என்ன ஆயிற்று கமல் ? (புகைப்படம்)
கமல் ஹாசன் இயல்பிலேயே தன்
தோற்றத்தில் மிகுந்த அக்கரை
கொண்டிருப்பவர்.
முக்கியமாக பொது நிகழ்ச்சிகளுக்கு
வரும்போது மிகவும் கவனமாக
இருப்பார்.
ஆனால் கடந்த வாரம் திரைப்பட
தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்
இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட
கமல் தன் தோற்றத்தில் அக்கரையே
இல்லாமல் மிகவும் உற்சாகம் குன்றி
இருந்தார்.
நெற்றியில் விபூதி, குங்குமம் வேறு.
என்ன காரணமோ தெரியவில்லை.
நீங்களே பாருங்களேன் –




Well done கா.மை.ரசித்தேன்.
துரதிருஷ்டவசமாக, நம் மாநிலத்தில் ,
பலர் தம்மை நாத்திகவாதி என காண்பித்துக்கொள்வது மனிதர்களை ஏமாற்ற!
பலர் தம்மை ஆத்திகவாதி என காண்பித்துக்கொள்வது
கடவுளை ஏமாற்ற !!
வருக நண்பர் கண்பத்,
பிரமாதம்.
சுருக்கமாகவும் அதே சமயம்
அழுத்தமாகவும் “பஞ்ச்” கொடுக்கிறீர்கள்.
சூடான இடுகைகளை வெளியிடும்போது
எல்லாம் –
உங்கள் வருகையையும், மறுமொழியையும்
ஆவலுடன் எதிர்பார்ப்பது என் வழக்கம்.
தொடர்க உங்கள் பணி !
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
அன்புள்ள கா.மை,ramanans,
உங்கள் அன்பிற்கும்,மதிப்பிற்கும் என் மனமார்ந்த நன்றி.
நம் நட்பு தொடர பிரார்த்திக்கிறேன்!
அன்புடன்,
கண்பத்
//பலர் தம்மை நாத்திகவாதி என காண்பித்துக்கொள்வது மனிதர்களை ஏமாற்ற!
பலர் தம்மை ஆத்திகவாதி என காண்பித்துக்கொள்வது
கடவுளை ஏமாற்ற !!//
சூப்பர் கணா… இதை அநேகமாக ரஜினி ராணாவில் பயன்படுத்தக் கூடும்.
சரி, ”நானாத்திகன்” என்று பிதற்றித் திரியும் சிலரை எந்த லிஸ்டில் சேர்ப்பது?
//கமல் தன் தோற்றத்தில் அக்கரையே
இல்லாமல் மிகவும் உற்சாகம் குன்றி
இருந்தார்.
நெற்றியில் விபூதி, குங்குமம் வேறு.
என்ன காரணமோ தெரியவில்லை.//
நண்பரே, எனக்குத் தெரியும் இதன் உண்மையான காரணம். ஆனால் அதை இப்போது சொல்ல வேண்டாம் எனப் பார்க்கிறேன். விரைவில் எல்லோருக்குமே தெரிய வரும். அப்போது “சந்தனக் கட்டைக்களால்” எந்தப் பயனும் இல்லை என்பதை அவரே சொல்வார்.
காலம் எல்லாவற்றையும் மாற்ற வல்லது, எப்படிப்பட்ட மனிதனையும். இழப்பைக் கண்டு கலங்காதவர்கள் யாரேனும் உள்ளனரா என்ன? வெயிட் அண்ட் சீ
வருக நண்பர் ரமணன்,
காலம் எல்லாரையும் மாற்றும் என்பது
முற்றிலும் உண்மை.அதை உணர்ந்து
ஒப்புக்கொள்வது தான் எதார்த்தம்.
ஆனால் – சிலர்
கடும் முயற்சி எடுத்துகொண்டு
தாங்கள் மாறியதையும் மறைத்துக் கொள்ள
முயற்சிக்கிறார்களே.
நீங்கள் சொன்ன காரணம் பற்றி –
நிஜமாகவே எனக்கு ஒன்றும் தெரியாது.
என்னால் ஊகிக்கவும் முடியவில்லை.
அதையும் தெரிவியுங்களேன்.
ஒருவேளை பொதுவில் தெரிவிப்பது
சரியில்லை என்று கருதினீர்களானால்
தனியே எனக்கு தெரிவிக்கலாம் என்றால் –
தெரிவியுங்களேன்.
(kavirimainthan@gmail.com)
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்