பெருமை மிக்க பாரம்பரியம் !!!
அப்பா கதாநாயக நடிகர் – மகனும் கதாநாயகன் (முகம் பார்க்க சகிக்காமல்
இருந்தாலும் கூட) ! நாலு படம் பார்த்தால் தானாகவே பழகி விடுமே !!
அப்பா இயக்குனர் – மகனும் இயக்குனர்.
அப்பா புகழ் பெற்ற வக்கீல் – மகன் ஆட்டோமாடிக் வக்கீல் !!
அப்பா – அம்மா இருவரும் டாக்டர் !
சந்தேகமே வேண்டாம் மகன் /மகள் எல்லாருமே டாக்டர்கள் தான் !!
அப்பா ஆடிட்டர் – மகன் ? சந்தேகம் உண்டா ?
முக்கியமான விஷயத்தை விட்டு விட்டேனே –
அப்பா அமைச்சர் !
மகன் (கள்!) / மகள் , பேரன் – பேத்தி – நேற்று
குடும்பத்தில் பிறந்த குழந்தை – அனைவருமே –
அரசியல் பிரமுகர்கள் !!! MPக்கள், MLAக்கள், அமைச்சர பெருமக்கள் !!
இன்னும் முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விடக்கூடாதே –
அப்பன் குடிகாரன் – பிள்ளை(கள்) –
பிச்ச்ச்ச்ச்ச்சசைக்காரர்கள் !
இதில் சுதந்திர நாடு – ஜனநாயக நாடு
என்கிற பெருமை வேறு !
எப்பேர்ப்பட்ட நாடு நம்நாடு ? எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் !



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…