…………………………………..

………………………………..

……………………………………
இதனுள் போகும் முன்னர்,
கார்டியாக் அரெஸ்ட்டிற்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும்
என்ன வித்தியாசம் …? – என்பதை தெரிந்து கொள்வது அவசியம்….
மாரடைப்பு (கார்டியாக் அரெஸ்ட்) என்பது மிகவும் அவசர நிலையாகும்.
அதாவது இதய துடிப்பு நின்றுவிட்டது என்பதுதான் இதன் அர்த்தம்.
இதயத்துடன் நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும்.
இதனால் ஹார்ட் ரேட்டும், ரெஸ்பிரேட்டரி ரேட்டும் இருக்காது,
மூச்சும் இருக்கவே இருக்காது, இதயத் துடிப்பு நின்றுவிடும்.
உடல் ஜில்லென்று ஆகிவிடும். கண்களின் கருவிழி ஒரே இடத்தில்
நின்றிருந்தால் நோயாளி இறந்துவிட்டார் என புரிந்து கொள்ளலாம்.
இதயத்தின் செயல்பாடு நின்ற 15 நிமிடங்களில் நுரையீரலின்
செயல்பாடும் நின்றுவிடும். இதன் பிறகு மூளையின் செயல்பாடு
5 நிமிடங்கள்தான் இருக்கும். அந்த 5 நிமிடங்களில் சிபிஆர் செய்தால்
பிழைக்க வைக்க வாய்ப்பிருக்கிறது.
இதயம் துடிப்பது நின்று உடல் ஜில்லென ஆகி ஒருவர் மயங்கிவிட்டால்
அவருக்கு சிபிஆர் சிகிச்சை உடனே கொடுக்கப்பட வேண்டும்.
இப்படி கொடுப்பதன் மூலம் இதய துடிப்பை கொண்டு வரலாம்.
உடனே நுரையீரலும் செயலாற்றும். நோயாளியின் கான்சியஸ்ஸை
கூட திரும்ப கொண்டு வந்துவிடலாம்.
………
ஹார்ட் அட்டாக்கும் அவசர நிலைதான். ஆனால், இதிலிருந்து வித்தியாசமானது …..நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து கொடுக்கிறது இதயம்.
ஆனால் இதயத்திற்கே ரத்தத்தை சப்ளை செய்வது கரோனரி ஆர்ட்ரி
கொடுக்கிறது. கொழுப்பு நிறைய உணவுகளை உட்கொள்ளுதல்,
ரத்த அழுத்தம் அதிகரித்தல், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் போன்றவைகளால் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் முழுமையாக
அடைபடும் போது நெஞ்சு வலி ஏற்படும். இடது புற தோள் பட்டை
பகுதியில் வலி இருக்கும். மூச்சுத்திணறல், அதிக வியர்த்தல்,
தொண்டை அடைப்பது போல் இருக்கும். இதெல்லாம்
ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால்
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்,
காப்பாற்றிவிடலாம்.
……………
ஷாக் ட்ரீட்மென்ட் – கொடுக்கும்போது என்ன நடக்கிறது ….?
“நின்றுபோன இதயத்தில் மின்னியக்கத்தை (Electrical Activity)
மீண்டும் ஏற்படுத்தி, ஒரு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதுபோன்று இதயத்தின் செயல்பாட்டை ஸ்டார்ட் செய்வதற்காக இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது
என்ற தவறான பிம்பத்தைத் திரைப்படங்கள் உருவாக்கியிருக்கின்றன.
ஆனால் அது நிஜமல்ல….
ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் கருவியின் பெயர் `டிஃபிப்ரிலேட்டர்’ (Defibrillator). ஆனால், அதன் உண்மையான செயல்பாடும் திரைப்படங்களில் காட்டப்படுவதும் முற்றிலும் மாறுபட்டது என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக, இதயத்திலுள்ள அனைத்துச் செல்களும் சேர்ந்து ஒன்றாகச்
