புத்தியா… மிரட்டலா…? வித்தியாசமான டாக்டர் சு.சுவாமி …!!!


லட்சக்கணக்கில் பணம் வரப்போகிறது…47 ஆண்டுகளுக்குப் பிறகு
பெற்றிருக்கும் வெற்றி… பெரிய வெற்றி -என்று
கொண்டாடிக் கொண்டிருக்கிறார் சு.சுவாமி.

கட்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை –
பயன்படுத்திக்கொண்டு, சொந்த லாபத்திற்காக, ஆட்சி
முடிவடையும் காலத்தில், வழக்கை முடிவிற்கு கொண்டு வந்து,
லட்சக்கணக்கில் மக்கள் பணத்தை பிடுங்கிக்கொள்கிறார்
என்று யாராவது சொன்னால் –
அதை அறிவில்லாத, ஆதாரமில்லாத குற்றச்சாட்டு
என்றே சொல்ல வேண்டும்…

புத்தியுள்ளவர் – பிழைக்கிறார்;
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறார்…
அது ஒரு குற்றமா என்ன….???

70 லட்சம், 80 லட்சம் ரூபாய்களை,
இவர் சொளையாகப் பெறுவதை பொறுக்க முடியாமல்
வயிற்றெரிச்சலில் யாராவது புலம்பினால்
அதை வேறு என்னவென்று சொல்ல முடியும்….?

மிக நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்று
டெல்லி சப்-ஜட்ஜ் நீதிமன்றத்தில் இன்று முடிவுக்கு
வந்து ஆர்டரும் பிறப்பிக்கப்பட்டு விட்டதாக சு.சுவாமி
சொல்லி மகிழ்கிறார்.

அதன் மூலம் சுமார் 70-80 லட்சங்கள் அவருக்கு கிடைக்கக்கூடும்.

1972 முதல் 1991 வரையிலான, கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு,
இவர் செய்யாத வேலைக்கு சம்பளம் கொடுக்கச் சொல்லி
உத்திரவு….

இந்த 19 வருடங்களில், அவர் ஹார்வர்டு யுனிவர்சிடியில் ப்ரொஃபசராக
பணியாற்றியதற்கு கிடைத்த லட்சக்கணக்கான டாலர்களும்,
இந்திய பாராளுமன்றத்தில் – ராஜ்ய சபாவிலும், லோக் சபாவிலும்
உறுப்பினராக இருந்த காலத்திற்கு கிடைத்த லட்சக்கணக்கான ரூபாய்களும்
கணக்கிலேயே எடுத்துக் கொள்ள வேண்டாமாம். அதாவது
சுமார் 19 வருடங்களுக்கு இவருக்கு இரட்டை வருமானம்…
செய்த வேலை ஒன்றும் – செய்யாத வேலை ஒன்றுக்குமாக…!!!

முதலில் தன் டிஸ்மிசலை எதிர்த்து, 1992-ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில்
தான் வழக்கு தொடர்ந்தார்… ஆனால்,
அங்கே தோல்வியை சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படவே,
புத்திசாலித்தனமாக – வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு –
கீழ் நீதிமன்றத்தில் சிவில் வழக்காக தொடர்ந்திருக்கிறார்….!!!

பல வருடங்கள் தூங்கிக்கொண்டிருந்த வழக்கு 2014 தேர்தலில் ஆட்சி மாறியபிறகு
சூடு பிடித்தது. ஆனாலும் இடையில் IIT, Delhi தலைமை மூலம் கொஞ்சம் தடங்கல்…
அந்த தலைமையை அங்கிருந்து அகற்றி அனுப்பிய பிறகு – ஏறுமுகம் தான்…

இப்போது சாதகமான தீர்ப்பு வந்து விட்டது.
ஆனால் ஒரே ஒரு சின்ன பிரச்சினை…
இது சப்-ஜட்ஜ் கோர்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள
சிவில் வழக்கிலான தீர்ப்பு தான்…
இந்த தீர்ப்பின் மீது குறைந்த பட்சம் 2 மேல்
கோர்ட்டுகளில் எதிர்தரப்பில் அப்பீல் செய்யலாம்.
வெறும் கண்களுக்கே தெரிகிற
ஏகப்பட்ட சட்ட மீறல்கள்…அப்பீலுக்குப் போனால் –
தீர்ப்பு குப்பைக்கூடைக்கு போய் விடலாம்.

