…
…

…
நடப்பு அரசியலில் ஆர்வம் உடைய நண்பர்களுக்கு
இது சுவாரஸ்யமாக இருக்கும்.
சனி இரவு (06/04/2019) புதிய தலைமுறை தொலைக்காட்சியின்
அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் அவர்களை –
திரு.கார்த்திகைச்செல்வன் பேட்டி கண்டார்…
பாராளுமன்ற தேர்தலையொட்டிய பல விஷயங்களைப்பற்றி கார்த்திகைச் செல்வன்,
நிறைய கேள்விகளை முன்வைத்தார்.
திரு.ப.சி.அவர்கள், தனக்கே உரித்தான பாணியில், தெளிவாக,
அழுந்தந்திருத்தமாக, விளக்கம் அளித்தார்.
அவரைப் பிடிக்கிறதோ இல்லையோ – அவரது பேட்டிகள்
எனக்கு எப்போதும் பிடிக்கும்…. 🙂 🙂
ப.சி. அவர்களின் பேட்டி எப்போதுமே ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
எந்தவொரு விஷயத்தையும், எளிய வார்தைகளில்,
எல்லாருக்கும் பளிச்சென்று புரியும்படி விளக்குவதில் வல்லவர் அவர்.
இதைச் சொல்வதால், நாம் அவர் சொன்னதையெல்லாம்
ஏற்கிறோம் என்று அர்த்தமல்ல…
இந்த தளத்தின் பார்வை, வாசக நண்பர்களுக்கு நன்கு தெரிந்ததே..
…………..
” எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு….”
…………..
நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்க முடியாத நண்பர்களுக்காக
கீழே பதிந்திருக்கிறேன்.
………
………
பின் குறிப்பு –
பேட்டியில் பேசப்படும் விஷயங்கள் குறித்து,
நண்பர்களின் கருத்துகளையும்
தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்….
பின்னூட்டங்களின் மூலம் தெரிவிக்கலாம்.
.
——————————————————————————————————————



புத்திசாலி, திறமையானவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அருமையாக பேசக்கூடியவர். முக்கியமாக, கேட்பவர்களுக்கு எளிதில் புரியும்படி எதையும் சொல்லக்கூடியவர்; எல்லாம் சரியே; ஆனால் ———
புத்திசாலி’கள் எல்லாரும் உத்தமர்’களாகவும் இருந்தால் இந்த நாடு இன்று எங்கோ இருக்குமே…Unfortunately நமது அரசியல்வாதிகளில் – புத்திசாலிகள், சாமர்த்தியசாலிகள், வல்லவர்கள், சிறந்த பேச்சாளர்கள் ( ஹிந்தி உட்பட …!!! ) எல்லாருமே சுயநலவாதிகளாக இருப்பது தான் நமது துர்பாக்கியம்.
திரு.ப.சி.அவர்கள் புத்திசாலித்தனத்திற்காக பாராட்டப்படுவதைப் போல்,
நம்பகத்தன்மைக்காகவும், நாணயத்திற்காகவும் கூட பாராட்டப்படுபவராக இருந்திருந்தால் தமிழகம் இன்று மிக உயர்ந்த இடத்தில் இருந்திருக்கும்.
Anyway – நாம் இங்கு பேட்டி காணப்பட்டவரை விட்டு விட்டு. பேட்டியில் பேசப்படும் விஷயங்களைப்பற்றி பேசுவோமே…
அய்யா …! நமது டி.வி . சானல்கள் தங்களின் விவாதங்களுக்கு வைக்கின்ற பெயர்களே வினோதமானது தான் — இந்த ” அக்னி பரீட்சை ” என்பது அதுபோல ஒன்று தான் — ! அக்னி பரீட்சை என்பது நிகழ்ச்சியில் பேட்டியளித்த திரு சிதம்பரம் அவர்களுக்கா — இல்லை அவர் பதில்களாக சுட்டிக்காட்டி குறை சொன்ன பாஜக– மற்றும் திரு மோடிஜிக்கா — ? இந்த பரீட்சையின் முடிவு என்ன –இதனால் பலன் யாருக்கு …? .
கேட்ட கேள்விகளுக்கு ப. சிதம்பரம் அவர்கள் அவர் பாணியில் அவர் சார்ந்துள்ள கட்சி — தலைமைக்கு ஏற்றவாறு பதில் கூறியிருக்கிறார் அவ்வளவே — இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடவா போகிறது — அடிக்கடி அனைவரும் கூறுவதைப்போல ஆட்சி தான் மாறியதே தவிர — காட்சிகள் மாறவில்லை என்று மனதை சமாதானப்படுத்தி கொண்டு — ஜன நாயக கடமையாற்ற கை விரலில் மை வைத்துக்கொள்ள அடுத்த தேர்தலுக்காக காத்திருக்க வேண்டியது —
இதெல்லாம் தேர்தல் நேர அரசியல் பேட்டிகள் நாமும் பல தேர்தல்களில் பார்த்து – கேட்டு ரசித்தவைகள் தான் —
என்ன ” ஒரு கார்ப்ரேட் கட்சியை அகற்றி அதன் இடத்தில் இன்னொரு கார்ப்ரேட் கட்சியை பதவியில் அமர வைக்க போகிறோம் ” வேறு என்ன சாதிக்க போகிறோம் ..? இவ்வாறு அமர வைப்பதற்குப் பெயர்தான் சமூக மாற்றம் — மக்கள் நலனை பேணுவது — முற்போக்கு சிந்தனை — என்று பயிற்சியளிக்கப் பட்டு இருக்க்கிறோம் என்பது தான் உண்மை — அவருக்கு – இவர் நல்லவர் என்று மாறி – மாறி தேர்ந்தெடுத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான் வரலாறு …!
என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் அவரும், அவர் மகனும் எப்போது
பார்த்தாலும் கோர்ட் ,ஜாமீன் ,வழக்குகள் என்று இருப்பது பெரும்பாலும்
ரசிக்கப்படுவதில்லை. அவர் தாம் சார்ந்த சிவகங்கை தொகுதிக்கும்
ஒன்றும் செய்யவில்லை. புகழ் பெற்ற தமிழ் அரசியல்வாதியாக இருந்தும் மத்தியில் அதிகார பலத்தில் இருந்தும் அவரால் நமக்கு ஒன்றும் பயனில்லை. பேட்டியில் அவர் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார் அவ்வளவே. ஒரு சாதாரண வாக்காளரின்
ஆதர்ச அரசியல்வாதியாக அவர் எப்போதும் இருந்ததில்லை .But as you say
the interview is interesting.