…
…

…
எதிர்பார்ப்புகளே … ஏமாற்றத்துக்கான
காரணங்கள் ஆகின்றன…
எதிர்பார்ப்பில்லாமல் வாழப் பழகிக் கொண்டால்
ஏமாற்றங்கள் நம்மை பாதிக்காது…!!!
…
…
——————————————————————————
பின் குறிப்பு –
நண்பர்களுக்கு –
விவரம் தெரிந்தவர்கள் இது குறித்து சொல்லுங்களேன் –
தமிழ்மணம் வலைத்திரட்டி ( Blog Aggretor ) கடந்த இரண்டு மாதங்களாக
செயலிழந்து இருக்கிறது.. என்ன காரணம்…? இதைச் சரி செய்ய
எதாவது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா…?
விமரிசனம் தளத்தில் நண்பர்களின் வருகை (hits..) ஏறக்குறைய
அதே அளவில் தான் இருக்கிறது. நண்பர்கள் எப்படியாவது தேடி,
வந்து விடுகிறார்கள். ஆனால், நாம் போடும் பதிவுகள் சுடச்சுட
மற்றவர்களை சென்று சேர்வதில் – தாமதம் ஏற்படுகிறது.
மற்றொரு விதத்தில் கூட தமிழ்மணம் மிகவும் உதவியாக இருந்தது.
மற்ற வலைத்தள எழுத்தாளர்களின் படைப்புகளை அவ்வப்போது
உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு படிக்கவும் அது
உதவியாக இருந்தது. தமிழ்மணம் இயங்காமல் இருப்பது
மிகவும் சங்கடமாக இருக்கிறது. இது விரைவில் முன்போல்
இயங்க வாய்ப்பு இருக்கிறதா…?
விவரம் தெரிந்த நண்பர்கள் பின்னூட்டத்தில் எழுதுங்களேன்.
மற்றுமொரு விஷயம் – தமிழ்மணம் போல்,
அதற்கு இணையான வகையில்,
பல வலைத்தளங்களையும் ஒரே இடத்தில்
சேர்த்துத் தரும் வேறு வலைத்திரட்டியை பார்க்க
வேண்டுமானால் – நீங்கள் எதை
பரிந்துரை செய்வீர்கள்…?
.
-நன்றி, வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
———————————————————————————————————-




தமிழ்மணம் திரட்டியில் பல மாதங்களாக பிரச்சினை இருக்கிறது, தற்போது உள்ள சூழலை பார்க்கும் போது மீண்டும் சரியாக வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.எனக்கு தெரிந்து நல்ல திரட்டி என்பது முன்பு இண்ட்லி இருந்தது ஆனால் அதுவும் நிறுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. தற்போதையை நிலையில் சிறப்பான திரட்டிகள் தமிழில் இல்லை.
நன்றி ஜி.எஸ்.ஆர்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இதுபற்றி வேலூர் ராமரும் சென்ற மாதம் எழுதியிருந்தார் உண்மையிலேயே தமிழ்மணம் நிறுத்தப்பட்டுவிட்டது சோகமான சம்பவம் இருப்பினும் தற்போது lawtamil.blogspot.com இயங்குதளம் தொடர்ச்சியாக இயங்குகிறது
vic