S.Ve.சேகர் !!!
அவர் தலப்பெழுத்தை பார்த்தவுடனே புரிந்து கொள்ளலாம் – தன்னை நம்புபவர் அல்ல – தலையெழுத்தை –
அதிருஷ்டத்தை, ஜோசியத்தை – நம்புபவர் என்று !!!
நல்ல தோற்றம் உள்ளவர் . புத்திசாலி. மக்களுக்கு ஓரளவு அறிமுகம் ஆனவர். நல்ல நகைச்சுவை நடிகர்
( எப்போதும் ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருப்பவர் என்பது வேறு விஷயம் ). கதை-வசனகர்த்தா,
இயக்குனர் (தன் நாடகங்களுக்கு மட்டும் ) சென்னை நகரில் வாழும் நடுத்தரவர்க்கத்தினருக்கு ஓரளவிற்கு
பொழுது போக உதவுபவர்
!
பிழைக்கத்தெரிந்தவர் !!!
இருந்தாலும் தன் மகன் பிழைப்பிற்காக ஒரு சொந்தப்படம் எடுத்து சம்பாதித்ததில் ஓரளவு
சொத்தை இழந்தவர்.
அண்மைக்காலங்களில் அவர் அடிக்கும் கூத்து மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. இவர் பழைய கதைகளை
எல்லாரும் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் தன்னைப்பற்றி அதிகமாக் எடை போட்டுக்கொண்டு
ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார் . மயிலை சட்டமன்ற தொகுதியில் முதலில் சுயேச்சையாக நின்று
1800 ( ஆயிரத்து எண்ணூறு ) ஓட்டுக்களை மட்டும் பெற்று பரிதாபமாக தோற்ற கதை எல்லார்
நினைவிலும் இன்னும் பசுமையாகவே இருக்கிறது.
அடுத்த தேர்தலில் புத்திசாலித்தனமாக அதிமுக -வில் சேர்ந்து சீட் வாங்கி அந்த கட்சியின்
செல்வாக்கினால் 80,000 ஓட்டுக்கள் பெற்று வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
யாரோ ஜோசியர் சொன்னதைக்கேட்டு பாரளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்பு தனக்கு நிச்சயம் உண்டு
என்று நம்பி அதிமுக-வில் ஆன மட்டும் முயன்றார்.
இறுதியாக அங்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதி ஆனவுடன் கலைஞரை சரண் அடைந்தார்.
அதிமுக-வையும் ஜெயலலிதா வையும் சங்கடப்படுத்த கலைஞர் அவரை ஆனமட்டும் பயன்படுத்திக்கொண்டு
இருக்கிறார். சேகர் எந்தக்கட்சியில் வேண்டுமானாலும் இருக்கட்டும் அல்லது போகட்டும் –
ஆனால் அவரது நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லாமல் எல்லாரையும் முட்டாளாக்க
முயற்சி செய்வது தான் எரிச்சலை உண்டு பண்ணுகிறது.
திடீரென்று தன்னை பிறாம்மணர்களின் ஒட்டு மொத்த தலைவராக பிரகடனப்படுத்திக்கொள்கிறார் ! கலைஞர்
பிறாம்மணர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்போவதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறார் !! ஏதோ தான்
சொல்லும் கட்சிக்கு தான் அத்தனை பிறாம்மணர்களும் ஓட்டு போடுவார்கள் என்பது போன்ற மாயத்தோற்றத்தை
ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
இத்தனை நாள் இவரது பிறாம்மண அபிமானம் எங்கே போயிருந்தது. காஞ்சி மடமும், சங்கராச்சாரியார்களும்
ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டபோது இவர் அதிமுக-வில் தானே இருந்தார் ? அப்போது எதாவது
பேசினாரா? கை கட்டி, வாய் பொத்தி ஜெயலலிதாவின் காலடியில் தானே விழுந்திருந்தார் ?
பிறாம்மணர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்க இவர் யார் ?
எந்த பிறாம்மணன் இவரிடம் இட ஒதுக்கீடு கேட்கச்சொன்னான் ?
இட ஒதுக்கீட்டை பிறாம்மணர்களே விரும்பமாட்டார்களே !
தன் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த பிறாம்மண சமுதாயத்தையும் அவமானப்படுத்துவதை சேகர்
உடனடியாக நிறுத்த வேண்டும்.
அவருக்கு M.P. ஆக வேண்டும் என்றால், அதற்காக கலைஞர் காலைப்பிடித்தால் ஆகும் என்றால் – தாராளமாக
செய்யட்டும். ஆனால் மக்களை முட்டாள் ஆக்கும் – ஆக்க முயற்சிக்கும் – வேலையை மட்டும் அவர் உடனே நிறுத்துவது
அவசியம்.
அவரை இன்னும் அதிமுக – MLA வாக தொடர அனுமதித்து கொண்டிருப்பது அந்த கட்சிக்கும் பெருத்த அவமானமே.
ஜெயலலிதா ஏன் இன்னும் பொறுத்துக்கொண்டு இருக்கிறார் ??



ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்கள். கொஞ்சம் கடுமையைக் குறைத்திருக்கலாம். சென்ஸ் ஆப் ஹ்யூமரும் முன் கோபமும் புருஷன் பொண்டாட்டி மாதிரி. அந்த பலஹீனம் சேகருக்கும் இருக்கும் போலிருக்கிறது.
http://kgjawarlal.wordpress.com
well said
ya
ok