ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ஆதித்த கரிகாலன்
கொலை பற்றிய கல் வெட்டு உள்ள கோவில்….
………………………………………….

………………………………………….

………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………………………………………
” வீரநாராயணன் ஏரி “கேள்விப்பட்டிருக்கிறீர்களா …???
கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்கள் நிச்சயம்
அறிந்திருப்பீர்கள்…. ஆனால், அதன் பின்னணி …?
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்பவர்கள் வீராணம் ஏரியிலிருந்து
ஆர்ப்பரித்து வரும் அலைகள், அதன் கரைகளைத் தாக்குவதை
ரசிக்காமல் செல்ல முடியாது…
இந்த ஏரி சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்டசோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது…
சேத்தியாதோப்பில் இருந்து காட்டுமன்னார்கோயில் வரை ஏரி நீண்டு காணப்படுகிறது. வீராணம் ஏரி கி.பி. 907 முதல் 953 வரையில் ஆட்சிபுரிந்த சோழர்கள் காலத்தில் வெட்டப்பட்ட ஏரியாகும். முதலாம் பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தன் – தக்கோலம் போருக்கு செல்லும் வழியில் வட காவிரி என அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் நீர் வீணாகக்
கடலில் கலப்பதை பார்த்து விட்டு அதனைத் தடுக்க எண்ணினான்.
அப்போது போருக்கு தன்னுடன் வந்த வீரர்களை அப்பகுதியில் ஏரி
ஒன்றை வெட்ட உத்தரவிட்டான். ஏரி வெட்டும் பணி நிறைவடையாத நிலையில் போருக்கு ஒரு பகுதி வீரர்களுடன் புறப்படும்போது ஏரியை வெட்டி முடித்ததும் ஏரிக்கு தனது தந்தையின் வீரப் பெயர்களில் ஒன்றான வீரநாராயணன் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று
கூறிவிட்டு போருக்குச் சென்றான்.
போரில் ராஜாதித்தன் யானை மீது அமர்ந்து போரிட்ட நிலையிலையே வீரமரணம் அடைந்தான். இதன் காரணமாக ராஜாதித்தன்,
‘யானை மேல் துஞ்சிய தேவன்’ என்றும் அழைக்கப்பட்டான்.
ஏரி வெட்டி முடிக்கப்பட்டதும் ராஜாதித்தன் விருப்பப்படியே ஏரிக்கு,
அவனது தந்தை, முதலாம் பராந்தக சோழனின் ஒரு பட்டப்பெயரான “வீரநாராயணன்” ஏரி என்று பெயரிடப்பட்டது. காலப்போக்கில் இந்த ஏரியின் பெயர் வீராணம் ஏரி என்று மருவியது. எவ்வித நவீன இயந்திரங்களும் இல்லாத அந்தக் காலத்தில் முழுக்க முழுக்க
மனித ஆற்றலால், அதுவும் படைவீரர்களால் உருவாக்கப்பட்டது
வீராணம் ஏரி.
வரலாற்றுச் சிறப்பு கொண்ட வீராணம் ஏரியின் கிழக்கு பிரதான
கரையின் மொத்த நீளம் 16 கிலோ மீட்டர் ஆகும். ஏரியின் மொத்த
சுற்றளவு 48 கிலோ மீட்டர். ஏரியின் மொத்த
அகலம் 5.6 கிலோ மீட்டர் ஆகும்.
ஏரியின் மொத்த பரப்பளவு 15 சதுர மைலாக உள்ளது. இந்த ஏரியின்
நீர்மட்ட அளவு 47.50 அடியாகும். ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 14.65 டிஎம்சி ஆகும்…. சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னரே சோழப்படை
வீரர்களால் செய்யப்பட்ட மகத்தான சாதனை…. அந்தக்காலத்தில்,
செயற்கையாக உருவாக்கப்பட்ட, உலகிலேயே பெரிய ஏரி இது….
இந்த ஏரியின் கரையில் அமைந்தது – சோழர் காலத்தில்,
வீரநாராயணபுரம் எனக்குறிப்பிடப்பட்ட இந்த ஊர். இது அக்காலத்திய கல்வெட்டுக்களில் “வீரநாராயண சதுர்வேதி மங்கலம்”
எனக் குறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காட்டுமன்னார் கோவிலும்
இதுவே….!!!
காட்டுமன்னார்கோயில், அடிப்படையில், ஒரு புகழ்பெற்ற
வைணவத் தலம்…. வைணவப் பெரியார்களான நாதமுனிகளும், அவரது மூதாதையரான ஆளவந்தாரும் தோன்றிய தலமாகும்.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை இந்த ஏரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அந்த புதினத்தில் இந்த ஏரி,
வீரநாராயண ஏரி என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
‘யானை மேல் துஞ்சிய தேவன்’- சோழ அரசன் ராஜாதித்தன்,
இங்கு எழுப்பிய -அந்த அளவிற்கு பழமையான – ஒரு சிவன் கோவிலைப்பற்றிய சிறப்பான காணொளியை தான் கீழே பதிப்பித்திருக்கிறேன்….
பண்டைத் தமிழரின் பெருமைக்கு மற்றுமொரு சான்று –
…………………..
……………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….