…
…
…
இவர் அங்கு மாற்றலாகி பொறுப்பேற்றுக்கொண்டபோது,
ஹிமாசல் பிரதேஷின், சிம்லா நகரம், “கடந்த 72 ஆண்டுகளில்
இங்கு பொறுப்பு ஏற்கும் முதல் பெண் காவல்துறை அதிகாரி”
என்று சொல்லி இவரை வரவேற்றது.
அங்கு DSP பொறுப்பில் இருந்த காலத்தில்,
6 கொலை வழக்குகளுக்கு தீர்வு கண்டதும்,
அங்கு அட்டகாசம் செய்துகொண்டிருந்த போதை மருந்து
கும்பலைச் சேர்ந்த பலரை சிறையில் அடைத்ததும்,
பலத்த காவலுடைய சிறையிலிருந்து தப்பிச்சென்ற
இரண்டு கொலைகாரர்களையும், ஒரு கற்பழிப்பு
குற்றவாளியையும் – இரவு முழுவதும் துரத்திச் சென்று
மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்ததும் –
இவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
நாம் பெருமை கொள்ள வேண்டிய
ஒருவரை சந்தியுங்கள் – சௌம்யா சாம்பசிவன் –
…

…
கற்பழிப்பு சம்பவங்கள் நிறைய நடக்கும் பிரதேசத்தில்
இருந்த ஏழைப்பெண்களுக்கு, தங்களை சுலபமாக
தற்காத்துக் கொள்ளும் வழியை சொல்லித்தரும்
ஒரு காணொளிக் காட்சி கீழே –
சாதாரணமாக வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை
கொண்டு, பெப்பர் ஸ்ப்ரே தயார் செய்வது எப்படி
என்று அந்த பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.
தேவையானவை இவ்வளவு தான் –
மிளகாய்ப் பொடி,
மிளகுப் பொடி,
ரிபைன்ட் ஆயில் கொஞ்சம்,
நெயில் பாலிஷ் கொஞ்சம்,
எதாவதொரு பழைய ஸ்ப்ரே பாட்டில்…
எப்படிச் செய்வது என்பதை வீடியோவில் காணலாம் –
மொழி இதற்கு தடையாக இருக்காது….!!!
…
….
.
———————————————————————————————————-



சௌம்யா சாம்பசிவன் – தைரியமான, தெளிவான பெண்மணி.
பெருமையாக இருக்கிறது.
நம்ம ஊர்க்காரரோ ?