……………………………………………………….

………………………………………………………..
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு
ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே,
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேயுயர் நாடு – இந்தப் (பாரு)
தீரத்தி லேபடை வீரத்திலே – நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே,
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேயுயர் நாடு – இந்தப் (பாரு)
நன்மையி லேயுடல் வன்மையிலே – செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே,
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின்
புகழினி லேயுயர் நாடு – இந்தப் (பாரு)
ஆக்கத்தி லேதொழி லூக்கத்திலே – புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைக்
கடலினி லேயுயர் நாடு – இந்தப் (பாரு)
வண்மையி லேயுளத் திண்மையிலே – மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேயுயர் நாடு – இந்தப் (பாரு)
யாகத்தி லேதவ வேகத்திலே – தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேயுயர் நாடு – இந்தப் (பாரு)
ஆற்றினி லேசுனை யூற்றினிலே – தென்றற்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபய னீந்திடுங் காலி
யினத்தினி லேயுயர் நாடு – இந்தப் (பாரு)
தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே – கனி
யீட்டத்தி லேபயி ரூட்டத்திலே
தேட்டத்தி லேயடங் காத நிதியின்
சிறப்பினி லேயுயர் நாடு – இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு
- சுப்ரமணிய பாரதியார்
(சுதந்திரம் பெறுவதற்கு பல ஆண்டுகள்
முன்னரே இயற்றிய பாடல் ….)
……………….
பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும் –
நம் நாட்டை சீர்குலைக்கும் – தீவிரவாதிகளையும்,
அவர்களை பின்னில் இருந்துக்கொண்டு இயக்கும்
அயோக்கியர்களையும்,
அவர்கள் எங்கே ஓடி ஒளிந்திருந்தாலும் –
தேடிப் பிடித்து அழிக்கும் உயர்ந்த பணியில்
ஈடுபட்டிருக்கும், இந்தியாவின் முப்படையினருக்கும் –
அவர்கள் தம் பணியில் முழு வெற்றி பெற நம் அனைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்,
உளமார்ந்த பாராட்டுகளும் உறு துணையாக
இருக்கட்டும்.
வாழ்க பாரதம்…
வெல்க இந்தியா … ஜெய் ஹிந்த் …👍👍👍
……………………………………………………………………………………………………………………………………………………………..



ஜெய் ஹிந்த். நாடு வெற்றிபெறட்டும். நம் இராணுவ வீரர்கள் நல்ல நலத்துடன் இருக்கட்டும்.
Solid Proof of Pakistans support to Terrorists-
……………………..
Funerals Of LeT Cadre Held In Muridke, Pak Army Personnel Spotted With Terrorists
லஷ்கர் இ தொய்பா தலைமையகம் மற்றும் மசூத் அசார் இருக்கும் லாகூரின் பகுதி No drone zone, கடுமையான மிலிடரி பாதுகாப்பு என்று ஆகிவிட்ட து. புலி வாலைப் பிடித்தவன் கதைதான் பாகிஸ்தானுக்கு. பயங்கரவாதிகளுக்கு புகலிடம், பயிற்சி, ஆயுதங்கள் கொடுப்பது, பாதுகாப்பு என்று ஆரம்பித்து இப்போது எங்கேயோ போய்விட்டது.
அங்குள்ள அரசியல்வாதிகளும், இராணுவத் தலைவர்களும் கொள்ளையடித்த பணத்தைவைத்து துபாய், லண்டன் என்று முதலீடு செய்து, பிரச்சனை என்றால் பாகிஸ்தானை விட்டுத் தப்பித்து ஓடிவிடுவார்கள்.