இன்னமுமா திராவிடம் ?

  இன்னமுமா  திராவிடம்  ?

சரித்திரப் பேராசிரியர்களின்  கூற்றுப்படி –  தமிழ் தான் 
திராவிடர்களின் முது மொழி .

தமிழிலிருந்து  தோன்றியவை தான் –
தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம் போன்ற
தென்னிந்திய மொழிகள்.   
 
திராவிடம் – திராவிடம் என்று இன்னமும்
பேசிகொண்டிருப்பவர்கள் –

ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது,
மலையாளியையாவது – தமிழ் தான் எங்கள் அடிப்படைத்
தாய்மொழி.
நாம் எல்லாரும் ஒரே இனத்தவர் தான்
என்று கூறச்செய்யுங்கள் பார்ப்போம்.

 

திராவிடம் – ஆரியம் என்பது எல்லாம் சரித்திரம் !

நான்காயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சரித்திரம் !!

 

இன்றைய தினத்தில் எது நடைமுறை சாத்தியம்
என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

தனித்தனி நாடுக்ளாக இருந்த நிலங்களை –
அதில் வாழும் மக்களை – ஒன்றிணைத்து –

 

ஒரே நாடக்கி – நானூறு வருடங்களாக ஒரு குடைக்குள் –
ஒரு நிர்வாகத்திற்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர் –
நம்மை அழைத்தது – உணற வைத்தது ‘இந்தியன்’ என்று !!

 

சுதந்திரம் பெற்ற பிறகு – மொழி வழி மாநில அரசுகள்
அரசியல் சட்டம் மூலமாக உருவாகி –
இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னர் –

நாம் இயற்கையாக நம்மை உணர்வது –
முதலில் தமிழன் என்றும் –

பிறகு இந்தியன்
என்றும் மட்டும் தான்.

(சிலர் முதலில் இந்தியன்
என்றும் பிறகு தமிழன் என்றும் கூறலாம் ).

சத்தியமாக திராவிடன் என்கிற உணர்வு
மிகப்பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுவது இல்லை.

 

திராவிட இயக்கத்தில் ஊறி வளர்ந்த வெகு சிலர்
மட்டுமே இன்றும் திராவிடன் – ஆரியன்
என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் !!

 
நடைமுறை சாத்தியம் இல்லாத திராவிடர் பற்றிய
பேச்சை விட்டு விட்டு – தமிழைத் தாய்மொழியாக
கொண்டுள்ள அனைவரும் தமிழர்க்ள் என்கிற –

 

இன்றைய தேதிக்கு ஒத்துப்போகக்கூடிய –
ஒரு நிலையை ஏற்பதே பொருத்தமாக இருக்கும்.

 
காவிரியில் கன்னடத்தாரும், பாலாற்றில் தெலுஙக்ரும்,
பெரியாரில் மலையாளத்தாரும் படுத்தும் பாட்டை
பார்த்தபின்பும் –

உலகம்  முழுவதும்  உள்ள தமிழின மக்கள்
பெரும் துன்பத்திற்கும் அவதிக்கும்
உள்ளாகி இருக்கும் இந்த நேரத்திலும் –

இன்னும் அர்த்தம் இல்லாத திராவிடப்
பெருமையை பேசுபவர்களை

மக்களே வெறுத்து ஒதுக்கக்கூடிய நிலையில்
இன்று இருக்கிறோம்.

நாம்  தமிழர்கள்.  நமது  மொழி தமிழ்.
நமது  இனம்  தமிழினம். இது  தான்
இன்றைய  சத்தியம் (சாத்தியமும் கூட ).

 

இந்த விரிந்த,  பரந்த  உலகத்தில் –

எங்கு  இருந்தாலும்  சரி –   நாடுகள்  நம்மைப் 

பிரித்தாலும் –  மொழியும்  இனமும்   நம்மை

இணைக்கும் ;  இணைக்கின்றன !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இன்னமுமா திராவிடம் ?

  1. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    This is the first time that I happened to come across your blogs. Yes, we are either Tamil and Indian or Indian and Tamil.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.