ராஜாவின் இசையும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் டெக்னாலஜியும் …!!!


– 38 ஆண்டுகளுக்குப் பின் (1981)

அலைகள் ஓய்வதில்லை படத்தில் – “காதல் ஓவியம் …. ”
இளையராஜாவின் இசையில், ராஜாவின் குரலோடு ஜென்சியும்
சேர்ந்து பாடிய அதே பாடல்……

மீண்டும் புதிய டெக்னாலஜியின் பின்னணியோடு –
சுந்தரத் தெலுங்கில் …

பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்…
(அத்தனையும் அதே இரண்டு பேர் தான்…!!!)
நீங்களும் பார்த்து ரசிக்க – காணொளி கீழே –

.
——————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ராஜாவின் இசையும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் டெக்னாலஜியும் …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //அத்தனையும் அதே இரண்டு பேர் தான்…!!!// – கா.மை.சார்… இந்தப் பாடலை தமிழில் இளையராஜாவும் ஜென்ஸியும் பாடினாலும், தெலுங்கில் எஸ்.பி. ஷைலஜா மற்றும் இளையராஜா பாடினார்கள். இதனை எஸ்.பி. ஷைலஜா அவர்கள் ஒரு இண்டர்வியூவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

    இளையராஜாவின் பாடல்கள், படத்தை எங்கேயோ கொண்டுசென்றது. நான், கல்லூரி ஹாஸ்டலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு நெல்லை ஜங்க்‌ஷனில் நண்பர்களோடு இந்தப் படமும், தொடர்ந்து இன்னொரு தியேட்டரில் இன்னொரு படமும் பார்த்துவிட்டு ஊர்சுற்றிவிட்டு 12 மணி வாக்கில், ஹாஸ்டல் கேட்டில் ஏறிக்குதித்து ஹாஸ்டலுக்குள் வந்த நினைவு வருகிறது. இளையராஜாவின் 78-84 வருடப் பாடல்கள் கேட்கும்போது, அந்தக் காலத்துக்கே என்னை கொண்டுசென்றுவிடும். இளையராஜாவைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் எழுதியவைகள் நினைவலையில் வந்துமோதுகின்றன.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      இப்படித்தான் எனக்கும் நிகழ்கிறது…..
      பழைய பாடல்களின் விசேஷம் இது.
      அந்த பாடல்களை எங்கே, எப்போது மீண்டும்
      கேட்டாலும்/பார்த்தாலும்,
      நாம் முதன் முதலில் இதை எந்த சூழ்நிலையில்
      பார்த்தோம் என்பது உடனே நினைவிற்கு வந்துவிடுகிறது.
      பலருக்கும் இதே அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. kausikan1967's avatar kausikan1967 சொல்கிறார்:

    Thanks Sir, Start the day with good song

  3. R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

    நல்ல பதிவு. நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.