….

….
பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்
கேள்வி-பதில்….
(இது டோக்லாம் மோதலில் 20 இந்திய சிப்பாய்கள்
கொல்லப்பட்டதற்கு முன்பாக நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி..!!! )
…
…
.
————————————————————————————————————————
….

….
பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்
கேள்வி-பதில்….
(இது டோக்லாம் மோதலில் 20 இந்திய சிப்பாய்கள்
கொல்லப்பட்டதற்கு முன்பாக நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி..!!! )
…
…
.
————————————————————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
காவிரி மைந்தன் சார்.. எனக்கு ஒரேஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பார்களா? தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருப்படியாக ஒருவருமே தமிழகத்தில் நல்லது செய்யவில்லையா, அவர்களிடமிருந்து தலைவர்களாக ஆனவர்களில்? ஒரு…
//ஈவெரா உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை// ஈவெரா இவற்றில் என்ன என்னவற்றைச் செய்தார், அதற்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
வர்த்தகத் துறையில் சட் என்று எதையும் தடை செய்துவிட முடியாது. ஆனந்த் ஸ்ரீநிவாசன் சொல்வது தவறுன்னு நினைக்கிறேன். இதே லாஜிக்தானே சாராயத்துக்கும் குட்காவுக்கும் சிகரெட்டுக்கும். ஏன் அரசு ‘குடிக்காதே, பிடிக்காதே, துப்பாதே’ என்று விளம்பரம் கொடுத்துச் செலவழிக்கணும்? இந்த மூன்று தயாரிப்புகளை இந்தியாவில் நடத்துவது தேசத்துரோகம் என்று சொல்லிடவேண்டியதுதானே. ஏன் மக்களை, இதைச் செய்தால் இந்தப் பிரச்சனை வரும், அதனால் உபயோகிக்காதீர்கள் என்று சொல்கிறது? ஏன் கஞ்சா போன்ற drugsஐ மட்டும் தடை செய்கிறது? யோசியுங்கள்.
ஆ.ஸ்ரீ சொல்வதில், அண்மையில் கொடுக்கப்பட்ட காண்டிராக்டுகள் பற்றிச் சொன்னது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் நினைப்பது, ‘வரவு சில கம்பெனிகளை செலக்ட் செய்தால் அதிகமாக இருந்திருக்கும்” என்பதுதான். அதே காரணத்துக்காகத்தான் நம்ம ஊரில் பாலம், மருத்துவ இன்ஷ்யூரன்ஸ், புதிய தலைமைச் செயலக கட்டிடம் போன்ற பலவற்றை துபாயைச் சேர்ந்த கம்பெனி ஒன்றிர்க்குத் தாரை வார்த்தார் கருணாநிதி. படேல் சிலையின்போதும், இந்தியக் கம்பெனி, சைனா கம்பெனி மூலமாகத்தான் execute செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்று. இல்லாவிட்டால், நாம் சட்டப்படி நடந்துகொள்வதால்கூட தடை செய்வதில் பிரச்சனை இருக்கலாம். சீனாவிற்கு சட்ட திட்டங்கள் கிடையாது, அது ஒரு சர்வாதிகார ஆட்சி. இந்தியா அப்படி இல்லையே.
நம் மக்கள்தான், சீனப் பொருட்களை வாங்க வெட்கப்படணும். அரசு, தன் அரசாங்கத்துக்கு எதிராக, இந்தியாவுக்கு எதிராக டிக்டாக் அல்லது எந்தச் செயலியும் நடந்துகொள்ளாதவரை அதைத் தடை செய்ய இயலாது. மக்கள் இந்தச் செயலியை உபயோகப்படுத்தும்வரை, நம் இராணுவ வீரர்கள் இறந்ததற்காக துக்கத்தை வெளிப்படுத்துவது அக்மார்க் நடிப்புதான், அவர்கள் மனத்தளவில் இந்திய நாட்டிற்கு விரோதிகள்தாம்.
புதியவன்,
// இதே லாஜிக்தானே சாராயத்துக்கும்
குட்காவுக்கும் சிகரெட்டுக்கும்.
ஏன் அரசு ‘குடிக்காதே, பிடிக்காதே,
துப்பாதே’ என்று விளம்பரம் கொடுத்துச்
செலவழிக்கணும்? இந்த மூன்று
தயாரிப்புகளை இந்தியாவில் நடத்துவது
தேசத்துரோகம் என்று சொல்லிட
வேண்டியதுதானே. ஏன் மக்களை,
இதைச் செய்தால் இந்தப் பிரச்சனை
வரும், அதனால் உபயோகிக்காதீர்கள்
என்று சொல்கிறது? //
சாராயம், குட்கா, சிகரெட் ஆகியவற்றோடு
டிக் டாக்’கை நீங்கள் ஒப்பிடுவது
சரி என்று தோன்றவில்லை.
முதல் மூன்றிலும், அரசுக்கு வருமானத்தில்
பங்கு இருக்கிறது. வியாபாரிகளுக்கு பங்கு
இருக்கிறது. நிறைய பேரின் வேலை
வாய்ப்புகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
ஆகையால் தான் அரசு நேரடியாகத்
தடைபோடவில்லை.
ஆனால், டிக்-டாக்’கில் இவை எதுவுமே
சம்பந்தப்படவில்லையே…?
டிக் டாக்’கை தடை செய்வதால் அரசுக்கு
எந்த விதத்தில் இழப்பு…?
நஷ்டம் ஏற்படப்போவது சீனருக்குத் தானே ?
ஆனந்த் ஸ்ரீநிவாசனின் கேள்விக்கு நீங்கள்
பதில் அளிக்கவில்லை; மாறாக பொருத்தமற்ற
உதாரணங்களை காட்டுகிறீர்கள் என்று
நினைக்கிறேன்.
டிக்-டாக்’கை தடைசெய்ய அரசு மறுப்பது ஏன்…?
சரியான, பொருத்தமான காரணங்களை –
முடிந்தால் சொல்லுங்களேன்.
( மக்கள் தாங்களாகவே இதை தவிர்க்க வேண்டும்
என்பதை நான் ஏற்கெனவே வலியுறுத்தி
வருகிறேன்… அதை விடுங்கள்…
ஆனால், அரசு செய்யாமலிருக்க என்ன காரணம்…? )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்