.
தேர்தல் டென்ஷன்களுக்கிடையே ஒரு
ஜாலியான இடுகை போடலாமென்று தோன்றியது.
சரியான நேரத்தில் நண்பர் செல்வராஜன் இதை
நினைவுபடுத்தினார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு
முன்னதாக எழுதிய இடுகை இது….
நகைச்சுவையாக எழுதப்பட்ட இந்த இடுகையை அப்போது
நிறைய பேர் ரசித்தார்கள். ஒரு பக்கம் கடுப்பு இருந்தாலும் ,
இப்போதும் நண்பர்கள் ( பாஜக நண்பர்கள் உட்பட) ( 🙂 )
ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
(அப்போதைய காலகட்டத்தில், மோடிஜி -பிரதமர் பணிக்கு
புதியவர்… எனவே, இதையெல்லாம் மிகவும் விரும்பினாரென்று
சொல்லலாம்… ஆனால், இப்போதெல்லாம் இதிலேயே
திளைத்து, அலுத்து விட்டதால், வேறு தினுசு அனுபவங்களில்
இறங்கி விட்டார்…!!! அது இங்கே வேண்டாம்…
பிறகு, இந்த காமெடியை ரசிக்க முடியாமல் போய் விடும்…)
————————————————————————————————————–
விமரிசனம் இடுகை – நவம்பர் 25, 2015
—————
ஆனாலும் -” பி.எம். வேலை” ரொம்ப கஷ்டம் சார் ….!
—————
பிரதமர் வெளிநாடுகளில் டூர் போனால் ஜாலியா இருக்கார்னு நிறைய பேர் நெனைச்சுக்கிட்டிருக்காங்க…
அவர் படற அவஸ்தை அவருக்கில்ல தெரியும்…
என்னென்ன பண்ண வேண்டியிருக்குன்னு பார்த்தால் தான்
உங்களுக்கும் புரியும்.
க்ரூப் போட்டோவுக்கு நிக்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடும்….

கண்ட ட்ரெஸ்ஸை எல்லாம் மாட்டிக்கச் சொல்லி சங்கடப்படுத்துவாங்க …

கையை முறுக்கி எல்லாம் சுளுக்கு வராம பத்திரமா
போஸ் கொடுக்கணும் ….

பாக்கற மத்த நாட்டு பிஎம் கூட எல்லாம்
மறக்காம செல்பி எடுக்கணும் ….

என்ன வரப்போகுதுன்னு தெரியாம வெயிட் பண்ணணும்….

இது ஒண்ணு தான் திருப்தியான வேலை ….

தட்டு நெறைய எதிரே வெச்சிருந்தாலும்,
ஒண்ணு தான் சாப்பிடணும்….

தமிழர்களின் பெருமை –

Singapore: Prime Minister Narendra Modi with his Singaporean counterpart Lee Hsien Loong leaves , at Komala Vilas Restaurant, Little India, Singapore on Monday. PTI Photo(PTI11_23_2015_000309B)
பின் குறிப்பு –
நகைச்சுவையாக போடப்பட்ட இடுகை இது.
பாஜக நண்பர்கள் இதை ஸ்போர்டிவ்-வாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.
உண்மையில் நான் இந்த புகைப்படங்களை எல்லாம்
நான் மிகவும் ரசித்தேன்….
முதல் தடவையாக, தமிழர்கள் அதிகம் இருக்கும்
வெளிநாடுகளுக்குச் சென்று தமிழர்களின் முக்கியத்துவத்தை
பற்றியும் மோடிஜி அவர்கள் உணற ஒரு சந்தர்ப்பம் உண்டு
பண்ணியதற்காக, இந்த பயணத்தை நான் மிகவும்
ரசிக்கவே செய்தேன்.
.
———————————————————————————————————-



பி எம் ஆக தொடர வாய்ப்பிருக்கா?
வடக்கிலிருந்து வரும் செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில்,
பாஜக ஒரு பெறுத்த அடி வாங்கும் போல் தெரிகிறது.
உதாரணமாக,
NDTV யை சேர்ந்த Prannoy Roy, ஏப்ரல் 6ந் தேதி ஆங்கில ஹிந்து நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டதை சொல்லலாம். அந்த பேட்டியில் அவர் இப்படி குறிப்பிடுகிறார்,
/// Q:You make this point in the book about the hidden conservative voter. Given all the noise that the Indian right wing makes, does it hold true for our country too?
PR: Probably not. From my experience, in fact, it is the opposite. In the sense that the main support of the BJP comes from the middle and upper-middle sections of the society, and from men. They are generally much more vocal. They will always turn up in the crowd and quite volubly share their views and that kind of intimidates people around. Among the poorest, the Scheduled Castes, and especially the Muslims, there is a fear factor. Once we went into a Dalit village, and we were generally chatting with people there. We asked them who they were voting for, and they said BJP, BJP… We spent a lot of time with them, had tea, and after a while, they all started laughing. We asked them why. ‘What we told you earlier was all nonsense… We thought you were some BJP politicians or something… But none of us is BJP.’ In India, there is no hidden conservative voter. ///
https://www.thehindu.com/elections/the-modi-wave-is-a-misnomer-prannoy-roy/article26745452.ece
அது ஊண்மையாக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கு. மக்கள் மெளனமாக காத்து இருக்கிறார்கள், தனக்கான சந்தர்பத்தை எதிர் நோக்கியவாறு. அது தேர்தல் முடிவுகளில் தெரியும்.
இதை நான் சொல்லவில்லை,
பாஜக தோல்வியடையும்: பாஜக தலைவரின் கணிப்பு!
https://www.minnambalam.com/k/2019/04/17/19
சார், இன்னொரு மிகவும் பாப்புலரான இடுகையை மறந்து விட்டீர்களே !
“இந்த இடுகை மோடிஜி பிரியர்களுக்கு சமர்ப்பணம்……!!!”
ராஜகோபாலன்,
உங்கள் விருப்பத்தை மட்டும் மறந்து விடுவேனா…
இன்றைய இடுகையை பாருங்கள்…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்