ஆனால், யார் அப்பீல் செய்வார்கள்….?
சம்பந்தப்பட்ட எதிர்த்தரப்பு,
அதாவது IIT, Delhi – விரும்பினால் தானே…?

அது எப்படி விரும்பும் …?
அடுத்த மாதம் பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு
வந்து விட்டால் – அப்பீல், கிப்பீல் –
எதுவும் இருக்காதென்று உறுதியாக நம்பலாம்….!!!

இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதாவது – இந்த வழக்கு
ஒருவழியாக முடிவிற்கு வந்ததற்கு – IIT, Delhi தரப்பிலிருந்து கிடைத்த ஒத்துழைப்பும் –

முன்னாள், இன்னாள் – பாஜக கல்வி மந்திரிகள்
கொடுத்த ஆதரவும் கூட முக்கிய காரணங்கள்
என்று சு.சுவாமி ஆதரவு pgurus செய்திகள் சொல்கின்றன.

// During Narendra Modi’s regime, Education Minister Smriti Irani
and Prakash Javadekar directed IIT to settle the cases with Swamy
and pointed out that this frivolous argument will cost a lot of
interest money to the public exchequer. Irani and Javadekar
suggested an out-of- court settlement with Swamy. //

சரி …. இது என்ன கதை, இதன் பின்னணி என்ன என்றெல்லாம்
வாசக நண்பர்களுக்கு புரிய வேண்டும் அல்லவா….
அதற்காக -கொஞ்சம் பின்னோக்கிச் சென்று, 2014, டிசம்பரில் நடந்த
அந்த கதையை விவரிக்க வேண்டும்….

—————————————————————————————

.
டாக்டர் சுப்ர.சுவாமிக்கு 70 லட்சம் வேண்டுமாம் –
செய்யாத வேலைக்கு சம்பளம் …!!
கொடுக்க மறுத்த டைரெக்டர் வீட்டுக்குப் போகிறார்…..!!!
————–
திசெம்பர் 29, 2014 by vimarisanam – kavirimainthan
——————-

டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT,Delhi )
டைரெக்டர் திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர் (RK Shevgaonkar ) பதவி ஓய்வு
பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுக்காலம் இருக்கும்போதே
தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மத்திய HRD அமைச்சகத்திற்கு
அனுப்பி இருக்கிறார். இதன் பின்னணியாக வெளிவந்திருக்கும் தகவல்கள்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும், பாஜக அரசின் HRD அமைச்சகமும்
கொடுத்த அழுத்தமும், அதிகாரமும் தான் இந்த ராஜினாமாவிற்கு
காரணமென்று சொல்கின்றன.

பிழைக்கத் தெரிந்த பெரிய மனிதர் …..

swamy

பிழைக்கத் தெரியாத ஒரு மனிதரின் புகைப்படம்…. ம்ம்ம்ம்ம்……!!!

IIT-Delhi -director raghunath

பல்வேறு செய்தித்தளங்களை ஆராய்ந்ததில் கிடைத்த
இதன் பின் கதையை கீழே காண்க –

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி டெல்லி ஐ.ஐ.டி. யில் 1969-ல்
உதவிப்பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் 1971-ல்
ஐ.ஐ.டி.நிர்வாகம் அவரை பணியை விட்டு நீக்கி விட்டது.
இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த காலகட்டத்தில் –
இவர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்.
இடையில் இரண்டு முறை லோக் சபா உறுப்பினராகவும்,
பின்னர் ராஜ்ய சபா உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பல்வேறு கமிட்டிகளில், கமிஷன்களில் ஊதியம் பெறும் வேலைகளில்
பணியாற்றிருக்கிறார்.

தன் டிஸ்மிஸ்ஸை எதிர்த்து இவர் தொடுத்த வழக்கின் விளைவாக –
நீண்ட காலத்திற்குப் பிறகு ( வழக்கம் போல் …!!! ) –
1991ஆம் ஆண்டு தீர்ப்பு வந்திருக்கிறது.

இவரை 1971ஆம் ஆண்டு டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகம் பணியிலிருந்து
நீக்கிய உத்திரவு செல்லாது என்றும், இவரை மீண்டும் வேலைக்கு
சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், 1972 முதல் 1991 வரையிலான
காலத்திலும் இவர் பணியில் தொடர்ந்ததாக கருத்தில் கொண்டு,
அதற்கான ஊதியமும் இவருக்கு அளிக்கப்பட வேண்டுமென்றும்
தீர்ப்பு.

