“இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……”


நேற்றைய இடுகையைத் தொடர்ந்து,
இன்னொரு பாப்புலரான இடுகையை நண்பர் ஒருவர்
நினைவு படுத்தி இருக்கிறார்…
நேயர் விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பது தானே
நம் கடமை…!!!

அந்த இடுகை, மறுபதிவாக கீழே –
” இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……!!!
விமரிசனம் தளத்தில் மே 18, 2015 அன்று வெளியானது.

——————————————————————————–

.

நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த அளவிற்கு மோடிஜி
ரசிகர்கள் இருப்பார்கள் என்று….

நான் ராத்திரி கண் விழித்து ஒரே ஒரு போட்டோவுடன்
போட்ட இடுகை வேஸ்ட்….

“நேயர் விருப்பத்தை “ ஏற்று, இந்த நிமிடம் வரை
இங்கு வந்திருக்கும் புகைப்படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து
இந்த பதிவில் போடுகிறேன்.

இன்று மாலை வரை யார் வேண்டுமானாலும் புகைப்படங்கள்
அனுப்பலாம். மாலை வரை வரும் அத்தனை புகைப்படங்களையும்
“ஈவினிங்க் எடிஷனில்” சேர்த்துக் கொள்வேன்
என்று உறுதி கூறுகிறேன்…..!!!

spl.modiji-2

 

spl.modiji-4spl.modiji-5

spl.modiji-6

spl.modiji-7

 

modiji with horse in mangolia

” ஈவினிங் எடிஷன்”  ( மாலைப்பதிப்பில் சேர்க்கப்பட்டவை )

(” கொடை ” –  நண்பர் டுடேஅண்ட்மீ  )

 

m-9

 

m-10

 

m-11

 

m-12

 

m-14

 

m-15

m-16

m-17

m-18

m-19

m-20

m-21 m-22

 

m-8

 

 

———————————————————————————————————————-

பின் குறிப்பு –

இன்று தமிழகத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடக்கிறது…
அனைவரும் அவசியம் ஓட்டுப் போட வேண்டும்…

ஓட்டுச்சாவடிக்கு போகும் முன்னர் –

ஒரு மனிதரை நினைத்துப் பார்க்க வேண்டுமென்று மனதில் தோன்றுகிறது.

அன்பும், கருணையும், எளிமையும் – நிறைந்த மனிதர்…

தியாகமும், சத்தியமும், மனோவலிமையும் –
ஒருங்கே நிறையப் பெற்ற ஒரு அபூர்வ பிறவி…

அத்தனை வசதிகள் இருந்தும்,
ஒரு 4 முழ வேட்டியை மட்டுமே உடுத்தினார்…
எதை வேண்டுமானாலும் உண்ணக்கூடிய
வாய்ப்பு இருந்தும் – தன் வாழ்நாளில்
மூன்றில் ஒரு பகுதியை பட்டினியிலேயே கழித்தார்…
அனைத்து வசதிகளுடன் சௌகரியமாக
வாழ்க்கை நடத்த வாய்ப்பிருந்தாலும் –
பெரும்பாலான நாட்களை சிறையிலேயே கழித்தார்….

இந்த நாட்டு மக்களிடையே –
சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும்
போதித்த ஒரு மாமனிதர்…

இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மனிதர்…

அவர் ஏன் செத்துப்போனார்…
எப்படி செத்துப்போனார்…
யாரால் செத்துப் போனார்..
என்ன காரணத்திற்காக செத்துப் போனார்…?

என்று ஒருக்கணம், நமக்கு நாமே கேட்டுக்கொண்டு –
அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செல்வோம்…


.
——————————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to “இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……”

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    கோமாளித்தனமாக இருக்கிறது! குதிரை பக்கத்தில் குதிரை வேஷம் போட்டுக்கொண்டு வரவில்லை! அதுவரை பரவாயில்லை!

    It still does not make him a bad person, though!

