“நான் ஆழ்வார் ஆய்வு மையம் வைத்திருக்கிறேன்…” ஒரு வழியாக ஜு.வி. ஒரு உண்மையை வரவழைத்து விட்டது …!!!


சில நாட்கள் முன்பாக அரக்கோணம் திமுக வேட்பாளர் இலங்கை
கச்சா எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை திட்டத்தில், சுமார்
26,000 கோடி ரூபாய் அளவிற்கு தன் குடும்பத்தினர் பெயரில் முதலீடு
செய்கிறார் என்று பரபரப்பான செய்திகள் வெளிவந்தன..

விமரிசனத்தில் கூட ஒரு இடுகை வெளிவந்தது….

அரக்கோணம் திமுக வேட்பாளர் இலங்கையில் பல்லாயிரம் கோடி ரகசிய முதலீடா…?

இத்தனை பெரிய செய்தி வெளிவந்தும், நமது தொலைக்காட்சிகளோ,
தின, வார இதழ்களோ இதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
மூச் பேச் இல்லை…”பணம்” …பாதாளம் வரை பாயுமே…!!!

ஆனால், சமூக வலைத்தளங்களில் இது குறித்து பெரிய அளவில்
பரபரப்பு கிளம்பியது… இறுதியாக அத்தகைய பரபரப்புகளை
அடங்கச் செய்யவும்,

தங்கள் மீது “ஏன் கண்டுகொள்ளவில்லை..?” என்று
எழுந்த கோபமான குற்றச்சாட்டுகளை சரி செய்யவுமோ என்னவோ,
ஜூ.வி. ஒரு பேட்டி கண்டு, சில……கேள்விகளைக் கேட்டு
பதிலையும் பெற்று தங்கள் இதழில் போட்டிருக்கிறது…

———————-

கேள்வி – சிங்கப்பூரில் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக
“சில்வர் பார்க் இண்டர்நேஷனல்” நிறுவனம் இருப்பதாகவும் அதன் மூலமாக இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில்,
26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும்
வாட்ஸ் அப்பில் ( ??? )
வரும் தகவல்கள் உண்மையா….?

பதில் – சிங்கப்பூரில் ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறோம். அந்த
கம்பெனியில் என் மனைவி மற்றும் மகன்கள் பங்குதாரர்களாக
இருக்கிறார்கள்.

( அவ்வளவு தான்….!!! அவ்வளவு தான்….!!! அவ்வளவு தான்….!!! )

அதற்குள் பல கோடி ரூபாய்களை விமானத்திலும், கப்பலிலும்
ஏற்றிக்கொண்டு போய் இலங்கையில் வைத்து விட்டதாகச்
சொல்கிறார்கள் எதிரணியினர்…அப்பட்டமான பொய் இது.
அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது.

——————————————————————

கேள்வி – அதிமுக ஆட்சியில், உங்களுக்கு சொந்தமான மதுபான
ஆலையிலிருந்து பெருமளவில் மதுபானம்
கொள்முதல் நடப்பதாகவும்
அந்த வகையில் உங்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில்
ஓர் இணக்கம் இருப்பதாகவும் பேசப்படுகிறதே …
( எங்கே…? ஜூ.வி.ஆபிசிலா..? )

பதில் – அந்த துறையில் எனக்கு சம்பந்தம் இல்லை. அதை என்
மகன்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள்.

நான் “ஆழ்வார் ஆய்வு மையம்” வைத்திருக்கிறேன். எனவே,
அந்த துறைக்கு நான் போவதில்லை… 🙂 🙂 🙂

——————————————————————

கேள்வி – 3 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறையினர்
நடத்திய சோதனையில், நீங்கள் 430 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு
செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததே…?

பதில் – வருமானவரி சோதனை என்பது தொழில் செய்பவர்கள்
அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும்… 🙂 🙂 🙂

தொழில்…( ?) செய்யாதவர்களுக்கு
அதைப்பற்றி ஒன்றும் தெரியாது… 🙂 🙂 🙂

வரி ஏய்ப்பு எதுவும் நடக்கவில்லை. கணக்கு பக்காவாக இருக்கிறது.

———————————————————————————

அம்புடுதேன்…

தமிழகத்தின் நம்பர் ஒன் புலன் விசாரணை பத்திரிகையே
interview, interrogation – எல்லாம் நடத்தி முடித்து விட்டது…!