இதைத் தொடர்ந்து இவர் மீண்டும் டெல்லி ஐ.ஐ.டி பணியில் சேர்ந்து,
பின்னர் சந்திரசேகர் அமைச்சரவையில் சேரும்வரை பணியாற்றி இருக்கிறார்.

1972 முதல் 1991 வரையிலான 19 வருட காலத்திற்கு ( அதாவது,
அவர் வேலையில் இல்லாத / வேலை செய்யாத காலத்திற்கு )
தனக்கான சம்பளமும், அதற்கு 18 % (பதினெட்டு சதவீதம்) வட்டியும் சேர்த்து,
மொத்தம் சுமார் 70 ( எழுபது ) லட்சம் ரூபாயை டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகம்
தனக்கு கொடுக்க வேண்டுமென்று அதனை விரட்டியிருக்கிறார்.

சாதாரணமாக, அரசு ஊழியர்கள் பணி இடை நீக்கம் (suspension)
அல்லது பணி நீக்கம் (Removal /Dismissal ) செய்யப்பட்டு, பிற்பாடு
அவர்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு –
இடைக்காலத்திற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று முடிவானால்,
அந்த இடைக்காலத்தில் அவர்கள் வேறு எங்கேயாவது
பணியில் சேர்ந்திருந்து எதாவது ஊதியமும் பெற்றிருந்தால், அந்த
தொகை கழிக்கப்பட்டுக் கொண்டு மீதியைத் தான் சம்பள பாக்கியாக
கொடுக்க வேண்டும் என்பது அரசு விதி முறை.

அந்த அடிப்படையில் டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகம் அவரிடம்
இடைப்பட்ட 19 ஆண்டுக்காலத்தில் அவர் எங்கெங்கே பணியாற்றினார்,
எவ்வளவு ஊதியம் பெற்றார் என்பதற்கான விவரங்களை
கேட்டிருக்கிறது.
( இந்த விவரங்களைத் தந்தால் அவருக்கு எழுபது
லட்சமெங்கே – எழுபது பைசா கூட கிடைக்காது…… அவர் அமெரிக்காவில்
வாங்கிய லட்சக்கணக்கிலான டாலர் சம்பளமும்,
லோக் சபா, ராஜ்ய சபா உறுப்பினராக பல ஆண்டுகளுக்கு வாங்கிய
சம்பளமும் – கூட்டிக்கழித்துப் பார்த்தால், அவருக்கு சட்டப்படி எதுவுமே
வர வாய்ப்பில்லை….!!! வர வேண்டிய சம்பள பாக்கியில், இந்த
வருமானங்களை எல்லாம் கழித்தால் ஒன்றும் தேராது….
மைனஸில் தான் போகும் ….!!! )

ஆனால் நம்ம ஆள் தான் இதிலெல்லாம் நிபுணர் ஆயிற்றே –
வாங்கிய சம்பள விவரங்களைத் தருவாரா ….!!!

இந்த விவரங்களைத் தராமல், வேறு சட்ட சந்து பொந்துகளைக்
காட்டி, சு.சு. மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்றதாகத் தெரிகிறது.
டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகமும், நீதிமன்றமே இதற்கு விளக்கம் சொல்லட்டும்
என்று காத்திருந்திருக்கிறது.

இதெல்லாம் – மே 2014-க்கு முந்திய கதை.

மே 2014-ல் தான் இந்தியாவே தலைகீழாக மாறி விட்டதே….!
புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்டது…..
அதே பழைய HRD அமைச்சகம் தான்….
ஆனால் அமைச்சர் புதியவர், பாஜக அமைச்சர் –
எனவே, ஒரு ‘உல்டா-பல்டி’ …!!!

அமைச்சகம் தன் பழைய நிலையை மாற்றிக் கொண்டு விட்டது…!
கோர்ட்டே மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி
உத்திரவிட்ட பிறகும், பழைய பாக்கியை கொடுக்காமல்
இழுத்தடிக்கிறதா டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகம் …?
‘வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்’ என்று கேட்டிருக்கிறார் புதிய அமைச்சர் …!!!

சு.சு.விற்கான சம்பள பாக்கியை உடனடியாக
தீர்த்து வைக்கும்படி டெல்லி ஐ.ஐ.டியின் டைரெக்டர்
திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர் (RK Shevgaonkar ) அவர்களுக்கு அழுத்தம்
கொடுக்கப்பட்டிருக்கிறது.

