
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின்
நிலைப்பாடா ?
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்விருக்கும்
நீதிபதிகளின் பட்டியலில், தமிழகத்தைச்சேர்ந்த ,
தற்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி தினகரன் அவர்களின் பெயரும்
பரிசீலனையில் இருந்தபோது நிறைய தரப்புகளிலிருந்து
(தமிழ்நாடு, கர்நாடக பார் உட்பட )
அவரைப்பற்றிய ஊழல் புகார்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை
நீதிபதி அவர்களுக்கு சென்றன. அவற்றில் ஒன்று அவரது
சொந்த ஊரான காவேரிராஜபுரம் (திருவள்ளூர் மாவட்டம்,
தமிழ்நாடு ) கிராமத்தில், நூற்றுக்கணக்கான ஏக்கர்
புறம்போக்கு நிலங்களை சட்டவிரோதமாக அவர்
ஆக்கிரமிப்பு செய்திருப்பது.
பதவி உயர்வைப்பற்றி முடிவெடுக்கும் முன்னர்,இந்த
புகார்களைப்பற்றி விசாரிக்க விரும்பிய சுப்ரீம் கோர்ட் –
சம்பந்தப்பட்ட இடமான திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு
இந்த புகார் குறித்து ஆய்வு செய்து அறிக்கை
சமர்ப்பிக்குமாறு பணித்தது.
அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் கலெக்டரும் சுப்ரீம் கோர்ட்
தலைமை நீதிபதியிடம் ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
அதில், நீதிபதி தினகரன் அவர்களும், அவரது குடும்பத்தினரும்
காவேரிராஜபுரத்தில் சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்பு
செய்திருப்பது உண்மை என்று உறுதி செய்திருந்தார்.
திருவள்ளூர் கலெக்டரின் இந்த அறிக்கையின் அடிப்படையில்,
சுப்ரீம் கோர்ட், நீதிபதி தினகரன் அவர்களது பெயரை –
உறுதி செய்யப்பட்ட ஊழல் புகாரின் அடிப்படையில் –
பதவி உயர்வு பெறுவோரின் பட்டியலில் இருந்து நீக்கி
உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் – நேற்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட்
கட்சியினர் காவேரிராஜபுரம் கிராமத்தில் நீதிபதி தினகரன்,
சட்டவிரோதமாக, அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை
ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலங்களை மீட்டு
தலித் மக்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்தனர்.
கீழே கொடுக்கப்பட்டு இருப்பது –
இது குறித்து இன்றைய தினம்(10/11/2009) முதலமைச்சர்
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து ஒரு பகுதி –
” இவர்கள்(மார்க்சிஸ்டுகள்) யாருக்கு எதிராக போராட்டம்
நடத்துகின்றனர் ?
அவரும் ஒரு தலித் தான் !
நீதிபதி தினகரன் அளித்துள்ள பேட்டியில் “எந்த அரசாங்க
நிலத்தையோ, பொது நிலத்தையோ ஆக்கிரமிக்கவில்லை ”
எனத்தெரிவித்திருக்கிறார்.
ஆனால் மார்க்சிஸ்டுகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறுகின்றனர்.
எடுத்தேன் – கவிழ்த்தேன் என்று ஓர் அரசாங்கம்
செயல்பட முடியாது ”
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு
ஆதரவாகவும், அவரது ஆட்சியில், அவரது நேரடி பொறுப்பில்
பணிபுரியும் திருவள்ளூர் கலெக்டரின் (சுப்ரீம் கோர்ட்டில்
சமர்ப்பிக்கப்பட்ட ) ஆய்வு அறிக்கையை
கவனத்தில் எடுத்துக்கொள்ளாததாகவும் இல்லை ?
மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடு, திருவள்ளூர்
கலெக்டரின் அறிக்கையை மறைக்கின்றதா ?
வீரமணி அவர்களின்
விருப்பத்திற்கு மாறாக
ஆய்வு அறிக்கை கொடுத்த திருவள்ளூர் கலெக்டர் விரைவில்
தன் மாற்றல் உத்தரவை எதிர்பார்க்கலாமா ?



நிஜமான சாமியாரா இல்லை ….