செயல்பட்டு இதயத்தைத் துடிக்க வைக்கும். இதயத்தின் மின்னியக்கம்
(Electrical Activity) என்பது இதயத்தின் ஓரிடத்தில் தொடங்கி,
குறிப்பிட்ட பாதை வழியாகச் செல்லும்போதுதான் இதயம் இயல்பாக
பம்ப் செய்யும்.
ஆனால், `வென்ட்ரிகுலர் ஃபிப்ரிலேஷன்’ (Ventricular fibrillation) எனப்படும் அசாதாரண இதயத்துடிப்பு ஏற்படும்போது மின்னியக்கத்தில்
அனைத்து செல்களும் தனித்தனியாக அதிர்வதுபோல் ஆடிக்கொண்டு
இருக்கும்.
விபத்தில் அடிபட்டு ரத்த இழப்பு ஏற்படுதல்,
மின்சாரம் தாக்குவது,
விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயல்வது எனப்
பல்வேறு காரணங்களால் இதயத்தில் அசாதாரணத் துடிப்பு ஏற்படலாம்.
அசாதாரணத் துடிப்பு ஏற்படும்போது இதயத்தின் இயக்கத்தை ஒருசேர நிறுத்துவதற்கு இந்தக் கருவியின் மூலம் ஷாக் கொடுக்கப்படும்.
இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், இதயத்துடிப்பை நிறுத்தும் பணியைத்தான் இந்தக் கருவி செய்யும். இந்தச் சிகிச்சையின்போது சில விநாடிகளுக்கு இதயம் ஸ்தம்பித்து நின்றுவிடும்.
டிஃபிப்ரிலேட்டர்' மூலம் ஷாக் கொடுக்கப்பட்டு இதயத்துடிப்பு நின்றுபோனதும் இதயத்துடிப்பை மீட்கச் செய்யும் சி.பி.ஆர்’ எனப்படும் ‘கார்டியோபல்மோனரி ரிசசிட்டேஷன்’ (Cardiopulmonary Resuscitation – CPR) என்ற முதலுதவி செய்யப்படும்.
நோயாளியின் நடுநெஞ்சுப் பகுதியில் உள்ளங்கைக்கு மேல் மற்றொரு
கையின் உள்ளங்கையை வைத்து, உடல் உள்ளே அழுந்துமாறு
அழுத்தி அழுத்தி எடுப்பதுதான் இந்தச் சிகிச்சை.
இப்படிச் செய்யும்போது இதயத்தின் மின்னியக்கம் இயல்பாக
எங்கிருந்து தொடங்குமோ அங்கிருந்து தொடங்கி சீரான பாதையில்
செல்லும். ஷாக் கொடுத்ததும், அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு
சி.பி.ஆர் கொடுத்துவிட்டு, ஈ.சி.ஜி பரிசோதனை செய்யப்படும்.
அப்போதும் இதயத்தின் செல்கள் வழக்கத்துக்கு மாறாகத் துடித்துக்
கொண்டிருந்தால் இந்த இரண்டு சிகிச்சைகளையும் மீண்டும் செய்ய
வேண்டும். ஷாக் கொடுக்கும்போது உடல் தூக்கிப் போடும்.
திரைப்படத்தில் காட்டப் படுவதில் சரியான விஷயம் இது மட்டும்தான்.
உடலிலுள்ள தசைகளில்எல்லாம் மின்னியக்கம் ஏற்படுவதால்
உடல் அப்படித் தூக்கிப் போடும்.
எத்தனை முறை ஷாக் கொடுக்கலாம்?
பிறந்த குழந்தை முதல் 100 வயதான முதியவர்கள் வரை அனைவருக்கும்
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தச் சிகிச்சையைக் கொடுக்கலாம்.
ஒரு நோயாளிக்கு இரவு முழுவதும் 30-40 முறை ஷாக் கொடுத்து,
அவரின் இதயம் சீராக இயங்குவதைப் பார்த்திருக்கிறோம்.
இந்த சிகிச்சை 98% பாதுகாப்பானதுதான். ஆனால், எந்த ஒரு செயற்கையான விஷயத்தையும் உடலின் வெளிப்புறத்திலிருந்து செய்யும்போதும் அதற்கான பக்கவிளைவுகள் இருக்கும்.
ஆனால் – இந்தச் சிகிச்சையின் மூலம் நிரந்தர பிரச்னைகள் எதுவும் ஏற்பட
வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்…..
.
………………………………………………………………………………………………..…..



[…] […]