……………………………………………………….

……………………………………………………………
.
………………………………………………………………………………………………………………..
……………………………………………………….

……………………………………………………………
.
………………………………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
சரி சரி… ஏதோ இந்த ‘மூத்த பத்திரிகையாளர்’ மணி, உத்தமர் மாதிரி பேச ஆரம்பித்துவிட்டார் (சத்தியம் தவறாமல் உத்தமர் போலவே நடிக்கிறார் பாடல் ஏனோ என் காதுகளில் ஒலிக்கிறது). நிற்க…
மணி என்ன எதிர்பார்க்கிறார்? கமலஹாசன் நியாயம் பேச, மக்களுக்கு நல்லது செய்ய, பொதுவாழ்வில் தூய்மை/ஒழுக்கம் போன்றவற்றை எடுத்துரைக்க அரசியலுக்கு வந்திருக்கிறார், அதனால் நேர்மையாக நடந்துகொள்வார் என்று நினைத்திருந்தால், ‘மணி’ முன்னப்பின்ன அரசியல்னா என்னன்னே தெரியாதவர்னு அர்த்தம். ‘அரசியல்’ மற்றும் ‘அரசியல் கட்சி’ன்னா என்ன என்ற அரிச்சுவடி அவருக்குத் தெரிந்திருந்தால், கமலஹாசன் பேச்சைக் கேட்டு இப்படிப் பொங்கியிருக்கமாட்டார்.
இன்றைக்கு இறந்தவுடன், அவர் உத்தமர், நேர்மையாளர், ஊருக்கு உழைத்தவர், தனக்கில்லாதபோதும் தன்னிடம் இருந்ததைப் பிறருக்குக் கொடுத்த பண்பாளர் என்று (அவர் உண்மையிலேயே அப்படித்தான்) காமெடி நடிகர் மயில்சாமியை அனேகமாக எல்லோரும் கொண்டாடுகின்றனர். அவர் கோவிட் காலத்தில் (அல்லது சுனாமி? நினைவில்லை) அவரது வீடு இருக்கும் தொகுதியில் மக்களுக்கு நல்லது செய்தார். பிறகு அவர்களுக்கு அதிகாரத்தில் இருந்து உதவுவோம் என்று நினைத்து சுயேச்சையாக தேர்தலில் நின்றார். அவருக்கு யாரும் பிரச்சாரமோ இல்லை உதவியோ செய்யவில்லை (இன்றைக்கு ஆஹா ஓஹோ என்பவர்கள்). அவரது உதவியைப் பெற்றுக்கொண்ட மக்களும் அவருக்கு வாக்களிக்கவில்லை. அவரது தொகுதியிலேயே 1000 நேர்மையாளர்கள் மாத்திரம்தான் அவருக்கு வாக்களித்தனர். இன்றைக்கு காமராசர் தமிழகத்தின் மிகச் சிறந்த முதலமைச்சர் என்று கூறாத தமிழன் இல்லை. அவரை ஓட ஓட விரட்டி தேர்தலில் அவர் பிறந்த விருதுநகர் மண், மண்ணைக்கவ்வ வைத்தது. சவுண்டு ஜாஸ்தி என்றாலும் டி.ராஜேந்தர் (இப்போ நியூமராலஜில என்ன பேர் வைத்திருக்கார் என்று எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது), எம்.எல்.ஏ வாக இருந்தபோது ஒரு பைசா தொடாமல், தொகுதி மக்களுக்காக உழைத்தார். தமிழ் மக்களுக்கு உழைத்தால் என்ன கிடைக்கும்? அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார்கள். எஸ் வி சேகரும் தொகுதிக்கு நல்லது செய்தவர்தாம்.
சாதாரணனான எனக்கு டக் என்று தெரிந்தது, வெளிச்சத்தில் இருக்கும், நிறைய படிக்கும் அனுபவசாலியான கமலஹாசனுக்குத் தெரியாதா? அதனால்தான் தேர்தலில் நின்று ஜெயிப்பது என்பது கஷ்டம், என்றைக்கு இருந்தாலும் தனக்கு ஸ்பான்ஸர் செய்பவர்கள் போடும் பாட்டுக்கெல்லாம் ஆடவேண்டும். நிறையபேரை (கட்சிக்காரர்களை) அட்ஜஸ்ட் செய்யணும்.. மேக்கப் போட்டு அலுங்காமல் குலுங்காமல் நடித்து கோடிகளைச் சம்பாதித்த தனக்கு அது மிகவும் கொடுமையான வேலை. அதைவிட இரண்டு பேருக்கு (இரண்டரை பேருக்கு… அதாவது ராகுல், ஸ்டாலின் மற்றும் உதயநிதி) ஜால்ரா போட்டால், நோகாமல் ராஜ்யசபா எம்.பி. ஆகிவிடலாம் என்று அரசியல் கணக்கை சாமர்த்தியமாகப் போடுகிறார்.
10 கோடி அதிகமாகக் கொடுத்தால் ‘பயங்கரவாதி’ வேஷத்தையும் திரைப்படத்தில் போடுவேன், பிச்சைக்காரனாகவும் நடிப்பேன், மன்மதலீலை டைப் படங்களிலும் நடிப்பேன் என்று கொள்கை முடிவோடு இருக்கிறவர்கள், ராஜ்யசபா எம்பி ஆக, இது மட்டுமா செய்வார். பொறுத்திருங்கள். என்ன என்ன அவதாரங்கள் எடுப்பார், எவ்வளவு சரளமாகப் பொய் பேசுவார் என்று பாருங்கள். இப்பவே ‘அருவருப்பான கோழை’ என்றெல்லாம் பட்டம் கொடுக்க ஆரம்பிக்காதீங்க. அப்புறம் கொடுப்பதற்கு உங்களிடம் பட்டங்கள் இருக்காது.