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மனிதர்…// – ஏன் நேரு குடும்பத்துக்கு நாட்டை விற்றார், எதனால் காங்கிரசை கலைக்கவில்லை, ஏன் சுபாஷ் சந்திரபோசை ஒதுக்கினார், சுபாஷ் சந்திரபோஸ் நாட்டுக்குத் தேவையில்லை என்று ஏன் நினைத்தார், அதனால் நம் நாட்டுக்கு பின்பு எத்தகைய கெடுதல்கள் நிகழ்ந்தது, வெளிநாட்டு குடியுரிமை இருந்தவர்கள் நம் நாட்டுப் பணத்தைக் கொள்ளையடித்ததுமட்டுமல்லாமல், தாங்கள் பிறந்த நாட்டில் உள்ளவர்களைத் தப்பவைத்தற்குக் காரணகர்த்தாவாக இருந்ததையும் இன்றைக்கும் நம் நாட்டவர்களிடம் கட்சியை ஒப்படைக்காமல், வெளிநாட்டினர் நம் நாட்டுப் பணத்தைச் சூறையாடும் நிலைமைக்குக் கொண்டுவந்ததையும் நினைத்து, நாம் வாக்களிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். தமிழகத்துக்குக் கிடைத்த காமராசரை ஒதுக்கி தன் கட்சியிலிருந்து விலக வைத்து தமிழகத்தின் பிற்காலத் தலைகுனிவுக்குக் காரணமாக இருந்தது யார் என்பதையும் நினைக்கவேண்டும்.

    மத நல்லிணக்கம் என்பது சிறுபான்மை மதத்தவருக்குச் சார்பாக நடந்துகொண்டு, பெரும்பான்மையினரின் மதத்தை எள்ளி நகையாடுவதும், அவர்களின் கடவுளர்கள் இல்லை, இந்து மதத்தின் பண்டிகைகள் எதுவும் நாட்டுக்குத் தேவையில்லை என்று பேசுவதும் நடப்பதும்தான், என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் நாட்டுக்கு நல்லது நினைப்பவர்களா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    நம் நாட்டின் கவுரவத்தைக் கெடுக்கும் விதமாக, காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் ஊழல் செய்து, நாம் ஒரு விளையாட்டையும் ஒழுங்காக நடத்தும் திறமையற்றவர்கள் என்று உலகத்துக்குக் காங்கிரஸ் காட்டியதையும், எதிலும் ஊழல், கூட்டணி அரசு என்றால் கூட்டணிக் கொள்ளை என்பதைக் காண்பித்து பொம்மை பிரதமரை முன்னிறுத்தி நாட்டை சூறையாடியதையும், தமிழகத்தில் எல்லோரது நிலங்களையும் வீடுகளையும் அபகரித்து ரவுடிராஜ்ஜியம் நடத்தியதையும் நாம் நினைத்து, ‘மத உணர்வு’ ஒன்றையே கைக்கொள்ளாமல், நாட்டுக்கு யார் தலைமை நல்லது, சம்பல் கொள்ளையர்கள் போன்றவர்களா இல்லை தன் குடும்பத்தினருக்கு எந்த ஆதாயமும் இல்லாமல் நாட்டை வழிநடத்துபவர்களா என்பதையும் நாம் ஒரு நிமிடம் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

    • ஒரு ....(மதவெறி பிடிக்காத) ...தேசபக்தன்'s avatar ஒரு ....(மதவெறி பிடிக்காத) ...தேசபக்தன் சொல்கிறார்:

      புதியவன் – உங்கள் மதவெறியை தேசபக்தி என்கிற போர்வையில் நன்றாகவே நிரூபிக்க முயற்சித்திருக்கிறீர்கள். வெட்கக்கேடு.

    • Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

      புதியவன்

      நீங்க ஏன் சார் இவ்வளவு பதர்ரீங்க ?
      காவிரிமைந்தன் சார் யாருக்கு ஓட்டு போடணும்னு சொல்லவே இல்லையே.
      அதுக்குள்ள உங்களுக்கு ஏன் இத்தனை பதட்டம் ?
      வெவ்வேறு காஸ்டியூம்ல,விதம் விதமா ட்ரெஸ் போட்டுக்கிட்டு, கலக்கற
      நம்ம ஆளை சப்போர்ட் பண்ணாம, அந்த அரை நிர்வாண பக்கிரி சொன்னதை
      எல்லாம் இன்னைக்கி நினைவுபடுத்தினதுல இவ்வளவு ஆத்திரமா ?
      போங்க சார் வெறியர்களுக்கு வக்காலத்து வாங்காம,
      மனசாட்சியை தொட்டு வேலை பாருங்க.