எல்லா உண்மைகளும் வெளிவந்து விட்டன..
இனி யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது…
அதற்கான அவசியமே இல்லை…
ஜூ.வி.யையோ, “ஆழ்வார் ஆய்வு மைய” சொந்தக்காரரையோ
இனி எந்த குறையும் சொல்ல முடியாது…

all clear…. case closed…
அவரவர் தங்கள் சொந்த வேலையைப் பார்க்க போகலாம்…!!!


.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to “நான் ஆழ்வார் ஆய்வு மையம் வைத்திருக்கிறேன்…” ஒரு வழியாக ஜு.வி. ஒரு உண்மையை வரவழைத்து விட்டது …!!!

  1. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    அப்பா ஜெகத்ரக்ஷகன் ஆழ்வார் ஆய்வு மையம் வைத்திருக்கிறார் .
    மகன்கள் சாராய ஆலை வைத்திருக்கிறார்கள் . என்ன பொருத்தம்.
    அப்பா ஆன்மிகம் மகன்கள் சாராயம். 26000 கோடி இலங்கை முதலீட்டில்
    மகன்கள் மனைவி மகள் இருக்கிறார்கள் . ஒன்றும் பிரச்னையில்லை
    ஆனால் அந்த 26000 கோடி எங்கிருந்து வந்தது என்பதை விகடனார்
    கேட்டு பெறவில்லையே . அங்குதான் சந்தேகமே வருகிறது

  2. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    2009 இல் 5 கோடி சொத்து. 2011 இல் 70 கோடி சொத்து. இரண்டே வருடத்தில் 1400 சதவிகிதம் வளர்ச்சி. எப்படி இந்த அளவு சொத்து சேர்க்க முடிந்தது என்று யாராவது கேட்டார்களா?

    யாருமே கேட்காததால் தான், கிட்ட தட்ட வெளிப்படையாகவே சொத்து சேர்க்கமுடிகிறது.

    இவரெல்லாம் இன்னும் சுதந்திரமாக உலவுவதும் தேர்தலில் போட்டியிடுவதும் நம் சாபக்கேடு!

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! அணைத்து அரசியல்வாதிகளுக்கும் மனைவி { ஒரு சிலருக்கு துணைவி மற்றும் இணைவி } – மகன்கள் — மகள்கள் இருப்பது ஒரு விதத்தில் வாரிசாக ஊ கும் .. பலவிதத்தில் வசதியாக – ஒத்தாசையாக — தங்களுக்கு கேடயமாக பயன்படுத்த ஏதுவாகிறது … ? இதிலிருந்து இவர் மட்டும் விலகிவிடவா போகிறார் — இலங்கையில் பல்லாயிரம் கோடி ரகசிய முதலீடாகட்டும் — மதுபான அலைகளாகட்டும் — எல்லாமே மனைவி — மகன் களுக்கு என்று கூறி பசப்ப முடிகிறது — என்ன அந்த ” மனைவி – மற்றும் வாரிசுகளுக்கு ” இவ்வளவும் எப்படி வந்தது என்று கேட்க நாதியில்லாத அரசியலமைப்பு மற்றும் மக்கள் — வேடிக்கை ஜனநாயகம் — ?

    430 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு வந்தது — அதன் பிறகு அது என்னவானது ..யாருக்கும் தெரியாது — இந்த ஜெகஜ்ஜால ஜெகத் அவர்கள் ஆழ்வார் ஆய்வு மையம் மட்டும் என்றில்லை — மாபெரும் கவிஞர் ? கூட … தன் முன்னாள் தலைவன் — இந்நாள் தலைவன் என்று கவிதைகளை எழுதிக் குவித்துள்ளார் …

    சென்ற 2014 நாடாளமன்ற தேர்தலின் போது கவிதை வடிவில் ஒரு துண்டு பிரசுரம் 32 பக்கங்கள் கொண்டது மக்களுக்கு கொடுத்து வாக்குகளை கேட்டார் — அந்த கவிதையில் சில வரிகள் பார்வைக்காக :–

    // , ‘மின்னலை விழுங்கி, மின்சாரத்தை கொப்பளிக்கும், என் உயிரினும் மேலான இதயத் துடிப்பாய் விளங்கும் வாக்காளர் பெருமக்களே, என்றும் என் அன்பு வணக்கம்’ என, ஆரம்பித்து, தன் பெருமைகளை விவரித்துள்ளார். தன்னை எம்.பி.,யாக தேர்ந்தெடுத்தால்,

