……………………………………..

…………………………………….
மேலே நாராயணசாமி – முன்னாள் முதல்வர் …. கீழே – ரங்கசாமி -இந்நாள் முதல்வர் ….!!!
………………………………………

………………………………………………………………………
காரைக்காலில் நடந்த கூட்டத்தில், அரைகுறை மொழிபெயர்ப்பாளர்கள், ரங்கசாமியை நாராயணசாமி என்றும் நாராயணசாமியை, ரங்கசாமி என்றும் மாற்றி மாற்றி உளறி – தலைவரை டென்ஷனாக்கி விட்டார்கள்.
அவ்வளவு பேர் இருந்த கூட்டத்தில் இந்தி, தமிழ் இரண்டும் ஒழுங்காகத் தெரிந்த நபர்கள் யாருமில்லை என்பது லோக்கல் பாஜக-விற்கு கேவலம். மொழி பெயர்ப்பாளர் விஷயத்தில் லோக்கல் பாஜகவினர் இன்னும் அக்கரை எடுத்துக் கொண்டிருக்க
வேண்டும்.
பெரிய தலைவர் மெனக்கெட்டு கட்சியை வளர்க்க டெல்லியிலிருந்து இவ்வளவு தூரம் வந்து உழைக்கும்போது உள்ளூர் பாஜகவினர் இப்படி அலட்சியமாக இருக்கலாமா ..??
இவர்கள் படுத்திய பாட்டில், தலைவர் கடுப்பாகி, அடுத்த முறை அவரே, அவருக்கு தெரிந்த அளவு தமிழில் பேசி விடத் துணிவார் என்றே தோன்றுகிறது…..!!!
கீழே வீடியோ -மொழிபெயர்ப்பாளரின் கூத்தை பாருங்களேன்…..நானும் அந்த அற்புதமான மொழிபெயர்ப்பாளரின் முகத்தை பார்க்க வேண்டுமென்று ஆன மட்டும் முயன்றேன்…. இருந்தும் அவர் முக தரிசனம் கிடைக்கவில்லை….!!!
…………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



[…] […]