…
…

…
தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்து (மார்ச் 25),
ஏப்ரல் 16-ந்தேதி வரையுள்ள காலகட்டத்தில் மட்டும் –
சுமார் 655 கோடி ரூபாய் ( Rs 6,55,02,40,000 ) ரொக்கமாகவும்,
ரூபாய் 1,110 கோடி ( Rs 1,110.08 crore)
மதிப்புள்ள போதைப்பொருட்களும்,
ரூபாய் 503 கோடி ( Rs 503.497 crore ) மதிப்புள்ள
தங்கம் மற்றும் வெள்ளியும்,
ரூபாய் 49.6 கோடி (Rs 49.623 crore) மதிப்புள்ள
இலவச பரிசுப்பொருட்களுமாக –
மொத்தம் சுமார் 2,604.4 கோடி ரூபாய் மதிப்புள்ள
ரொக்கம் /தங்கம், வெள்ளி, /போதைப்
பொருட்கள் தேர்தல் நடைமுறைகளை மீறி எடுத்துச்செல்லப்படும்போது
போலீஸ் /பறக்கும் படையினரின் சோதனையில் சிக்கி இருக்கின்றன.
பிடிபட்டவை மட்டுமே இத்தனையென்றால் –
தேர்தல் சமயங்களில் செய்யப்பட்ட –
கணக்கில் வராத விளம்பரங்கள்,
பயணச் செலவுகள், கூட்டம் சேர்க்க
கொடுக்கப்பட்ட தொகைகள், வாக்காளர்களுக்கு
பட்டுவாடா செய்யப்பட்டு விட்ட தொகைகள் –
பட்டுவாடா செய்யப்படுவதற்காக பதுக்கி
வைக்கப்பட்டிருக்கும் தொகைகள் –
அனைத்தையும் சேர்த்தால் மொத்தம்
எத்தனை ஆயிரம் கோடிகள் இருக்கும்….???
இன்று தான் ஏப்ரல் 17. கிட்டத்தட்ட இன்னும்
ஒரு மாதம் (மே, 19 வரை) தேர்தல் முடியும் வரை
இன்னும் எவ்வளவு சிக்கப்போகிறதோ தெரியவில்லை…!!!
பாதாள அறைகளில், கோடவுன்களில்,
சாக்கு மூட்டைகளில், வேலைக்காரர்களின் வீடுகளில்,
வங்கி லாக்கர்களில், கன்டெயினர்களில் –
இன்னும் புதைந்துள்ள BLACKபணம் எத்தனை எத்தனையோ….?
தேர்தல் கமிஷன், அதிகாரபூர்வமாக வெளியிட்ட
புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் இந்த
இடுகை எழுதப்பட்டுள்ளது …..
…

…

…
ஒரே ஒரு கேள்வி தான் நமக்கு….
2016, நவம்பர் 8-ந்தேதி இரவு – 500-1000 ரூபாய்
நோட்டுகள் செல்லாக்காசுகளாகின்றன –
என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து –
நாட்டில் கருப்புப்பணம் உருவாவதற்கான,
பரவுவதற்கான வழிகள் அத்தனையும்
அடைக்கப்பட்டு விட்டதாக நமக்கு சொல்லப்பட்டது.
ஏற்கெனவே பதுங்கியுள்ள கருப்பு பணம் அத்தனையும்
அழிந்து போகும் அல்லது உரிய தண்டனை /கூடுதல் வரிகளுடன் –
அரசின் வசம் வசப்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டது.
இப்போது தேர்தல் சமயத்தில்
வெளியே வந்தது மாத்திரமே இத்தனை ஆயிரங்கள் என்றால்,
இன்னும் இந்த நாட்டில் எத்தனை கருப்புப்பணம் ஒளிந்திருக்கிறது….?
அப்படியானால் அவற்றை
அழித்து/ஒழித்து விட்டதாக நமக்கு சொல்லப்பட்டது…..???
.
————————————————————————————–



எதையுமே யாராலும் ஒழிக்கமுடியாது. குறைக்கத்தான் முடியும். இன்றைக்கும் எத்தனை கேஷ் டிரான்சாக்ஷன், ஜி.எஸ்.டி. போடாத பில்கள். எங்கே இத்தனை பணமும் செல்லும்? அவ்வளவும் கறுப்புப்பணமாகத்தான் போகும். இதைத் தவிர, நான் கேள்விப்பட்டது, என்.ஜி.ஓ. என்ற பெயரில் இருக்கும் பணம் இங்குள்ள கட்சிகளுக்குக் கொடுக்கப்படும், வெளிநாட்டில் அவர்களுக்கு ரீபே செய்யப்படும். எத்தனையோ வழிகள் கறுப்புப் பணம் சேர்வதற்கு. இதனை ஒழிப்பது என்பது சுலபமல்ல.
மன்மோகன் சிங், 20 ரூபாய் ஒரு நாள் சம்பாதித்தால் அவன் ஏழை கேட்டகரியில் வரவே மாட்டான் என்று புள்ளிவிவரம் கொடுத்து ஏழைகளை ஒழித்ததுபோல் சொன்னாரில்லையா, அதுமாதிரி, கறுப்புப் பணத்தை ஓரளவு தடுத்திருந்தாலும் முழுவதும் அழிக்கமுடியாது. பிடிபடுவது எப்போதும் இருப்பதில் 10% தான். இங்கு தங்க வைரக் கடத்தல்களும் மிக அதிகம்.
// எத்தனையோ வழிகள் கறுப்புப் பணம் சேர்வதற்கு. இதனை ஒழிப்பது என்பது சுலபமல்ல.//
அப்படியானால் அவற்றை
அழித்து/ஒழித்து விட்டதாக நமக்கு சொல்லப்பட்டது…..???
—– தெரிந்தே செய்யப்பட்ட FRAUD தான் என்கிறீர்களா ?
I have received this message through whatsapp group and doubt the genuineity:
https://economictimes.indiatimes.com/news/defence/reliance-defence-to-get-3-of-rs-30000-crore-offset/articleshow/66228334.cms
அய்யா … தேர்தல் — நல்ல தேர்தல் — யோக்கிய சிகாமணிகளை தேர்ந்து எடுக்க நடக்கும் தேர்தல் …? — ஆண்டவர்களும் உத்தமர்கள் .. ஆண்டுகொண்டு இருப்பவர்களும் உத்தமர்கள் … ஆளப்போகிறவர்களும் உத்தமர்கள் ..! கருப்பை வெள்ளையாக்க சலுகை திட்டம் — வெள்ளையாகவே கட்சிகளுக்கு நிதி வாரி வழங்க ஒரு அற்புத சட்டம் … இப்படியெல்லாம் இருந்தும் நீங்கள் கேட்கிற // ஒரே ஒரு கேள்வி தான் நமக்கு….// என்பதற்கு பதில் ….கப்-சிப் …!! அது இருக்கட்டும் …
தமிழ்நாட்டில் . 10 கோடி ரூபாய் பிடிபட்ட வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் போது மீதமுள்ள பல கோடி பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் ஏன் ரத்து செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது…. . தேர்தல் காலத்தில் பணம் பிடிப்பட்ட காரணத்தினாலே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றால் முதலிடத்தில் உள்ள குஜராத்திலும் — மற்ற மாநிலங்களிலும் எந்த ஒரு தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்ப்படவில்லை…. அது ஏன் என்று யாரும் கேள்வி எழுப்பாதது வேடிக்கை …? தேர்தலோ –தேர்தல்