இந்த ஆண்டின் மிகச்சிறந்த நடிகருக்கான விருது…..



மனிதர் மட்டும் தானா நடிக்கின்றனர்…?
விலங்குகள், பறவைகள்…?

இந்த ஆண்டின் மிகச்சிறந்த நடிகருக்கான
விருதைப்பெறும் தகுதியுள்ளவரை
காண ஆவலாக இருக்கிறீர்களா….?

இந்த காணொளியை கண்டுவிட்டுச்
சொல்லுங்களேன் இவருக்கு
கொடுக்கலாமாவென்று … 🙂 🙂 🙂

.
———————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to இந்த ஆண்டின் மிகச்சிறந்த நடிகருக்கான விருது…..

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //The North American Heterodon species are known for their habit of thanatosis: playing dead when threatened.//

    நான் இந்தப் பாம்பு இறந்ததைப்போல நடிப்பதை (இரத்தம் வாயிலிருந்து வரும்படியாக) டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன்.

    பொதுவா நாம ‘வாத்து மடையன்’ என்று ஒருவரைத் திட்டுவதால், வாத்துக்கும் மூளை உண்டு என்பதைச் சொல்வதுபோல் காணொளி இருக்கு. இருந்தாலும் பாம்பு நடிப்பதுதான் இயற்கையின் ஆச்சர்யம் என்பது என் எண்ணம்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      நான் அந்த ‘வாத்து’ செய்ததைப் பார்த்தே
      வியந்தேன்.. இப்போது பாம்பு செய்வதைப்
      பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

      இது ஐந்து புலன்களுடையவை விலங்குகள் –
      என்கிற கன்செப்டையே கேள்விக்குறியாக்குகிறது
      இல்லையா .. ?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        நான் இன்னும் அதிசயத்தக்க காணொளியை தேர்ந்தெடுத்துப் போடவில்லை. அதில் அந்தப் பாம்பு இறந்ததுபோல் நடிப்பதில் ஒரு விசேஷம் உண்டு. தன் வாயிலிருந்து இரத்தத்தை வரவழைத்து அடிபட்டு இறந்ததுபோலக் கிடக்கும். தன் ஆபத்து நீங்கியவுடன் அந்த இடத்தை விட்டு அகன்றுவிடும். (அதன் உடலைப் பாதிக்காத வகையில் இரத்தம் மட்டும் வருவதற்கான glands அதற்கு இருக்கின்றன). விலங்குகள்/பறவைகள் தங்கள் உயிரைப் பாதுகாத்தல், தனக்கான உணவைத் தேடுதல், தன் சந்ததியை விருத்தி செய்தல் இவற்றில் மட்டும்தான் ஈடுபடுகின்றன. அவைகள் எந்தக் காலத்திலும் பாலிடிக்ஸில் (அடுத்தவன் குடியைக் கெடுக்க) ஈடுபடுவதில்லை. சொத்து சேர்க்க முற்படுவதில்லை. தனக்கு ஆபத்தில்லாத வரையில் தேவையில்லாமல் யாரையும் தாக்க முயல்வதில்லை. ஆனால் இதைவிட, அதனிடம் அன்பு செலுத்துபவரை அவைகள் அறிந்துகொண்டு திரும்ப அன்பைச் செலுத்துகின்றன (இருந்தாலும் அவைகள் விலங்குகள் என்பதை நாம் எப்போதும் மனசில் வைத்துக்கொள்ளவேண்டும். அதன் பருவம், மனநிலை, வயிற்று மற்றும் உடல் பசியை நாம் எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்ளணும். இல்லைனா நாமே பலியாகிவிட வாய்ப்பு இருக்கு).

        நாய்கள், பூனைகள் வளர்க்கிறவங்க, தங்கள் குழந்தைகளைவிட அவைகளிடம் அதிக சந்தோஷம் அடையறாங்க. இதுக்கு அவங்க காரணமாகச் சொல்வது, எதிர்பார்ப்பில்லாத அன்பை அவை அளிக்கின்றன என்பது.

        எனக்கும் மனசில் தோன்றுவது… நம் சமூகச் சட்டங்களிலும், சொத்து சேர்த்தால் சேர்ப்பவனிடம் (வரி போக) 100%ம், அடுத்த வாரிசுக்கு அதில் 50% மட்டும்தான் போக முடியும் என்றும், அத்துடன் முடிந்தது என்றும் இருக்கவேண்டும். அசையாச் சொத்து, சேர்த்தவரிடமும், அதற்கு அடுத்த வாரிசுக்குப் போகும்போது, மார்க்கெட் மதிப்பில் 50% அவர் கட்டினால் மட்டுமே அவரிடம் போகும் என்றும் இருக்கணும். ஒருத்தருக்கு 2-5 கோடி ரூபாய் இருந்தாலே இறக்கும் வரை நிம்மதியாக சாப்பிட்டு வாழ முடியும் என்று இருக்கும்போது எதற்கு இத்தனை வீடுகள், பல்லாயிரம் கோடிகள்? தனியார், கட்சி டிரஸ்டுகளையும் அரசு முழுவதுமாக ஒழிக்கணும். இவைகள்தான் சமூக imbalanceக்குக் காரணம்னு நினைக்கிறேன்.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


          புதியவன்,

          அரசியலில் இருப்பவர்களுக்கு இத்தகைய எண்ணங்கள்
          எல்லாம் வருவதில்லை…

          இத்தகைய எண்ணங்கள் உடைய நாமெல்லாம் என்றுமே
          அரசியலுக்கோ, அதிகாரத்திற்கோ வரப்போவதில்லை…

          எனவே, என்றைக்காவது ஒரு நாள் ஒரு “லீ க்வான் யூ”
          இந்தியாவிலும் தோன்றுவார் என்று கனவு
          கண்டு அதிலேயே திருப்தியடைய வேண்டியது தான்.

          .
          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

  2. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    It is a beautiful video. Tells lot of message.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.