சு.சுவாமி ஏற்கெனவே இந்த விஷயத்தை கோர்ட்டிற்கு கொண்டு
சென்றிருப்பதால், அதன் தீர்ப்பு வந்தபிறகு, இதில் முடிவெடுப்பது
தான் சரியாக இருக்கும் என்று டைரெக்டர் எடுத்த நிலை
ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தான் எதிர்ப்பது எப்பேற்பட்ட
மாட்சிமையுடைய பாஜக வின் கொள்கை பொறுப்பாளரை என்பது
அந்த மனிதருக்கு தெரிய வேண்டாமோ ….!!!

விளைவு – பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து விட்டார்.
முதலில் தங்களுக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று சொன்ன
HRD அமைச்சரகம், தற்போது ஜனாதிபதி தான் ராஜினாமாவை ஏற்க
வேண்டும் என்பதால், அவரிடம் அது அனுப்பப்பட்டிருக்கிறது
என்று சொல்கிறது. மற்றபடி, வெளியில் கூறப்படும் காரணங்கள்
எல்லாம் வெறும் வதந்திகள் என்றும், டைரெக்டர் அவரது
சொந்த காரணங்களுக்காகவே ராஜினாமா செய்கிறார் என்றும்
அதிகாரபூர்வமாக சொல்லப்படுகிறது.

எது உண்மை – எது வதந்தி என்பது டெல்லி ஐ.ஐ.டியின் டைரெக்டர்
திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர் (RK Shevgaonkar ) சொன்னால் தான்
தெரியும்…..!!!

—————————————————————–

பின் குறிப்பு –

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி ஒரு கடுமையான அறிக்கையை
வெளியிட்டிருக்கிறார். டெல்லி ஐ.ஐ.டி. டைரெக்டர் ராஜினாமா
செய்தது அவரது சொந்தக் காரணங்களுக்காகத்தான்.

“என்னால் தான் அவர் ராஜினாமா செய்தார் என்று யாராவது
வதந்தியைப் பரப்பினால், நான் கடுமையான நடவடிக்கை
எடுப்பேன்” என்று.

நமக்கு ஏன் வம்பு…. நம் பங்குக்கு நாமும் இதை வதந்தி என்றே
கூறி விடுவோமே….!!! எனவே, நானும் சொல்லி விடுகிறேன் –
” ஐ.ஐ.டி. டைரெக்டர் தானே முன்வந்து சொல்லும்வரை இது
வெறும் வதந்தி தான்”….!!!

பின் பின் குறிப்பு –

வதந்தியை செய்தி என்று சொல்வது தான் சட்டப்படி குற்றம்.

செய்தியை வதந்தி என்று சொல்வது குற்றமல்ல என்று –
என் அறைகுறை சட்ட அறிவு சொல்கிறது. எனவே ……..
.

.
—————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to புத்தியா… மிரட்டலா…? வித்தியாசமான டாக்டர் சு.சுவாமி …!!!

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    perverted intelligence! மற்றவர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வேலையில் இருந்திருந்தால் அந்த வருமானத்தை கழித்துக்கொண்டு மீதியை கொடுக்கலாம் என்றிருக்கும்போது இவருக்கு மட்டும் எப்படி மொத்தமாக கொடுக்கலாம்?

    இவர் ஒரு அடாவடி பேர்வழி. பேசாமல் கொடுத்துவிடுவது நல்லது என்ற நிலை எடுத்தாற்போல தெரிகிறது.

    இது போன்ற செயல்கள் இவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும்!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      “அழக்கொண்ட எல்லாம் அழப்போம்” – சட்டம், அரசியல் இவைகளின்மூலமாக எதனைச் சம்பாதித்தாலும் அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. உண்மையாக தனக்கு அந்தப் பணம் உரியது என்று சட்ட யுத்தம் நடத்தி, நியாயமாக அதில் வெற்றி பெற்றிருந்தால், சு.சுவாமி அந்தப் பணத்தை தேசத்துக்காகக் கொடுப்பது பெருமை. முக்கியமான இடத்திலிருந்து வெற்றி பெறுவது நியாயமாகாது.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் தாங்கள் திரு சு.சுவாமி என்கிற கில்லாடியை பற்றி மட்டும் இன்றுவரை ” 113 இடுகைகள் ” பதிவிட்டு இருக்கிறீர்கள் என்பதில் இருந்தே அவர் எம்மாம் பெரிய முக்கிய நபர் என்பது எமக்கு புரிகிறது — அதில் முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு சுவாமியால் ஏற்பட்ட அனுபவம் கொஞ்சம் வித்தியாசமான சுவாரஸ்யம் — அது பற்றி :

