நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ?
இன்றைய தினம் “இந்து” ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும்
இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்களைத்தான் மேலே
பார்க்கிறீர்கள் ! ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சிக்காக, ஒரே நாளிதழில்,
இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்கள் ! ஆங்கில நாளிதழில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில்
அரசு விளம்பரங்கள் !! இதன் உண்மை அர்த்தம் என்ன ? இந்த விளம்பரங்கள் மக்களுக்கு
நிகழ்ச்சியைப் பற்றிய செய்தியை மட்டுமா சொல்கின்றன ?
விளம்பரங்களின் மூலம் இந்த செய்தித்தாளையே விலைக்கு வாங்கும்
முயற்சியையும் சேர்த்தே சொல்லுவதாகத் தோன்றவில்லை ?
அரசாங்கத்தின் செயல்பாட்டை அலசி ஆராய்ந்து –
குறைகளையும், நிறைகளையும்
மக்களுக்கு எடுத்துச் சொல்லி பொதுக் கருத்தை
(public opinion) உருவாக்க வேண்டியது நாளிதழ்களின்
கடமையும் பொறுப்பும் இல்லையா ?
அண்மைக் காலங்களில் “இந்து” நாளிதழில் தமிழ் நாடு அரசைப்பற்றிய
எந்த விமரிசனமும் இல்லாததற்கு இத்தகைய விளம்பரங்கள் தான்
காரணமோ ? இந்து வாசகர்கள் இவற்றை எல்லாம் அறியாதவர்களா ?
பத்திரிகை வேண்டுமானால் விளம்பரத்திற்கு மயங்கலாம் –
விலை போகலாம் ! வாசகர்கள் ஏமாளிகள் அல்ல !!



நிஜமான சாமியாரா இல்லை ….