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        எனக்குப் பதற்றமில்லை நண்பர்களே… நீங்கள் உங்கள் மனசாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

        காந்தி சொன்ன கொள்கைகளை, கடைபிடிப்பவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லை தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக நாட்டு நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுக்கிறீர்களா என்று. அப்படி நினைக்கும்போது, காந்தியின் எந்த எந்தக் கொள்கைகளை எந்தக் கட்சியினர் கடைபிடித்துள்ளார்கள் என்றும் யோசித்துக்கொள்ளுங்கள்.

        காந்தி, சீக்கிய சமூகத்தைக் கொல்லவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தாரா, இலங்கையின் தமிழர்களை அழித்தொழிக்கவேண்டும் என்பதை தன் வாழ்நாளின் கொள்கையாகக் கடைபிடித்தாரா, ‘ஆடி’ கார்கள் ஆயிரம் குவிக்கவேண்டும் என்ற கொள்கையைக் கற்பித்தாரா? மாடமாளிகைகள் கட்டி, பலப் பல தொழில்களில் அரசியல்வாதிகள் ஈடுபட்டு தங்களை உலகப் பணக்காரர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்ற லட்சியத்தைக் கற்பித்தாரா? ஆமாம்…அதனால்தான் நாங்கள் ‘இந்தக் கட்சியை/கூட்டணியை’ ஆதரிக்கிறோம் என்று சொல்லுவீர்களானால், ‘காந்தி’ என்பதற்கு 3 எழுத்து என்பதைத் தவிர உங்களுக்கு வேறு எதுவும் அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    • Gowri Gowrishankar's avatar Gowri Gowrishankar சொல்கிறார்:

      இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மனிதர், நேரு குடும்பத்துக்கு நாட்டை விற்கவில்லை, ஆனால் நேருவாலும், பட்டேலாலும், ஜின்னாவாலும் ஓரங்கட்டப்பட்டார். நிறத்தவரை அழித்தொழித்து போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஹிட்லருடன் ஒத்துப்போக முயற்சித்ததாலேயே (இம்முயற்சி வென்றிருந்தால் தென்னிந்திய மக்களனைவரும் ஒழிக்கப்பட்டிருப்பார்கள்) சுபாஷ் சந்திரபோஸை தவிர்க்கவேண்டி வந்தது.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! // இன்று தமிழகத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடக்கிறது…
    அனைவரும் அவசியம் ஓட்டுப் போட வேண்டும்…

    ஓட்டுச்சாவடிக்கு போகும் முன்னர் –// அந்த மஹாத்மா கூறிய ஒருசில வார்த்தைகளை நினைவில் கொண்டு செல்வது ஒரு ” நேர்மையான ” மன வலிமையை தரும் : —

    உன் எதிர்காலம், உன்னுடைய இன்றைய செயலில் தான் சார்ந்திருக்கிறது…. { முக்கியமான ஒன்று }

    நீ செய்ததற்கான பலன் என்னவாக வரப்போகிறது என்று உனக்கு தெரியாது, ஆனால் நீ எதுவும் செய்யாவிடில், எதுவுமே கிடைக்காது என்பதை உணர்…. { நடைமுறை எதார்த்தம் }

    மனிதர்களை திருப்தி படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை….. { எல்லாம் நானே என்கிற பேர்வழிகளுக்கு }

    உன்னை நீயே முழுதாய் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனில், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உன்னை நீயே தோற்கடிக்க வேண்டும்…. { இன்றைய தலைவர்களால் முடியாத ஒன்று }

    தவறு செய்யும் அளவு சுதந்திரம் இருப்பது எப்படி உணமையான சுதந்திரமாகும்?? …. { நெத்தியடி } வாக்களிக்க செல்லும் முன்

    // இந்த நாட்டு மக்களிடையே –
    சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும்
    போதித்த ஒரு மாமனிதர்…

    இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மனிதர்…

    அவர் ஏன் செத்துப்போனார்…
    எப்படி செத்துப்போனார்…
    யாரால் செத்துப் போனார்..
    என்ன காரணத்திற்காக செத்துப் போனார்…?

