தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ……


தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ….

பக்கத்துத்தெருவில் தான் வசித்து வந்தார் அந்த நண்பர்.
ஆனால் கொஞ்ச நாட்களாக  ஆளைப் பார்க்க முடியவில்லை.
எதேச்சையாக   நேற்று சந்திக்க நேர்ந்தது.

நான் –  என்ன சார் -ரொம்ப நாளா ஆளையே  பார்க்க
முடியலை ?
நண்பர் – அடடா  ஒங்க கிட்ட  சொல்ல மறந்துட்டேன். நான்
வேற  எடத்துக்கு  நகர்ந்துட்டேன் ..48 மணி நேரம் ஆச்சு.

நான் – எடம்  மாறிட்டீங்களா ?  எங்கே ?
நண்பர் – ECR  பக்கத்துல –
நான் –   ECR பக்கத்துலயா ?  எங்கே ?
நண்பர் –  தென் மேற்கு வங்கக் கடல் மத்திய பகுதில ..

நான் –  என்ன  சார்  சொல்றீங்க ?

நண்பர் –  ஆமாம் – ECR-ல  கடற்கரைலேந்து
5 கிலோமீட்டர் தள்ளி உள்ள
ஒரு காலனில  தனி வீடு.

நான் –   அடடா  அவ்வளவு  தொலைவா போயிட்டீங்க ?
அப்ப  அடிக்கடி  இந்தப்  பக்கம்  வர மாட்டீங்க …

நண்பர்  –  வந்தாலும்  வரலாம்.   வராமல் இருக்கவும்
வாய்ப்பு  இருக்கு

நான் –  ரொம்ப  தொலைவு ஆச்சே – எப்படி  வருவீங்க ?
பஸ்ஸா இல்லை ஸ்கூட்டரா ?
நண்பர் –  பஸ்லயும்  வரலாம்; ஸ்கூட்டர்லேயும்  வரலாம்;
வராமயும்  போகலாம் !

நான் –  என்ன  சார்  புது எடம்  போனப்புறம்  பேச்சே
ஒரு மாதிரி இருக்கே. அக்கம்  பக்கம் எல்லாம்  எப்படி ?
யார்  குடி  இருக்காங்க ?
நண்பர்  –   ஓ  அதுவா – பக்கத்தது வீட்டுல தென் மண்டல
வானிலை  அதிகாரி  ரமணன் தான்  இருக்கார் ….!

இந்த வானிலை அதிகாரிகள் படுத்தும்பாடு  தாங்க முடியவில்லை.
எங்கிருந்து தான் கண்டு பிடிக்கிறார்களோ இந்த குறிப்பிட்ட
வார்த்தை தொகுப்புகளையும்
வழ வழ கொழா கொழா  அறிவிப்புகளையும் –

தென் மேற்கு மத்திய வங்கக்கடல் …
தெற்கு ஆந்திரா மத்திய பகுதி ..
காற்று அழுத்த தாழ்வு பகுதி – குறைந்த அழுத்த தாழ்  நிலை …
தென்மேற்கிலிருந்து  வ்ட கிழக்குநோக்கி ..

அடுத்த 24 மணிநேரத்திற்கு (எப்போதிலிருந்து 24 மணி நேரம் –
அது  யாருக்கும்  தெரியாது)

லேசான  அல்லது  மிதமான  அல்லது இடியுடன் கூடிய
அவ்வப்போது விட்டுவிட்டு அல்லது பலமான மழை –
பெய்ய  வாய்ப்பு (?)  உள்ளது. (இதற்கு மேல் வழுக்கலாக
எப்படி  சொல்லுவது ?)

இந்த அறிவிப்பை    டிவி காமிரா முன் சொல்லும்போது
அவர்கள் கொடுக்கும் போஸ் இருக்கிறதே .. அப்பப்பா  காணக்கண்
கோடி வேண்டும் ! இவ்வளவு லட்சணமான அறிக்கையை டிவி காரர்களே
வாங்கி வந்து படித்தால் போதாதா ?  நம்மை வேறு படுத்த வேண்டுமா?

என்ன கொடுமைடா  சாமி ! (அக்டோபர் – நவம்பர்  வந்தாலே
பயம்ம்ம்ம்ம்மா  இருக்கிறது )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in நாகரிகம், வானிலை, வானிலை அறிவிப்பு, Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.