    ‘அரசியல், ஆன்மிகம், இலக்கியம் என, முப்பழத்தின் கூட்டாகி, முத்தமிழின் பாட்டாகி, உங்கள் வீடெல்லாம், ஏடெல்லாம், தமிழ் நாடெல்லாம் மணப்பேன்; அரைத்த சந்தனமாய், உரைத்த வார்த்தைகளைப் பழுத்த நெஞ்சத்தில் பதிப்பேன்; அல்லும் பகலும், அறுபது நாழிகையும், உங்களைப்பற்றியே நினைப்பேன்; கார்காலக் காவிரிபோல் ஓடி வந்து, உங்கள் காலடிப் பாதங்களை நனைப்பேன். நெல்லிக்காய் சாப்பிட்டு நீர் குடித்த மாதிரி, உங்கள் நினைவுகளில், எக்காலமும் தித்தித்திருப்பேன்’ எனவும், குறிப்பிட்டுள்ளார். //

    இதில் அல்லும் பகலும், அறுபது நாழிகையும், யாருக்காக உழைத்து இருக்கிறார் என்பதற்கு இடுகையே சாட்சி … இந்த தேர்தலுக்கு இது வரை எந்த கவிதையும் வெளியிடாதது தொகுதி மக்கள் செய்த புண்ணியம் —?

    அறத்தின் படி வாக்கு அளிக்க ”
    நாளை ஏப்ரல் ஒண்ணாம் தேதி { முட்டாள்கள் தினம் என்கிறார்கள் } ஏமாந்தால் அன்று மட்டும் முட்டாள் — தமிழகத்தில் ஏப்ரல் 18 ம் தேதி ஏமாந்தால் ஐந்து வருடத்திற்கு முட்டாளர்களா …?

  4. Manickam's avatar Manickam சொல்கிறார்:

    எங்கோ ஒரு சிற்றூரில் நடப்பது எல்லாம் ஊதி ஊதி பெரிதாக்கி, எல்லா சேனல்களும் நாள் முழுக்க பிளாஷ் நியூஸ் போட்டு , போதாமல் கண்டவர்களையும் கூப்பிட்டு அவைகளை பற்றி விவாதம் வைத்து பரபர வென்று இருக்கும் தமிழக தறுதலை ஊடகங்கள், பத்திரிக்கைகள் ஜகத் ரட்சகன் குடும்பம் இவ்வளவு பெரிய அளவு இலங்கையில் முதலீடு செய்த செய்தியினை கண்டுகொள்ளாமல் நகர்ந்து போனது மகா கேவலம். மக்கள் அணைத்து ஊடகங்களையும் தூக்கி எறிந்துவிட்டு தலைமுழுகலாம்.. எந்த ஒரு ஊடக நபர்களுக்கும் இது குறித்து சிறிதும் குற்ற உணர்வோ / வெட்கமோ இல்லாமல் ஒன்றும் நடவாத பார்வையில் தேர்தல் பிரச்சார கொட்டமடித்துக்கொண்டுள்ளன.மானம் கெட்ட ஊடகங்கள்

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எந்த பின்னணியும் இல்லாமல், ஒருவரால் (அவரால் அல்ல.. அவரது மகன்களால்) இவ்வளவு குறுகிய காலத்தில் 26,000 கோடி ரூபாய் (இது ஒரு பிஸினெஸில் இன்வெஸ்ட்மெண்ட்) சம்பாதிக்கமுடியுமா? நீங்கள் இதை நம்புகிறீர்களா? இந்தப் பணத்தில் 20-50% யாருக்கு பங்கு இருக்கும் என்று யோசியுங்கள். இல்லாவிட்டால், ஆர்.எம்.வீரப்பன் ஆளுக்கு, திமுகவில் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு செல்வாக்கும் தகுதியும் கிடைக்குமா? ஒரு ஜெகத்ரட்சகனுக்கு சிங்கப்பூரில் இவ்வளவு பணம் இருந்தால், ‘சிங்கப்பூரில்’ வாழ்கின்ற கணவருக்கு எவ்வளவு பணம் இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