    சு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்வி க்கு கிடைத்த தண்டனை ….!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -8 )
    Posted on ஒக்ரோபர் 25, 2014 by vimarisanam – kavirimainthan // என்ற இடுகையில் திரு . ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் ஜனாதிபதிகளிலேயே மிகச்சிறந்த நேர்மையாளர். … அவருக்கே காரியம் ஆகவேண்டி குடைச்சல் கொடுத்தவர் நமது சு.சுவாமி — அதைப்பற்றி திரு ஆர்.வி அவர்கள் குறிப்பிட்டுள்ளது இடுகையில் இருந்து : —

    // திருமதி சுவாமி, பத்து வருடங்கள் நாலு மாதங்களுக்கு
    வக்கீலாகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருந்தார்.
    (சட்டப்படியான குறைந்த பட்ச தேவை – 10 வருட அனுபவம்…. ) அவரது வருட வருமான சுமார் 20,000/- என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில், அவரை விட அதிகமான அனுபவமும், அவரை விட அதிகமான வருமானமும்
    பெறும் இன்னும் பல பெண் வழக்கறிஞர்கள் பணியாற்றி வந்தனர். தகுதியுடைய பல சீனியர்களை தவிர்த்து விட்டு, திருமதி சுவாமியை நீதிபதி பதவிக்கு நியமனம் செய்வது பார் கவுன்சில் நடைமுறைகளுக்கு ஏற்ப அமையாது.
    எனவே, நான் கோப்புகளை, மறு ஆலோசனை செய்வதற்காக, பிரதமருக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.
    இதன் விளைவாக, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி,
    பாராளுமன்றத்தின் ‘செண்ட்ரல் ஹாலில்’ எனக்கு எதிராக மிக பலமான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டார்.
    என் மனசாட்சிக்கு விரோதமாக நான் நடந்து கொள்ளவில்லை என்பதால் – நான் இவற்றைப் பொருட்படுத்தவில்லை.” //

    தனக்கு காரியம் ஆகவில்லை என்றால் எந்த லெவலுக்கு இறங்கிவிடுவது இவரது இயல்பு என்பது தற்போதைய பாஜகவினருக்கு நன்கு தெரியும் — அதனால் இவருக்கு லாபமே …!!!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      //ஜனாதிபதிகளிலேயே மிகச்சிறந்த நேர்மையாளர். // செல்வராஜன் சார்..மற்ற பகுதிகளுக்கு நான் செல்லவில்லை. நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவை சாமானிய மனிதர்களுக்குத் தெரியாது. ஆர்.வி. மிகச்சிறந்த நேர்மையாளர் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. அவருக்கு எந்தக் கம்பெனிகளில் எவ்வளவு ஷேர் இருந்தது, அவை எதனால் வந்தது என்பதை ஆராயாததால் நாம் அவரை நேர்மையாளராகச் சொல்லமுடியாது. அவரும் ‘வரவு’ வைத்து ‘வேலை’ பார்த்தவர்தாம்.

      • Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

        // அவரும் ‘வரவு’ வைத்து ‘வேலை’ பார்த்தவர்தாம்.//

        – எந்த ஆதாரமும் இல்லையென்றால், நீங்கள் மட்டும் இதை எப்படி
        சொல்லலாம் ? காம்ராஜரின் நம்பிக்கையை பெற்றவர் என்கிற ஒரு தகுதி போதுமே வெங்கட்ராமனை நேர்மையாளர் என்று சொல்ல.

        • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

          இதைப்பற்றி விலாவாரியாக எழுத விரும்பவில்லை. ஆர்.வி. நேர்மையாளர் அல்லர். அவர் என்ன சம்பாதித்தார் என்பது உங்கள் யாருக்கும் தெரியாது. (அரசியலில் நேர்மையாளர்கள் என்று சொல்ல ஆட்களே கிடையாது)

          சுப்ரமணியன் சுவாமியை எத்தனை தடவை கழுவி ஊற்றுவது? சொந்த நலன் அவருக்கு மிக முக்கியம். அவர் யாருக்கும் உண்மையாக நடந்தவர் இல்லை. கட்டுச் சோற்றுப் பெருச்சாளி அவர்.

      • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

        எமக்கு மறுமொழி இடுவது பிடிக்காத ஒன்று — அதுவும் உங்களுக்கு இடுவதில் விருப்பம் என்பதே இல்லாதவன் — உங்களுக்கு சாதமான ஒரு வார்த்தையை பிடித்து தொங்குவது உங்களுக்கு வாடிக்கை — அதில் உள்ள // .மற்ற பகுதிகளுக்கு நான் செல்லவில்லை // நீங்கள் செல்ல மாட்டிர்கள் என்பது தெரிந்த விஷயம் — ! மேற்கோள் காட்டியுள்ள இடுகையை தேடி படித்தால் அதில் // மிகச்சிறந்த நேர்மையாளர் // என்கிற வார்த்தையை திரு .கா.மை .அவர்கள் தான் கூறியுள்ளது புரியும் – ஆதாரம் வேண்டுமானால் திரு .கா. மை அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் — உங்களுக்கு தெரிந்த அளவு சாமானியனான எமக்கு தெரியாது — அவர் வரவு வைத்து வேலைப் பார்த்த்ததெல்லாம் அறிந்த உங்களை போன்ற ஒருவர் தளத்தில் இருப்பது வாசகர்களின் பாக்கியம் …!!!

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        புதியவன்,

        என்றோ மறைந்து விட்ட ஆர்வி அவர்களின் மீது உங்களுக்கென்ன வெறுப்பு….?
        அவர் இன்றைய சமூகத்தை, அரசியலை எந்த விதத்தில் பாதிக்கப்போகிறார்…?

        இடுகை – திருவாளர் சுப்ரமணியன் சுவாமி – சட்டத்தை வளைத்து,
        அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, சிலரை பயமுறுத்தி –
        லட்சக்கணக்கில் பொதுப்பணத்தை சொந்தமாக்கிக் கொள்வதைப்பற்றியது.

        இடுகையின் நாயகனைப்பற்றி பேசாமல்,
        மீண்டும் திசை திருப்புவது ஏன்…?

        எல்லாருக்கும் தெரிந்து விட்ட உங்கள் tactics -ஐ
        தொடர்வது இனியும் பலன் தருமா… 🙂 🙂 🙂

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

        • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

          எனக்கெதுக்கு ஆர்.வி மீது வெறுப்பு. சுப்ரமணியன் சுவாமியைக் குற்றம் சொல்வதில் தவறில்லை. சு.சுவாமி ‘கழுவி ஊற்றுவதற்கு’ தகுதியானவர்தான். அதுக்காக, எழுதுபவர், ‘ஆர்.வி. கடவுளுக்கு நிகரானவர்’ என்று எழுதினால் அதனை எதற்காக ஒத்துக்கொள்ளவேண்டும்? நானே, சுப்ப்ரமணியன் சுவாமி நல்லவரே இல்லை, இதனால்தான் அரசியலில் நேர்மையான மோடி அவர்கள் சுப்ரமணியன் சுவாமிக்குத் தன் அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை என்று எழுதினால், ‘கதாநாயகன் சுப்ரமணியன் சுவாமி’தான், அதனால் மற்ற கமெண்டுகளை விட்டுவிடலாம் என்று இதனைப் படிப்பவர்கள் எண்ணுவார்களா?

  3. ஒரு .. ( மதவெறி பிடிக்காத) ... தேசபக்தன்'s avatar ஒரு .. ( மதவெறி பிடிக்காத) ... தேசபக்தன் சொல்கிறார்:

    இவர் தன்னை ஒரு தேசபக்தன் என்று பறைசாற்றிக் கொள்கிறார்.

    ஆனால், இவர் இந்த நாட்டிற்கு செய்யும் ஒரே சேவை -,
    கடவுளை கும்பிட்டு விட்டு காரியத்தை பார்த்துக் கொண்டிருக்கும்
    சாதாரண இந்துக்களை எல்லாம் “மதவெறியர்’களாக” மாற்றுவது தான்.

    கொட்டி கொட்டி, குளவிகளை தேனீக்களாக மாற்றுவது போல்,
    இவர் சாதாரண மக்களுக்கு மதவெறியூட்டி,
    அவர்களை வெறியர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

    இந்தப்பக்கம் இவர் என்றால், அந்தப்பக்கம் ஹைதராபாத் “ஒவைசி” இவர்கள் இரண்டு பேருமே இந்த நாட்டின் சாபக்கேடுகள். இந்த நாடு, இந்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இவர்கள் வாயை மூடினால் போதும்.
    அது நடக்காத வரையில் இங்கே நிம்மதியும் இருக்காது. ஆனால் – இருவரையும் பிடித்து உள்ளே போடும் தைரியம் யாருக்கு வரும் ?

