….
….

….
நடிகவேள் எம்.ஆர்.ராதா ஹீரோ-வில்லனாக நடித்த
முதல் படம் – “ரத்தக் கண்ணீர்” –
யாரால் மறக்க முடியும்…?
1954-ல் வெளிவந்து தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கி,
தலைகீழாக புரட்டிப் போட்ட படமாயிற்றே…!
முழுப்படத்தையுமே கூட பார்க்க இப்போது
வசதி இருக்கிறது….. ஆசையும் இருக்கிறது.
ஆனால் நிறையபேருக்கு நேரம் தான் இல்லை;
எனவே, நம்மால் முடிந்த உதவி – சுவாரஸ்யமான சில
காட்சிகள் மட்டும் இங்கே –
………………….
………………….
.
————————————————————————————————————————-



இந்தப் படத்தை நான் எம்.எஸ்.சி படிக்கும்போது ஹாஸ்டலில் இருந்து கொட்டகைக்குப் போய் மூன்று இரவுகள் தொடர்ந்து பார்த்தேன். அதற்குப் பிறகு வேலைக்குப் போன பிறகு இந்த கேசட்டை வாங்கிப் பல முறை பார்த்திருக்கிறேன். படத்தில் அவர் பேசுவதைக் கேட்க சில சமயம் கஷ்டமாக இருக்கும், நம் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதால், ஆனால் அவர் சொல்வதை எதிர்த்து வாதாடுவது சுலபமல்ல. அவர் சொல்வதில் உண்மை பெரும்பாலும் இருப்பதால். இவர் செய்த மாபெரும் தியாகம், உதவி எல்லாமே மறக்கப்பட்டுவிட்டது, இவர் செய்த ஒரே ஒரு தவறால் எல்லோரும் அவரை விட்டு சுயநலவாதியாக ஓடி விட்டார்கள். ஒருவரையும் வஞ்சியாத குணம், பிறருக்கு உதவும் குணம், தான் நம்பியவைகளுக்காக நாடகம் நடத்தி மக்கள் ஆதரவைப் பெற்றது, எந்தத் தவறுகள் செய்தபோதும் அதில் நேர்மையாக நடந்துகொண்டது (கருணாநிதி போல, ஒருவரிடம் சென்றுவிட்டு காசை ஏமாற்றி அவருடைய காசையும் பிடிங்கிக்கொண்டு ஓடி வரும் இழிகுணம் இவரிடம் கிஞ்சித்தும் இல்லை)
தன் பையன், (ராதாரவி) நாடக சம்பந்தமாக இவரிடம் வேலை செய்துவந்தார். 10-11 ரூபாய் சம்பளம். தன் அம்மா இருந்தால் அப்பா கொஞ்சம் இரங்கிப் பேசுவார் என்று எதிர்பார்த்து, சம்பளம் கொஞ்சம் அதிகமாக்கக் கேட்டபோது, நீ சொல்றது சரிதான், இந்தச் சம்பளம் உனக்குக் கட்டுப்படியாகலை என்று நீ நினைக்கிற, ஆனால் என்னால் அதிகம் கொடுக்க முடியாது, அதனால் நான் வேறு ஆளைப் போட்டுக்கறேன் என்று பட் என்று சொன்னாராம். யாரை நம்பியும் தான் இல்லை என்று எப்போதும் தன் திறமையையே நம்பி வாழ்ந்தவர். அவரது கதையைப் படிக்க பிரமிப்பாக இருந்தது. நேர்மையானவர் என்றே என் மனதில் அவரைப் பற்றிய அபிப்ராயம் ஏற்பட்டது.
நீங்கள் எழுதுவதில் பல இடுகைகள் என் எண்ண அலைகளை எழச் செய்கின்றன.
.
புதியவன்,
// நீங்கள் எழுதுவதில் பல இடுகைகள்
என் எண்ண அலைகளை எழச் செய்கின்றன. //
வரவேற்கிறேன்.
நான் ஒருவன் எழுதுவதற்காக மட்டுமல்ல
இந்த BLOG….
என் கருத்தை, எண்ணங்களைத் தான்
இடுகையிலேயே சொல்லி விடுகிறேனே…
பின்னூட்டம் பகுதி வாசக நண்பர்களுக்கான
இடம். அதனால் தான் அவசியம் இருந்தால்
மட்டுமே நான் அங்கே எழுதுகிறேன்.
நண்பர்கள் தங்கள் அனுபவங்களையும்,
எண்ணங்களையும் பின்னூட்டங்கள்
மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று
நான் அடிக்கடி வேண்டிகோள் விடுக்கிறேன் –
பார்த்திருப்பீர்களே…
பலரது கருத்துகளும், அனுபவங்களும்
இங்கு இடம் பெறும்போது, இந்த இடம்
இன்னும் சுவாரஸ்யமானதாக ஆகிறது.
இன்னும் வலுவுள்ளதாக மாறுகிறது.
சிலருக்குத் தான் தங்கள் எண்ணங்களை
நன்றாக வெளிப்படுத்த வருகிறது. உங்களுக்கு
அது நன்றாக கைவருகிறது….
நிறைய எழுதுங்கள்… நானும், நண்பர்களும்,
உங்கள் அனுபவங்களையும் தெரிந்துகொள்ள
காத்திருக்கிறோம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்