    ஜெகத்ரட்சகன் அப்பா, வைணவம். திவ்யப்ப்ரபந்த புத்தகத்தை மலிவான விலையில் அச்சடித்தவர். ஜெகத்ரட்சகன் அரசியல் ஆரம்பத்தில், மற்ற திமுக தலைவர்களைப்போலவே வெற்றுத்தாளில் ஆரம்பித்தவர் (பொன்முடி, நேரு, வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, மாறன், துரைமுருகன்………..). எடப்பாடி அரசை ஊழல் என்று சொல்லும் தகுதிகூட திமுகவுக்குக் கிடையாது. அதிமுக அரசு ஊழல் செய்திருந்தது என்று வைத்துக்கொண்டாலும், 10 ரூபாய் திருடனுக்கும் 10 கோடி ரூபாய் திருடும் திமுகவுக்கும் உள்ள வித்தியாசம்தான் இது. நிற்க….

    விகடன் திமுக மேகசின். திமுகவினரைப் பற்றி எழுதும்போது அவர்கள் பொய்யை மெய் போலவே எழுதுவார்கள். ஜெகத்ரட்சகனிடம் மது ஆலை இருக்கிறது என்று வைகோ போராடும்போது எழுதமாட்டார்கள். திமுக ஆலையில் கனிமொழி, டி.ஆர்.பாலுக்கு பெரும் பங்கு உள்ளதே என்று எழுதமாட்டார்கள். விகடனைப் பொறுத்தவரையில், 26,000 கோடி திருடு என்பது சாதாரணம். கேடி பிரதர்ஸின் கேபிள் திருட்டு, ப.சி. மகன் பல்லாயிரம் கோடி சம்பாதித்தது என்பதையெல்லாம் அவர்கள் தொடமாட்டார்கள். கேடி பிரதர்ஸைப் பற்றி அவர்கள் எழுதியபோது, கேபிள் திருட்டை மிக மென்மையாக ஓரிரு வரிகளில் ‘சொல்லப்படுகிறது’, ‘அரசியல் குற்றம் சாட்டுகிறார்கள்’ என்று எழுதுவார்கள். பாலசுப்ரமண்யம் காலத்திலேயே சாயம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது. திமுக பத்திரிகை என்பதால் அதில் உண்மை, நேர்மை போன்றவற்றை எப்படி எதிர்பார்க்கலாம்?

  6. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Mr.KM,
    This is totally unconnected to the subject On March 29, 2019, we all went to my g
    rand son’s school (he is studying in 2nd class) in Virginia to attend an international school
    students cultural events organized by the school authorities. Each family should bring an eatable
    item for dinner. The event was attended
    by children of 19 countries studying in that school. The countries are:Albania, Azerbaijan, Chile, China,Egypt, England, France,India, Iran, Kazakhasthan, Kenya, Korea, Nigeria, Pakisthan,
    Phylipines, Russia, Spain Thailand, & USA..All students studying in elementary school. At first I was reluctant to attend since I don’t have interest in these matters as you know. After much
    persuation of my family members I attended. We saw the full event till 8.30 pm.
    What a nice and brilliant show it was by children. each country’s students played their games,
    music dance, drama. Excepting some claps by the elders at the end of every event, there
    was a pin drop silence on the whole.
    That was the REAL cultural show I felt. Of course there was Indian dance(group) and a solo
    Bharatha natyam.
    ‘I hope by this time in what sense I am conveying this matter, you would have understood.,.

    R.Gopalakrishnan

  7. Prabakar's avatar Prabakar சொல்கிறார்:

    Vikadan group now support BJO & EPS GROUP

  8. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    இதே போல் இன்னொரு உத்தமர் இருக்கிறார். டி ஆர் பாலு. தன் மகனின் கம்பெனிக்கு சிபாரிசு செய்து விட்டு, ஆமாம். செய்தேன். என்ன தவறு என்று பார்லிமென்டில் கேட்டு எல்லோரையும் வாயடைக்க வைத்தவர்.
    https://www.hindustantimes.com/india/yes-i-used-my-position-says-tr-baalu/story-Cyk3tgBMWTQJSRNAendrFJ.html
    கடலில் மண் அள்ளும் கான்ட்ராக்ட்டில் பணம் அள்ளியவர். மௌனகுரு மன்மோகனே இவர் என் அமைச்சரவையில் வேண்டாம் என்று கூற வைத்தவர். இன்று மறுபடி தேர்தலில்! இவர்களெல்லாம் தேர்தலில் நிற்பது மக்கள் முட்டாள்கள் என்று திடமாக நினைப்பதால்தானே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.