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ….! ரபேல் பற்றி தாங்கள் இந்துவில் வந்த செய்தியை பதிவாக்கியதில் விதி முறை மீறல்கள் என்னென்ன என்பதெல்லாம் தெளிவாக இருந்தது …. மறு சீராய்வு விவாதம் அதில் திருடுபோனதாக அரசு வழக்கறிஞர் கூறிய ஆவணங்கள் ஏற்குமா உச்ச நீதிமன்றம் என்ற கேள்வி மக்களிடையே இருந்ததற்கு விடை இன்று : — // விடிஞ்சா வாக்கு பதிவு.. முதல் நாளில் பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரபேல் தீர்ப்பு.. ! //

    Read more at: https://tamil.oneindia.com/news/delhi/sc-dismisses-gov-objections-in-rafaels-case-346430.html … எல்லாம் சரிகட்டிவிட மாட்டார்களா …?

  5. ஒரு ,,, (மதவெறி பிடிக்காத) ...தேசபக்தன்'s avatar ஒரு ,,, (மதவெறி பிடிக்காத) ...தேசபக்தன் சொல்கிறார்:

    //எல்லாம் சரிகட்டிவிட மாட்டார்களா …?//

    அவர்களுக்கு தெரியாத வழிமுறைகளா ?
    வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு வந்தால் தானே ?
    விசாரணை நடப்பதை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு இருக்கிறதே ஆயிரம் வழிகள் ?

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    எனக்கு இப்படி ஒரு தனி மெயில் வந்துள்ளது –
    எழுதியவர் யார் என்பது குறித்த விவரங்கள்
    இங்கே அவசியமில்லை என்று நினைக்கிறேன்…
    ஆனால், இதில் கூறப்படும் தகவல்கள் சுவாரஸ்யமாக இருப்பதால் –

    நண்பர்களும் அவசியம் பார்க்க வேண்டுமென்று நினைத்து இங்கே பதிகிறேன்.

    ——————————-
    மோடியின் அமைச்சரவை –

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 உறுப்பினர்கள் இருக்கும் போது செல்வந்தர்கள்,கார்ப்பரேட்டுகளுக்கு வழக்குரைஞர்களாக இருந்தவர்கள், தேர்தலையே சந்திக்காதவர்களை மற்றும் தேர்தலில் இதுவரை வெற்றி பெறாதவர்களை மத்திய அமைச்சராக்கி அழகுபார்த் துள்ளார், மோடி – இன்று பொருளாதாரத்தில் பெரும் பணக்காரர்களுக்கு பெரும் லாபமும், ஏழைகள் மேலும் நலிவடைந்து போகவும் இந்த அமைச்சர்களின் ‘கைவண்ணமே’ காரணம்! புறவாசல் வழியாக வந்த அமைச்சர்களில் அனை வருமே அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேபினட் பதவி வகிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருண் ஜெட்லி தேர்தலில் தோல்வியுற்று பின்புறமாக நுழைந்தவர், அவர்தான் நிதி அமைச்சர்!

    நிர்மலா சீத்தாராமன் தேர்தலில் போட்டியிடாமல் பின்புறமாக நுழைந்தவர், அவர் தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

    ஸ்மிருதி இராணி தேர்தலில் போட்டியிட்டு வைப்புத்தொகை இழந்து பிறகு மோடியால் மனித வளத்துறை அமைச்சராக்கப்பட்டார். இவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக குறுகிய காலம் இருந்து பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார்.

    சுரேஷ் பிரபு – சிவசேனா கட்சியில் இருந்த இவர் பாஜகவிற்கு தாவியதற்காக இவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போதுதான் அதிகம் விபத்து நடைபெற்றது, 2017 அக்டோபர் மாதம் தொடர்ந்து தினசரி ஒரு விபத்து என அய்ந்து விபத்துக்கள் நடந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பதவி விலக வற்புறுத்தியும் இவர் பதவி விலகவில்லை. பிறகு அமைச்சரவை மாற்றத்தின் போது இவருக்குத் தரையில் ஊரும் ரயிலிலிருந்து வானில் பறக்கும் விமானம் அதாவது சிவில் விமானப் போக்கு வரத்து துறை வரை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளும் விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ரவிசங்கர் பிரசாத் – இவரும் எந்த ஒரு தேர்தலையும் சந்தித்ததில்லை, இருப்பினும் இவர் பின்வாசல் வழியாக அமைச்சர் பதவியைப் பெற்று தகவல் தொடர்புத்துறை அமைச்சரானார்.

