம்.ஜி.ஆர். மறுப்பு : விரிவான செய்தி
14 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: தி.மு.க. செயற்குழு ஏற்பு : விரிவான செய்தி
15 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: பொதுக்குழு ஏற்றது * சமரச பேச்சும் வேண்டாம் என ஒரு மனதான முடிவு : விரிவான செய்தி
16 அக். 1972: * ஓரிரு நாளில் தம்முடைய திட்டத்தை அறிவிப்பதாக எம்.ஜி.ஆர். கூறுகிறார்; ஆர்ப்பாட்டத்தை நிறுத்த ஆதரவாளர்களுக்கு கோரிக்கை : விரிவான செய்தி
18 அக். 1972 * மேலும் களையெடுப்பு உண்டா? கருணாநிதி பதில்; களை கிளம்பினால் எடுத்து எறியப்படும் மற்றவர்கள் மீது இதுவரை புகார்கள் வரவில்லை என்கிறார் : விரிவான செய்தி
19 அக். 1972:* அண்ணா திமுக-வுக்கு தனிக்கொடி- எம்ஜிஆர் அறிவிப்பு அசெம்பிளியில் எதிர்க்கட்சியில் அமருவது பற்றி யோசிப்பதாகக் கூறுகிறார் : விரிவான செய்தி
20. அக். 1972: * அண்ணா திமுக ஒட்டுகாங்கிரஸா?: கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். பதில் : விரிவான செய்தி
21. அக். 1972: * வெளியூர்களில் இருந்து காலிகள் இறக்குமதி: எம்.ஜி.ஆர். புகார் : விரிவான செய்தி // …. அய்யா … ! இந்த செய்திகளை படித்துப் பார்த்தால் ” முழு விவரமும் — விளக்கமும் ” கிடைக்கும் …!!!
http://www.dinamani.com/specials/arasiyal_arangam/2013/10/21/1972%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/article1847301.ece அய்யா …! மேலே உள்ள பின்னூட்டத்திற்கான தினமாய் லிங்க் — இது தற்போது திறக்க இயலவில்லை அதனால் http://spicknewstamil.in/AIADMK.html .இந்த லிங்க் கில் சென்றால் மேலே உள்ள செய்திகள் கிடைக்கும் … !!!அல்லது ” எம்.ஜி.ஆர். நீக்கம் ” என்று கூகுளில் சுட்டினால் பலவற்றில் அந்த தினமணி லிங்க் உள்ளது …!!!
மிக்க நன்றி செல்வராஜன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
பல தகவல்கள் நினைவுக்கு வருகின்றன; ஒன்றே ஒன்று: குமுதம்: துக்ளக் கார்ட்டூன் போட்டி:
முத்தாய்ப்பாக துக்ளக்கில் கார்ட்டூன்:
தொல்லை தரும் எலியை (தி.மு.க.) விரட்டி அடிக்க பெரிய எலியை (அ .தி.மு.க.) வளர்க்க வேண்டும் என்று குமுதம் கார்ட்டூன் சொல்கிறது; துக்ளக்கோ பூனையே (காமராஜ் காங்கிரஸ் ) நிரந்தர தீர்வு அல்லவா? என்ற தொனியில். (ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற கருத்து பச்சையாக இருந்த காலம்)
திண்டுக்கல் தேர்தல் வரலாறு படைத்தது. தி.மு.க.காங்கிரசுக்குப் பின்னே , மூன்றாவதாக!
Party Candidate Name Votes received
ADMK K.Mayadevar 2,60,824
Syndicate Congress V.C.Sithan 1,19,032
DMK Pon Muthuramalingam 93,496
Congress (I) Seemaisamy 11,423
கலைஞர் எனும் திராவகம்..
JI for a long time i had felt the need to know about karunas mgrs early rules
how they functioned…….. what were the
conspiracies plots that karuna had executed against mgr………
Nellai ji and Selvarajan ji had beautifully narrated the earlier stories
But i have also heard that mgr also overplayed certain issues
despite karunas peace efforts……
Nellai ji could explain those incidents also
Thirundhadha ullangal irundhenna laabam?