…………………………………………

…………………………………………..

……………………………………….
இரண்டு குழந்தைகளைப்பெற்ற ஒரு பெண்மணி தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் ….
இது – இன்றைக்கு இருக்கும் நவீன மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லாத, ஒரு 60-70 வருடங்களுக்கு முன்னதாக 8-10 குழந்தைகளைப் பெற்ற அந்த ” அந்தக்கால அம்மா “-க்களின் மீது அளவு கடந்த பிரமிப்பை உருவாக்குகிறது…..!!!!!!!
……………………………………………………
சாதாரணமாக பெண்ணின் பிறப்புறுப்பின் சுற்றளவு – சுமார் 3 1/2 இஞ்ச் அளவு தான் இருக்கும் ,
குழந்தையை பிரசவிக்கும் அந்த கணத்தில் குழந்தையின் தலையின் சுற்றளவு கிட்டத்தட்ட 15 இஞ்ச் ( 38 செ மீ) இருக்கும் , அப்படி என்றால் பிறப்பு உறுப்பு 5 மடங்கு விரிந்தாக வேண்டும் .
வெறும் சதை மட்டும் விரிவது கிடையாது இரண்டு இடுப்பு எலும்புகளும் பல இஞ்சுகள் விலகினால் தான் குழந்தையின் தலையும் மார்பும் வெளியே வர முடியும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இடுப்பின் இரண்டு எலும்புகளை விலக்கி கொண்டு குழந்தை வெளியே வரும் போது எவ்வளவு கொடூரமான வலி வரும் என்று …
குழந்தையின் தலை பிக்ஸ் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகள் விலக விலக வலி கூடிக்கொண்டே போகும். குழந்தை பிறக்கும் வரை வலி அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.
இந்த நேரத்தில் வலி ஊசி போடவே கூடாது .. போட்டால் பிரசவத்தில் தடை ஏற்பட்டு வயிற்றில் இருக்கும் குழந்தை மூச்சு திணறி இறந்து போகும். அந்த காலத்தில் இந்த வலியின் கொடுமை தாங்க முடியாமலே பெயின் ஷாக் வந்து இறந்து போன பெண்களின் எண்ணிக்கை அதிகம்
இந்த பெயின் ஷாக்கிலிருந்து பெண்ணின் உயிரை வீட்டு பிரசவத்தில் யார் காப்பாற்றுவது?
இரண ஜன்னி –
20 வருடங்களுக்கு முன் ஜன்னி பற்றி தெரியாத பெண்களும் ஆண்களும் கிடையாது . பிரசவ காலத்தில் சரியான தடுப்பூசி போடாமல் இருந்து பிரசவத்தின் போது தொப்புள் கொடியை அறுக்க சாதாரண கத்தியை கொண்டு அறுத்து அகற்றுவார்கள் ….அதனால் இன்ஃபன்ஷன் ஆகி டெட்டனஸ் எனும் இரண ஜன்னி வந்து செத்துப் போவார்கள் குழந்தையோ அல்லது தாயோ … எனக்கு தெரிந்து கடந்த 20 வருடங்களில் ஒரு பெண்ணோ,குழந்தையோ ஜன்னி வந்து செத்ததாக கேள்விப்படவே இல்லை.
கடைசியாக,குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளி வருவதை முடிவு செய்வது மருத்துவரோ தாயோ அல்ல.
அது குழந்தையின் முடிவு….!
பெண்ணின் உடல்கூறு பற்றி எதுவும் தெரியாமல் பேசாதீர்கள் ஆண்களே….
எனக்கு முதலாவது சிசேரியன்.. இரண்டாவது நார்மல். பாப்பா வெய்ட்டும் கூட…
இதை பத்தி நிறைய முறை பதிவு போடலாம்னு நினைப்பேன்… ஆனா சில விஷயங்களை சுற்றங்கள் கருதி வெளிப்படையாக பேச முடியுறது இல்ல.. இன்னமும் பெண்களின் உடல் பற்றியும் பிரசவம் பற்றியும் வெளிப்படையாக பேச பலரும் தயங்குவதாலேயே எனக்கு முதல் பிரசவம் சிசேரியனா போச்சு. இரண்டாவது பிள்ளைக்கு முழுக்க youtube பார்த்து வலி எப்படி வரும்னு research-லாம் பண்ணி அதுக்கேத்த மாதிரி என் மனசை தயார் செஞ்சு வச்சுகிட்டேன். ஒரு வாரமா வலி இருந்தும் hospital போகல.. வீட்டுலையே door handle புடிச்சு தொங்கிட்டு இருப்பேன். மூச்சு பயிற்சி செய்வேன். எல்லாம் youtube உபயம்.. …
முதல் பிள்ளை பிறந்தப்ப இல்லாத அனுபவம் எல்லாம் இரண்டாவது பிள்ளைக்கு அனுபவிச்சேன்.
சுகப் பிரசவம்னு பேர் வச்சவர் மட்டும் என் கையில் கிடைச்சார்னு வைங்க…….!!!
அதுக்குன்னு சிசேரியன் வலியே இல்லைன்னு சொல்ல முடியாது.. ரெண்டும் ஒன்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல.
உங்களை வாரிசாக தந்த தாயையும்,
உங்களுக்கு வாரிசை தந்த மனைவியையும் ஒரு நாளும் மனதளவில் நோகடிச்சுறாதீங்க….
…………………………..
(பல ஆண்கள் இதைப்பற்றி சீரியசாகவே யோசிப்பதில்லை…. அவர்களுக்காகவே இதை இங்கு பதிவு செய்கிறேன்… )
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….