…
…
…
இந்த காலிகளைப் பெற்ற
தாய், தந்தையரும்,
இவர்கள் படித்த பள்ளிகள்,
படிக்கும் கல்லூரிகளின் – நிர்வாகிகளும்,
வேடிக்கை பார்த்த காவல் துறையும்,
தமிழக அரசும் –
இந்த சம்பவத்திற்காக –
வெட்கித் தலை குனிய வேண்டும்…
” தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு ” – என்று
பாடிய நாமக்கல் கவிஞர் இப்போது
உயிருடன் இருந்திருந்தால் –
– இந்த காட்சியை கண்ட நொடியே
உயிரை விட்டிருப்பார்…
இதைத் தடுக்க இனி பொதுமக்கள் தான்
முன்வர வேண்டும்… இவர்களை மாணவர்கள்
என்று வகைப்படுத்துவது சரியல்ல…
இவர்கள் பொறுக்கிகள்… இந்த கயவாளிகளை
நிமிர்த்தி சரி செய்வது – இந்த சமூகத்தின்
கூட்டுப்பொறுப்பு …
பொதுமக்களே இனியும் இத்தகைய
பொறுக்கித்தனங்களை சகிக்காதீர்…
.
——————————————————————————————————–



அய்யா…! வருடா வருடம் நடக்கின்ற அட்டகாசம் ..இந்த வருடம் இதில் இன்னுமாெரு கல்லூரியை சார்ந்தவர்கள் இதுவரை காட்சிக்கு வரவில்லை ..மாமூலாக இரண்டு கல்லூரி மாணவர்கள் இந்த பஸ் டே …ரயில் டே காெண்டாடுவதும் ..தாக்கிக் காெள்வதும் வாடிக்கை ..கல்லூரி திறந்தால் இவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்துள்ள அரசு..கல்லூரிகள் …காவல்துறை பாேன்றவைகள் முன் நடவடிக்கை எடுக்காமல் பின்நடவடிக்கை எடுப்பதுதான் காலிகளுக்கு காெண்டாட்டமாக ஆகி விடுகிறதாே …?
very much shameful
மாணவர்கள் வரம்பு மீறி தான் செயல்படுகின்றனர் ….பெற்றோர்கள் தான் கண்டித்து வளர்க்க வேண்டும் . இந்த பருவத்தில் தான் வீட்டின் சூழ்நிலைகளை எடுத்து சொல்லி உண்மை நிலையை புரிய வைக்க வேண்டும் ,,,கேட்த்தை எல்லாம் வாங்கி கொடுத்து அவர்களை கெடுப்பதே பெற்றோர்கள் தான் …