    என்று ஒருக்கணம், நமக்கு நாமே கேட்டுக்கொண்டு –
    அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செல்வோம்…// செல்வது அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி மட்டுமல்ல ஒரு கடமையும் கூட …!!!

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் எனது செயல்
    உங்களை ஏன்
    இவ்வளவு டென்ஷன் ஆக்குகிறது…?

    குஜராத்தியர் என்றாலே வங்கிகளில்
    கொள்ளையடித்து விட்டு வெளிநாடுகளில்
    ஆட்டம் போடுகிறவர்கள் என்றாகிவிட்ட நிலையில்,

    வெவ்வேறு மதத்தவரிடையே,
    மொழியினரிடையே -வன்முறையையும்,
    கலவரத்தையும், பயத்தையும் – ஊட்டுபவர்கள்
    என்றாகி விட்ட நிலையில்,

    இந்த மாதிரி ஒரு நல்ல மனிதரும்
    குஜராத்திலிருந்து பிறந்து வந்து
    அன்பையும், கருணையையும், சகிப்புத்தன்மையையும்,
    மதநல்லிணக்கத்தையும் –
    இந்த நாட்டு மக்களிடையே வளர்த்தாரே என்று –

    நான் பெருமையோடு சொல்வது
    உங்களுக்கு ஏற்புடையதில்லையா ?

    நான் என்ன இங்கு ஓட்டு பிரச்சாரமா
    செய்திருக்கிறேன்… ?

    நீங்கள் பாட்டிற்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல்
    வேறு எதையெதையோ சொல்லி இருக்கிறீர்களே ?

    என்ன ஆயிற்று உங்களுக்கு ?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Venkataramanan's avatar Venkataramanan சொல்கிறார்:

      //..குஜராத்தியர் என்றாலே வங்கிகளில்
      கொள்ளையடித்து விட்டு வெளிநாடுகளில்
      ஆட்டம் போடுகிறவர்கள் என்றாகிவிட்ட நிலையில்..//
      இவ்வாறு பொதுமைப்படுத்த வேண்டாமே ப்ளீஸ். அவர்கள் நமது விதிவிலக்குகளை வைத்து பொதுமைப்படுத்திப் பேசினால் ?

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! தேர்தல் நேரத்தில் சில மனிதர்கள் இப்படியும் : — // தேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக 40 தொகுதிகளைக்கூட தாண்டாது.. மோடிக்கு பாஜக சீனியர் தலைவர் கடிதம் //
    https://tamil.oneindia.com/news/delhi/if-there-are-free-elections-bjp-will-not-win-more-than-40-seats-ajay-agrawal-347197.html

  6. sharron's avatar sharron சொல்கிறார்:

    KM Sir the later part of yours is excellent. Nice writing. Keep it up.
    Happy to see todayandme back again.

  7. Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

    இத்தனை வகை வகையான, வண்ண வண்ண உடைகளை தேர்ந்தெடுக்க எவ்வளவு கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் – அவற்றை தைப்பதற்கு அளவெடுக்க,
    தைத்த பிறகு ஞாபகமாக ட்ரயல் பார்க்க,
    தைத்து வந்த பிறகு ட்ரை க்ளீனிங்க் செய்து தயாராக வைக்க,
    வெளிநாட்டிற்கு போகும்போது – கவனமாக அதையும் பேக்கேஜில் சேர்க்க,
    அந்தந்த நாடுகளுக்கு சென்ற பிறகு- கவனமாக அந்தந்த நேரத்திற்கு
    தகுந்த மாதிரி உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ள –
    அடேயப்பா – எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும் ?
    பாவம் சார் பி.எம்.மாக இருப்பது நிஜமாகவே கஷ்டம் தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.