…
…
நான் பார்த்து, பழகி, அறிந்த ஒருவரின் கதை…
ரொம்ப நாள் பின்னாடி எல்லாம் போக வேண்டிய அவசியமில்லை…
அண்மைக்காலம் வரை நம்மோடு இருந்த ஒருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் இது…
எளிமை என்றால் என்ன …?
மத நல்லிணக்கம் என்றால் என்ன…?
என்று – தமது சொல்லால் அல்ல –
செயலால் கற்றுக் கொடுத்த ஒருவர் குறித்த
உண்மைச் சம்பவம் இது….
இதைப் பதிவிட்டதற்கு யாரும் பொங்கிஎழ மாட்டார்கள் என்றே நம்புகிறேன்…!!!
…
…
…

.
——————————————————————————-



தமிழகத்தில் காமராசரைப் போன்று, இந்திய அளவில் எளிமையான மனிதர் கலாமை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. மிகச் சிறந்த தெரிவு, ஜனாதிபதிக்கு. அவர் அந்த மாளிகையைவிட்டுச் சென்றபோது அவரது சொந்த உடமைகளைமட்டும் கொண்டு சென்றவர். பிரதீபா பாட்டீல் அவர்கள் கொண்டு செல்லாதது, அந்த மாளிகையை மட்டும். ‘கலாம் கலகக்காரர்’ என்று சொல்லி, பிரதீபா பாட்டீலைக் கொண்டுவந்தது யார் என்று நான் எழுதத் தேவையில்லை. (சமீபத்தில் படித்தது, மன்மோகன் சிங், விலையுயர்ந்த பொருட்களை விலை குறைவாகக் காட்டி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் என்று)
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு என்று இவரைக் குறிப்பிட்டிருப்பதை முழுவதுமாக நான் ஏற்றுக்கொள்கிறேன். பாரத இளைய சமுதாயத்துக்கு ஒரு உதாரண புருஷர். எங்கள் ஊருக்கு அவர் வந்திருந்தபோது பள்ளிப் பிள்ளைகளும் இளைஞர்களும் எவ்வளவு எழுச்சி பெற்றனர், எவ்வளவு மனமகிழ்ச்சி உற்றனர் என்பதைக் கண்டவன் நான்.
இதற்கு முன்னால் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். கர்நாடகாவில் பொதுவாக தமிழர் எதிர்ப்பு உணர்வு எப்போதும் உண்டு. கலாம் மறைந்த பொழுதில் இங்கு நான் ஆபீஸ் வேலையாக வந்திருந்தேன். பார்த்த இடமெல்லாம் இரங்கல் பதாகைகள். மனதில் வெறுமையைத் தன் மறைவால் அனேகமாக எல்லோரிடமும் தோற்றுவித்தவர் கலாம். சரியான நபரை பதவிக்குக் கொண்டுவந்தது யார் என்றும் நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும், அந்தப் பதவிக்கு பெரும் கண்ணியம் சேர்த்தவர் நம் அன்பினுக்குரிய கலாம் அவர்கள்.