அடிப்படைத்தேவைகள்
சென்னை மாநகராட்சி அண்மையில் சென்னை நகரை அழகு படுத்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு
வருகிறது. அதன் ஒரு பகுதியாக – நகரில் குறிப்பிட்ட சில இடங்களை தேர்ந்தெடுத்து அந்த இடங்களில்
சுவரொட்டிகளை ஒட்டவும், சுவர் விளம்பரங்களில் ஈடுபடவும் தடை விதித்திருக்கிறது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் அழகுணர்வுடன், தமிழ் பண்பாட்டை விளக்கும்
வண்ண சுவர் ஓவியங்களும் வரையப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
சந்தேகமே இல்லாமல் வரவேற்கக்கூடிய -பாராட்டக்கூடிய – செயல்களே இவை !
மனதார வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம் !! சென்னைக்கு மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதற்கும் ஏற்ற
யோசனைகள் இவை !!! மற்ற பெரிய நகரங்களும் இதனை மேற்கொள்ள தமிழக அரசு ஆவன செய்யலாம்.
ஆனால் – முக்கியமான மற்றொரு கருத்தையும் இந்த சமயத்தில் வலியுறுத்த வேண்டி இருக்கிறது.
நகரை அழகுபடுத்துவது எவ்வளவு முக்கியமோ அதை விட பன் மடங்கு முக்கியம் அடிப்படை சுகாதாரம்/ அன்றாட
கழிப்பிட தேவைகள்.
குடிசைகள் நிறைந்த சென்னை மாநகரத்தில் – எனக்குத்தெரிந்து – ஒரு இடத்தில் கூட இலவச கழிப்பறை இல்லை.
விளைவு – பல தெருக்களில் மூத்திர நாற்றம் !
முழு விலையை கொடுத்து அரிசி வாங்கி சாப்பிட இயலாதவர்கள் ஏழை மக்கள் என்பதை உணர்ந்து தானே
கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று அரசாங்கம் கொடுக்கிறது ?
அரிசியை கிலோ ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் அரசு – ஒரு தடவை மூத்திரம் போக ஒரு ரூபாய் என்றும் ஒரு
தடவை மலம் கழிக்க இரண்டு ரூபாய் என்றும் வசூலித்தால் எங்கே போவார்கள் மக்கள் ?
போக்கிடம் சந்து முனை தானே?
ஒரு குடும்பத்தில் குறைந்தது 4 பேரையாவது கொண்ட – குடிசைகளில் வசிக்கும் மக்கள் அன்றாடம் இயற்கை
கழிவுகளை கழிக்க எப்படி காசு செலழிக்க முடியும் ?
இந்த விஷயம் – ஏழை மக்களின் இந்த அடிப்படை தேவைகள் – மாநகராட்சியிலோ – அரசாங்கத்திலோ – முக்கிய
பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தெரியாதா ? பின் ஏன் இந்த அலட்சியம் ?? பாராமுகம் ???
முக்கால்வாசி கட்டண கழிப்பறைகளின் வசூல் முக்கிய உள்ளுர் அரசியல்வாதிகளுக்கு போய் சேருகிறது என்பது
உண்மையா ?
தேவைப்படும் இடங்களில் எல்லாம், முக்கியமாக குடிசைகளில் வசிக்கும் பெண்களின் நிலையை கருதியாவது –
கட்டணம் வசூலிக்காத கழிப்பறைகளையும், குளியலறைகளையும் – கட்டிக்கொடுத்து, அவற்றை நல்லபடியாக
பராமரிப்பது மாநகராட்சி மற்றும் அரசாங்கத்தின் முக்கிய கடமை இல்லையா ?
அப்படி என்ன செலவு ஆகவிடப்போகிறது ? இடம் ஏற்கெனவே அரசுக்கு சொந்தமாக இருக்கப்போகிறது.
ஒரு கழிப்பறை/குளியலறை கட்ட மிஞ்சிப்போனால் ஒரு லட்சம் ரூபாய் ஆகலாம். ஒரு கோடியில் 100 கட்டலாம்.
10 கோடி ஒதுக்கினால் சென்னையில் மட்டுமே 1000 கட்டலாம். எத்தனையோ தொண்டு நிறுவனங்களும்
இந்தப்பணியில் உதவ முன் வரும். இதனை செய்ய அரசாங்கத்தால் முடியாதா ?
மனம் இருந்தால் வழியா இல்லை ?
போனது போகட்டும் – இப்போதாவது செய்யுங்களேன் – please !!!



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…