திமுக ஆட்சியை பிடிக்கும் என்கிற கணிப்பிலேயே – லாபம் அடைந்தவர்கள்….!!!


.

SUn TV

நடந்து முடிந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை
கைப்பற்றி, தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றும் என்று
நேற்றிரவு பல தொலைக்காட்சி சேனல்களில்
exit poll results வெளி வந்தன….

இதில் யாருக்கு என்ன லாபம், யாருக்கு என்ன நஷ்டம் என்று
யாரும் யோசிக்கும் முன்னரே,
பங்கு மார்க்கெட் விஷயத்தை தெளிவாக விளக்கி விட்டது.
ரிசல்ட் வருவதற்கு முன்னரே –
கணிப்பு செய்தியிலேயே லாபம் பார்த்து விட்டவர்கள் இவர்கள்…!!!

————-
இன்றைய தினமணி செய்தி –
(http://www.dinamani.com/business/2016/05/17 )

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு:
விலை உயர்ந்த சன் டிவி பங்குகள்

First Published : 17 May 2016 01:47 PM IST

மும்பை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் திமுக
வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில்,
மும்பை பங்கு சந்தையில் சன் டிவியின் பங்குகள் விலை உயர்ந்தன.

15-வது சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நேற்று தமிழகம்
முழுவதும் 232 தொகுதிகளில் நடைபெற்றது.

இதில் திமுக-காங்கிரஸ் அணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்
என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தது.

இதையடுத்து இன்று பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகள்
விலைகள் உயர்ந்தன.

இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையில்
சன் டிவியின் பங்குகள் 10.75 சதவீதம் உயர்ந்து ரூ. 435.55க்கு
விற்பனையானது. இதுபோல தேசிய சந்தையில் நிஃப்டியில்
10.39 சதவீதம் உயர்ந்து ரூ.435க்கு விற்பனையானது.

சன் டிவியின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 4.93 லட்சம் பங்குகள்
கைமாறிய நிலையில், தேசிய சந்தையில் 4.7 லட்சம் பங்குகள் கைமாறின.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன்களான
கலாநிதி, தயாநிதி ஆகியோர் சன் டிவியின் உரிமையாளராக உள்ளனர்.
இதில் தயாநிதி மாறன் முந்தைய காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறை மற்றும் ஜவுளித் துறை
அமைச்சராகப் பணியாற்றினார்.

————————————————-

ஒரே இரவில் – ஒரே செய்தியில்,
முதலீட்டில், பத்தே முக்கால் சதவீதம் லாபம்….!!!

93 வயதிலும் தளராது உழைத்த தலைவருக்கு, ஜனநாயகத்தில்
கிடைத்த உடனடி வெகுமதி….!!!

தலைவர் சென்ற இடத்திற்கெல்லாம் பேரனும் காரணம்
இல்லாமலா டூர் போனார் …?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to திமுக ஆட்சியை பிடிக்கும் என்கிற கணிப்பிலேயே – லாபம் அடைந்தவர்கள்….!!!

  1. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    we r in tension,As per Amma”s advise,let us wait&see

  2. Senthilkumar's avatar Senthilkumar சொல்கிறார்:

    SELVAM SELVI – 7,116,720 Nos of Sun TV Shares and SHANMUGASUNDARAM SELVAM – 6,859,805 Nos of Sun TV Shares – The total worth INR. 605 Crore Only…!!!

  3. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    இதுதானே ஆரம்பம் — இன்னும் எவ்வளவோ இருக்கு — இதற்கெல்லாம்தானே ” நமக்கு – நாமே ” என்று நாமகரணம் சூட்டி ஊர் சுத்தி வந்தார்கள் …! எளிதாக காசை கொடுத்து அரசு பணியை பெற விரும்பியர்களும் — லஞ்சம் — ஊழல் — அபகரிப்பு — கொள்ளை போன்றவற்றை செய்து வாழ்க்கையில் உயர நினைத்தவர்களும் — தகுதி தேர்வு — வெளிப்படையான அரசு பணியாளர் தேர்வு ஆணையம் போன்றவைகளை அறவே வெறுத்தவர்களும் ” தேனை எடுப்பவன் — புறங்கையை நக்கினால் தப்பில்லை ” என்று தத்துவம் கூறி தவறுகளை நியாயப் படுத்தும் தலைமையை எதிர்பார்த்தவர்களும் — இன்னும் பலரும் விரைவில் உச்சத்துக்கு செல்ல துடித்தவர்களும் விரும்பிய ஆட்சி அமைய பாடு பட்டு இருந்தால் — வியப்பு ஒன்றும் இல்லை — திறமை இருக்கு அவர்கள் செய்கிறார்கள் என்றும் — பாவமன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பது தான் மனித இயல்பு என்று கூறியும் — அவர்கள் செய்த அனைத்தையும் நியாயப் படுத்திய ஊடகங்களும் — தொலைக்காட்சிகளில் விவாதங்களில் கலந்துகொண்டு வக்காலத்து வாங்கிய ” கைக்கூலிகளும் ” –பணத்திற்காக -பாதகமான கருத்துக்களையும் — கணிப்புகளையும் வெளியிட்ட — வெளியிடுகிற் செய்தி நிறுவனங்களும் —- நிறைந்த நாட்டில் ….. ????

  4. krishna's avatar krishna சொல்கிறார்:

    enga idellam oru newsa,19 dedi admk lead nnu news vanda sun network 20% down aakum, appa enna solluvinga.ellatilum oru sarbunna nallavairrukku.

    • bandhu's avatar bandhu சொல்கிறார்:

      இது போன்ற exit போல்கள் யாருக்கு லாபம் தரும் என்று புரியாமல் இருந்தேன். விளக்கியதற்கு நன்றி! மொத்த தேர்தல் செலவை ஒரே நாளில் சம்பாதித்திருப்பார்கள்!
      19ம் தேதி தோற்கப் போகிறோம் என்று அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தால், அதே ஸ்டாக்கை அதிகமாகிய விலைக்கு இப்போதே விற்று, குறைந்தவுடன் அதை வாங்கி அதிலும் லாபம் சம்பாதிக்கலாம்! (முதலில் விற்று அப்புறம் வாங்கும் முறையும் பங்கு சந்தையில் உண்டு!)

  5. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    when the final results come they may soar higher or take a deep dip —

  6. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // “ஆ. ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டார்’: இளைஞரின் பேட்டி குறித்து போலீஸார் விசாரணை …. http://www.dinamani.com/tamilnadu/2016/05/18/article3438803.ece ..// உண்மையான — உண்மை வெளிவருமா .. ? தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே – வன்முறை ஆங்காங்கே தொடங்கி விட்டது — அரவக்குறிச்சி அ .தி.மு.க. வேட்பாளர் அலுவலகம் குண்டுவீசி தாக்கப்பட்டது — மற்றும் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் பவனி வந்து அ .தி.மு.க. வினர் தாக்கப் படுவது தொடங்கி விட்டதாக தெரிகிறது — ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து அவதூறு வழக்குகளும் வாபஸ் வாங்கப் படும் என்று ஸ்டாலின் கூறியதையும் நினைவில் கொண்டு — எதை செய்தாலும் யாரும் எதுவும் செய்ய போவது இல்லை– வழக்கும் வராது என்கிற தைரியத்தில் — ஆரம்பித்து விட்டார்களா — அராஜகத்தை .. ?

  7. ஜோதி's avatar ஜோதி சொல்கிறார்:

    எக்ஸிட் போல் ரிசல்ட்-ஆல்
    ஒரு பேக்பையர்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.