ஜூனியர் விகடன் இவ்வளவு தூரம் தரம் தாழலாமா ….. ?

ஜூனியர் விகடன் இவ்வளவு தூரம்
தரம் தாழலாமா ….. ?

பங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கும்
வழக்கு விசாரணை பற்றி விவரங்கள் எழுதும்
ஜூனியர் விகடன் – அட்டைப்படம்,
மற்றும் புகைப்படங்கள் மூலமும்,
தலைப்புகளின் மூலமும் தன் தரத்திலிருந்து
மிகவும் கீழே போய் விட்டதாகத் தோன்றுகிறது.

தான் கெட்டது மட்டுமல்லாமல், வாசகர்களின்
தரத்தையும் கெடுக்கும் செயல் இது.


குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு ஆணாக
இருந்தால் – அது வேறு நிலை.
ஆனால் – ஒரு பெண்மணி அணிந்திருக்கும்
புடவை, ஜாக்கெட், கைப்பை, கண்ணாடி,
டிஷ்யூ பேப்பர், முதற்கொண்டு, சாப்பிடும்
தயிர்சாதம் வரை வர்ணனைகள் தேவையா ?

இவை எல்லாம் நிச்சயம் வாசகர்களின் தேவை
அல்ல. தரத்தைக் குறைத்து -விற்பனையை
அதிகரிக்கும் நோக்கமா, அல்லது
சம்பந்தப்பட்டவர்களை அவமானப்படுத்தும்
முயற்சியா அல்லது வேறு எதாவது
உள் நோக்கமா ?
– தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் –
இது தரம் தாழ்ந்த செயல்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஜூனியர் விகடன் இவ்வளவு தூரம் தரம் தாழலாமா ….. ?

  1. சவுக்கடி சந்திரகாந்தா's avatar சவுக்கடி சந்திரகாந்தா சொல்கிறார்:

    அவர்கள் “லட்சிய வெறி”
    கொண்டவர்கள்.

    அவர்களது ஒரே லட்சியம்
    “காசே தான் கடவுளடா”

  2. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    இரா சரவணன் (தலைமை நிருபராம்) என்பவர் ஒரு சில மாதங்களுக்கு முன் டில்லியில் இருந்து, கனிமொழி நாடு காக்க சிறை சென்று, செக்கு இழுப்பது போல சோகத்தை பிழிந்து அவர் மீது பரிதாபம் வரும் வண்ணம் ஒரு கட்டுரை எழுதினார். அன்றே ஜூவியின் ‘நடுநிலை’ புரிந்து விட்டது. மேலும் உற்று நோக்கியதில் KD சகோதரர்கள் பற்றிய நல்ல செய்திகள் மட்டுமே ஜூவியில் வருவதையும் அவதானிக்கலாம். அதன் பின் என்னால் முடிந்தது,.. வலை அமைப்பில் விகடன் பிரசுரங்களை படிக்க கட்டியிருந்த ஒரு வருட சந்தா முடிவடையும் போது, “போடாங்…” என்று என் கடனட்டையை பத்திர படுத்திக் கொண்டேன்.

  3. smtvkendra's avatar smtvkendra சொல்கிறார்:

    ஜூனியர் விகடன் நான் படிக்கவில்லை. எனவே தங்களது கட்டுரையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
    தங்களது விமர்சனம் தயிர் சாதத்துக்கா அவரது அலங்காரத்துக்கா அல்லது அது குறித்த கட்டுரைக்கா?

  4. Vinoth's avatar Vinoth சொல்கிறார்:

    விகடன் பங்குகளை KD பிரதர்ஸ் வாங்கி விட்டார்கள் என்று கேள்விபட்டேன்..

  5. Dinesh's avatar Dinesh சொல்கிறார்:

    Many years back I stopped buying/reading these Tamil weekly magazines. And, I saved about 100 to 120 rupees a week.

  6. Marmayogie's avatar Marmayogie சொல்கிறார்:

    நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் நண்பரே? ஜூனியர் விகடனும் ஆனந்த (ஆபாச) விகடனும் எந்த காலத்தில் தரமாக இருந்தன இப்போது தரம் குறைந்து விட்டது என்று சொல்வதற்கு..உலகின் மிகக்கேவலமான பத்திரிக்கைகள் என்று வைத்தால் அதில் நிச்சயம் ஆபாச விகடனும் ஜூனியர் விகடனும் முதலிடம் பெரும்…கல்லூரிகளுக்கு சிநிமாக்காரனை கூட்டி சென்று மாணவிகளை ஜொள்ளுவிட வைப்பது, மாணவிகளிடம் நடிகனைப்பற்றி சொல்லி – கிளுகிளுப்பூட்டுவது, சினிமா டிவி நடிகைகளை பொண்ணு அதகளம் பண்ணுது என்று எழுதுவது எல்லாவற்றுக்கும் மேல் ரஜினிகாந்த்துக்கு புது புது நடிகைகளாக ஜோடி சேர்க்க – மாமா வேலை பார்ப்பது இதுதானே அந்த பலான பத்திர்க்கைகளின் தொழில்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.