    முக்தார் அப்பாஸ் நக்வி – இவரும் பீகார் சட்ட மன்றம், நாடாளுமன்றம் இரண்டிலுமே போட்டியிட்டு தோல் வியைக் கண்டவர். இவருக்கும் பின்வாசல் வழியாக கேபினட் அமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்தார் மோடி.

    மகாராட்டிராவைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவ்டேகர் – இவரும் எந்த ஒரு தேர்தலையும் சந்தித்ததே கிடையாது. இவருக்கு மனிதவளத்துறை அமைச்சர் என்ற ‘பரிசு’ கிடைத்துள்ளது,

    பெட்ரோலியத்துறையில் கொடிகட்டிப் பறந்த கோயல் குடும்பத்தைச்சேர்ந்த விஜய் கோயல் இதுவரை மேடையேறிப் பேசி வாக்கு வாங்கியது கிடையாது. ஆனால் இவருக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவி!

    பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர். இவரும் தேர்தலைச் சந்தித்ததே கிடையாது. இவருக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவி!

    சிவசேனாவில் இருந்து காங்கிரசிற்குத் தாவி அதன் பிறகு தனிக் கட்சி துவங்கி, பிறகு மீண்டும் காங்கிரசுக்கு வந்து நாடாளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்து பாஜகவில் சேர்ந்தார் நாராயணரானே, இவர் சேர்ந்த உடனேயே இவருக்கு கேபினட் அமைச்சர் தகுதி வழங்கப்பட்டு கொள்கை முடிவு எடுக்கும் குழுவில் இவரும் ஒருவரானார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து மோடி கேபினட் அமைச்சர் பதவிக்கு தேர்தெடுக்காமல் தனக்குத் தேவையான மற்றும் கார்ப்பரேட்டுகளுடன் எப்போதும் உறவாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே கேபினட் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி என்றாலே கார்ப்பரேட்டுக்கான ஆட்சி என்று சுருக்கமாகவே கூறிவிடலாம்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பாராளுமன்ற உறுப்பினர்கள்தாம் அமைச்சராகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாதபோதும், கேபினட் அமைச்சர்கள் எல்லாரும் பாராளுமன்ற உறுப்பினராகத்தான் இருக்கவேண்டும். அவர்களுக்குத்தான் நேரடியான அக்கவுண்டபிலிட்டி உண்டு (பிரதமருக்கு ஒட்டுமொத்த அக்கவுண்டபிலிட்டி இருந்தபோதும்).

      இதைவிட முக்கியமானது, சொந்தத் தொழில் செய்துகொண்டிருக்கும் எவரும் பாராளுமன்ற உறுப்பினரோ இல்லை எந்தப் பதவியிலுமோ இருக்கக்கூடாது. ‘தொழில்’ செய்வதால்தான் ஊழலில் ஈடுபடுகின்றனர், எதிர்க்கட்சியினரையும் காப்பாற்றுகின்றனர், ஊழல்வாதிகளையும் தப்பிக்கவைக்கின்றனர். இதில் காங்கிரஸ், பாஜக, திமுக யாருக்கும் விதிவிலக்கில்லை.

      பாஜக ஆட்சி என்றாலே ‘கார்ப்பரேட்டுக்கான ஆட்சி’ என்ற வாக்கியத்தில் உண்மை இல்லை. அம்பானி, டாடா, விஜய் மல்யா, நீரவ் மோடி என்று பலர் உச்சத்தில் இருந்தது காங்கிரஸ் ஆட்சியிலா இல்லை பாஜக ஆட்சியிலா? இவர்கள் எல்லோரும் (அதானி உள்பட) 2014ல்தானா தொழில் தொடங்கினார்கள்? (உடனே… பாஜகவைச் சொன்னால் காங்கிரஸ் என்று மடை மாற்றுகிறார் எனச் சொல்லிவிடுவீர்கள். ‘என்றாலே’ என்று எழுதியவர் ‘காங்கிரஸ் ஜால்ரா’ அல்லது பாஜக வெறுப்பாளர்” என்பது தெரியவில்லையா? நியாயவாதி என்றால், ‘பாஜகவும் கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி’ என்று சொல்லியிருக்கணும். அப்போ அதில் உண்மை இருந்திருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.