…
…

…
சீனாவில் வருடந்தோறும் நிகழ்ந்து வரும்
வசந்தகால திருவிழா மிகவும் புகழ் பெற்றது.
இந்த ஆண்டு, வசந்தத்தின் வரவையொட்டி
நிகழ்த்தப்பட்ட பல நிகழ்ச்சிகளின் இடையே
பங்குபெற்ற “நீர் சாகசம்” பற்றிய அற்புதமான
காணொளி ஒன்று கீழே –
( வீடியோ உதவி – நண்பர் செல்வராஜன் அவர்களுக்கு நன்றிகள் … )
உங்கள் இல்லத்தினருக்கும் அவசியம் காட்டுங்கள்…!
…
…
.
——————————————————————————————-



அய்யா .. இதை இடுகை பதிவாக்கிய உங்களின் பரந்த மனசுக்கு நன்றி …! தரையில் சாகசம் செய்யும்போது ஏற்படும் சிறு தவறுகளை ஓரளவு சரி செய்து விடலாம் — ஆனால் நீரில் அது சிரமம் — டைமிங் மிக முக்கியம் — திறமை எங்கிருந்தாலும் பாராட்ட ஒரு மனசு வேண்டும் — பிட்னெஸ் சாலஞ்சையே பாராட்டியவர்கள் நாம் …!
நிஜமாகவே அற்புதம் தான்.
எவ்வளவு அழகு, நேர்த்தி, ஒழுங்கு. என்னவொரு கற்பனை !
இத்தகைய திறமைகளை உருவாக்கி வளர்க்க வேண்டுமென்றால் அரசு ஆதரவு மிகவும் அவசியம்.
எத்தனையோ கோடிகளை, எது எதற்காகவோ எல்லாம் அரசு செலவழிக்கிறது.
ஆனால், இந்த மாதிரி கலைகளை, விளையாட்டுத் திறமைகளை
வளர்ப்பதில் நம் நாட்டில் பொதுவாகவே மாநில, மத்திய அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது தான் உண்மை.
போனது போகட்டும். இனியாவது மத்திய, மாநில அரசுகள், திறமையான சிறுவர், சிறுமிகளை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு, தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை கொடுத்து உலக அளவில் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கம் கொடுக்க வேண்டும்.
நல்ல காணொளிக்கு நன்றி.