…
…
என் அந்தக்கால நண்பர் ஒருவர்… உயிர் நண்பர்…
ஆனால், நான் அவரை கடைசியாகப் பார்த்து
40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன…ஏன்..?
” வேணு ” என்கிற வேணுகோபாலன் …..
அப்போது, நானும் அவரும் திருச்சியில்
ஒரே அலுவலகத்தில் தான் பணிபுரிந்து வந்தோம்.
இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது.
இருவரும் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தோம்…
இருந்தாலும், தினமும் காலையிலும்,
மாலையிலும் நிச்சயம் சந்தித்துக் கொள்வோம்.
அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் (Sportsman )…
‘volley ball’ விளையாட்டில்
மாநில அளவில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்….
அதே சமயம் ‘tennis’ விளையாட்டில் தேசிய அளவில்
விளையாடிக் கொண்டிருந்தார்.
நல்ல பணக்கார குடும்பப் பின்னணி.
நல்ல உடற்பயிற்சி.
நல்ல உடல்வாகு… ஆறடி உயரம்…
ஆஜானுபாகுவாக இருப்பார்.
ஆனால், மிக மிக soft-ஆன மனிதர்.
அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை…
எத்தகைய நிலையிலும் கோபப்பட மாட்டார்.
நான் இதற்கு நேர் எதிர்…
ஞாயிறு காலைகளில் மட்டும் badminton விளையாடுவேன்.
நிறைய படிப்பேன், சமூக நலம், தொழிற்சங்கம் என்று
வேறுவித ஈடுபாடுகள்…
எங்கே, யாருக்கு பிரச்சினை என்றாலும் போய் நிற்பேன்…
தீர்வு காண என்னால் முடிந்ததைச் செய்வேன்.
தவறுகளை பொறுத்துக் கொள்ளவே மாட்டேன்.
மிகவும் சூடானவன் –
ரொம்பவும் கோபப்படுவேன்…
(இதெல்லாம் – அந்தக்காலத்தில்….!!!)
வேணுகோபால் அந்த காலத்திலேயே ஸ்கூட்டர் வைத்திருந்தார்.
ஒரு நாள் மதியம் 12 மணியளவில் உணவு இடைவேளையில்,
சாப்பிடுவதற்காக வீட்டிற்கு போனார்….
வண்டியை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு
உள்ளே போய் சாப்பிட்டு விட்டு,
மீண்டும் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு
ஒரு மணிக்குள் ஆபிஸ் வர வேண்டும்…
ஆனால், அன்று, சாப்பிடப்போனவர்
மீண்டும் திரும்ப வரவே இல்லை.
….
….
—————————————————————-
தொடர்ந்து பார்க்க -கேட்க,
இன்று பதிவாகியிருக்கும்
விமரிசனம் – காவிரிமைந்தன் காணொளி 07 – கீழே …
…
…
.
—————————————————————————————————————————————————————



விதி, முன்வினைப்பயன் போன்றவற்றில் நம்பிக்கை இல்லையென்றால், இத்தகைய நிகழ்வுகளை எதிர்கொள்வதோ காரணம் அனுமானித்து மனதை சமாதானப்படுத்திக்கொள்வதற்கோ முடியாது. வாழ்க்கையில் எத்தனையோ இத்தகைய தருணங்களை எதிர்நோக்குகிறோம்.
இன்றைக்கு சிந்திக்கும்போது வேணு அவர்களுக்கு அநாயச மரணம் என்று மனதில் நினைத்துக்கொள்ளலாம், ஆனால் அதனால் அவர் குடும்பம் என்ன பாடு பட்டிருக்கும், அவரே மனதில் எத்தனை திட்டங்கள் வைத்திருந்திருப்பார்…
புதியவன்,
“காலம் ” ஒன்று தான் இந்த மாதிரி இழப்புகளுக்கு
ஒரே மருந்து; ஆறுதல்.
இப்போது இதைப்பற்றி சகஜமாக என்னால் எழுத
முடிகிறது… ஆனால் – அந்த சமயத்தில்
எதுவுமே ஆறுதலைக் கொடுக்கவில்லை…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்