மணிப்பூர் பாஜக கூட்டம் – வெளியேற முயன்ற மக்களை வலுக்கட்டாயமாக தடுத்த போலீஸ்…. (இது தேர்தல் காலம்….)


மணிப்பூரில், முந்தாநாள் ஞாயிறு அன்று மோடிஜி பேசவிருந்த
கூட்டத்திலிருந்து வெளியேற முயன்ற பொதுமக்களை –

வெளியே செல்லும் கதவுகளையெல்லாம் அடைத்து,
வலுக்கட்டாயமாக போலீஸ் நிறுத்தி வைத்ததும்,
அதையும் மீறி சில பெண்கள், கதவுகளின் மீது ஏறி வெளிச்செல்ல
முயற்சித்த காட்சிகளும் கொண்ட ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

https://twitter.com/i/status/1114879841340256256

————-

ஒரிஜினல் பயணத்திட்டத்தின்படி,
மோடிஜி மாலை 4 மணி அளவிலேயே
வருவதாக இருந்திருக்கிற நிலையில், கூட்டம் சேர்ப்பதற்காக,
உள்ளூர் பாஜகவினரின் விளம்பரங்கள் மதியம் இரண்டு மணிக்கு
மோடிஜி பேசுவாரென்று அறிவித்திருக்கின்றன.

ஏற்கெனவே தாமதம் காரணமாக
கோபமடைந்திருந்த மக்களிடையே –
மாலை 4 மணிக்கு, மேடையில் பேசிய பாஜக பிரமுகர் ஒருவர்,
இன்னும் ஒரு மணி நேரத்தில் மோடிஜி வந்துவிடுவார்
என்று அறிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே மணிக்கணக்காக காத்திருந்து
பொறுமை இழந்திருந்த பலர் – குறிப்பாக பெண்கள்
இந்த அறிவிப்பை கேட்டதும் கூட்டத்திலிருந்து
வெளியேற முயற்சித்திருக்கின்றனர்.

இவர்கள் வெளியேறுவதை தடுக்குமாறு போலீசுக்கு
உத்திரவிடப்பட்டு இருக்கிறது.
விளைவு, வெளியேறும் மக்கள் பின் நோக்கித் தள்ளப்பட்டு,
கதவுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரே களேபரமாகி, சில பெண்கள் கேட்டின் மீது ஏறி,
வெளியேறவும் முயற்சி செய்திருக்கின்றனர்.
இதில் சில பெண்கள் காயமடைந்திருக்கின்றனர்.

இறுதியாக, மாலை 5.18 மணிக்கு தலைவர்
கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்.

உள்ளூர் பாஜக அமைப்பினரின் –
வலுக்கட்டாயமாக பெண்களை தடுத்து நிறுத்திய செயல்
கடுமையான விமரிசனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இப்படியெல்லாம் வலுக்கட்டாயமாக மக்களை நிறுத்தி வைத்து
கூட்டம் நடத்த வேண்டிய
அவசியம் பாஜகவுக்கு வந்து விட்டதா என்ன…?

.
—————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மணிப்பூர் பாஜக கூட்டம் – வெளியேற முயன்ற மக்களை வலுக்கட்டாயமாக தடுத்த போலீஸ்…. (இது தேர்தல் காலம்….)

  1. Yuva's avatar Yuva சொல்கிறார்:

    இப்படித்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீட்டிங் ஒன்று காலி சியார்கள் மத்தியில் நடந்தது

    அதை படம் எடுத்த ஊடகவியலாளரை காங்கிரஸ் குண்டர்கள் அடித்து நொறுக்கி இருக்கின்றார்கள்

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    50+ வருடங்களுக்கு முன்னால, பேச்சைக் கேட்பதற்காக மக்கள் கூடுவாங்க. கருணாநிதிக்கும் எம்ஜியார் ஆட்சியில் இருந்தபோதெல்லாம், எல்லா எலெக்‌ஷனுக்கும் அவங்களாவே கருணாநிதி பேச்சை ரசிச்சுக் கேட்க வருவாங்க. வரமுடியாத தூரத்தில் இருப்பவர்களுக்காக, அவங்களை கட்சிக்காரங்க வேனில் அழைத்து வந்ததுபோக, பிறகு காசு கொடுத்து கூட்டிக்கொண்டுவரும் கலாச்சாரம் ஆரம்பித்துவிட்டது. அந்த அந்த பகுதி பொறுப்பாளர்கள், இத்தனை பேரைத் திரட்டுவது என்பது மாறி, விலைக்கு கூட்டிக்கொண்டுவரும் அவலம் நேர்ந்துவிட்டது. கடந்த 20 தேர்தல்களுக்குமேல், காசு கொடுத்துக் கூட்டிக்கொண்டு வரும் கலாச்சாரம் வெளிப்படையா வந்துடுச்சு.

    காசு வாங்கிக்கொண்டு கூட்டத்துக்கு வருபவர்கள் இப்போதெல்லாம் 80%க்கு மேல் போய்விட்டது.

    இந்தக் கலாச்சாரம் மணிப்பூர் வரையில் போய்விட்டதுபோலிருக்கு. இதில் போலீசின் வேலை ரசிக்கும்படி இல்லை.

  3. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் காவல்துறை மீது மனித உரிமை மீறல்
    (Violation of Human Rights) வழக்கு கூட போடலாம். வீடியோ ஆதாரமே போதும்.

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! அடைத்து வைப்பதும் — விடுவிப்பது எல்லாம் அவர்கள் கையில் …?
    ஒரு முக்கிய செய்தி : — // ஐஐடி டெல்லியை தோற்கடித்த சுப்பிரமணியம் சுவாமி..! 8% வட்டியுடன் சம்பளம் வசூல்..! //
    Read more at: https://tamil.goodreturns.in/news/2019/04/09/iit-has-to-pay-subramanian-swamys-salary-with-8-percent-interest-014035.html

    என்னடா இவன் திடிரென்று இந்த செய்திக்கு தாவிட்டானே என்று நீங்கள் நினைக்காமல் இருக்க ஒரு நான்கு ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும் — மேலே உள்ள செய்தியைப்பற்றி அப்போதே ஒரு இடுகை தளத்தில் வந்துள்ளது அது :–

    // டாக்டர் சுப்ர.சுவாமிக்கு 70 லட்சம் வேண்டுமாம் – செய்யாத வேலைக்கு சம்பளம் …!! கொடுக்க மறுத்த டைரெக்டர் வீட்டுக்குப் போகிறார்…..!!!
    Posted on திசெம்பர் 29, 2014 by vimarisanam – kavirimainthan // என்ன இருந்தாலும் சு.சுவாமி கில்லாடி தான் — கறக்க வேண்டியதை கறந்துட்டார் — குஷி மூடில் சுவாமி — ” எல்லாம் அவன் செயல் “…!!

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி செல்வராஜன்.

    நான் இது குறித்து தனியே விவரமாக இடுகையில் எழுதுகிறேன்..

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.