நீ. மோடியை பிடித்தது யார்…? ( இது தேர்தல் காலம் -7 )


வங்கித்திருடர் நீரவ் மோடியை பிடித்தது
லண்டன் டெலக்ராப் (London Telegraph ) செய்தித்தாளின்
நிருபரே தவிர இந்திய புலனாய்வு நிறுவனங்களோ,
வருமான வரித்துறையோ, அமலாக்கப்பிரிவோ அல்ல…
எனவே, நீ.மோடியை பிடித்ததை ந.மோடிஜியின் சாதனையாகச்
சொல்வது தவறு – என்கிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வர்
ஒமர் அப்துல்லா.

இதை முன்வைத்து
ஒரு செய்தி வீடியோ வெளியாகி இருக்கிறது…
நண்பர்களின் பார்வைக்கு அது கீழே –

இவர்கள் என்ன சொல்கிறார்கள் ..?


.
—————————————————————————————————

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to நீ. மோடியை பிடித்தது யார்…? ( இது தேர்தல் காலம் -7 )

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! // Ostrich hide for Nirav, rhino hide for ‘refugee’ spotters // ‘Many of these who cheated India… are living the life of fugitives and refugees’

    By Amit Roy and our Delhi Bureau in London
    Published 10.03.19, 1:54 AMUpdated 10.03.19, 1:54 AM

    இந்த செய்தியில் முழு விவரமும் அடங்கியிருக்கு — லண்டன் வீதியில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்த நீரவ் மோடியை வீடியோவில் பதிவு செய்திருக்கிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் இங்குள்ள அதுகுறித்து டிவிட் செய்த பாஜக // Stung by a disclosure by a London-based newspaper and the resultant political backlash in India, the BJP tweeted on Saturday: “Many of these who cheated India… are living the life of fugitives and refugees.” // — “இந்தியாவை ஏமாற்றி தப்பித்த பலர் ; { ” பாவம் ” } அகதி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்”. என உச்சுக் கொட்டி பரிதாப்பட்டு கரிசனம் காட்டுகிறார்கள் .. என்கிறதா இந்த செய்தி … ? நீர் அடித்து — நீர் விலகுமா என்பது …?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நானும் இத்தனை காலம், ஹாஸ்டல்ல இருந்தபோது என் அப்பாதான் பணம் அனுப்பினார்னு நம்பிக்கிட்டிருந்தேன். இப்போதான் புரியுது, அது, பணத்தை என்னிடம் கொடுத்த போஸ்ட்மேன் தந்த பணம் அது என்று. அடுத்தது, ‘நமக்கு சம்பளம் தருவது கம்பெனி அல்ல, ஏ.டி.எம். மிஷின்” என்றும் சொல்ல ஆட்கள் கிளம்பிவிடும்.

    நீரவ் மோடி மட்டுமல்ல, மால்யா போன்ற அனைவருக்கும் கடன் கொடுத்தவர்கள் யார்? அதற்கான கமிஷன் பெற்றுக்கொண்டவர்கள் யார்? என்பதைப் பார்த்து அவர்கள் அனைவரையும் (அதனை அப்ரூவ் செய்த வங்கி அதிகாரிகள்-கையெழுத்து போட்டவர்கள் அனைவரும்) ஜாமீனில் வெளிவராத வகையில் உள்ளே வைத்து அவர்களது-இதில் அவர்கள் உடன் பிறந்தவர்கள், பெற்றோர், குழந்தைகள் அனைவரும் அடங்கும், சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்..

  3. John's avatar John சொல்கிறார்:

    People like u r the reason for the bad state of governace in centre and state.

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    தனிப்பட்ட முறையில் எனக்குத் தோன்றுவது… பாஜக, இவர்களையெல்லாம் சட்டத்தின் பிடியில் கொண்டுவருவதற்கு மெனெக்கெடவில்லை. (ஜெட்லி , சுஷ்மா போன்றவர்கள் செய்தவை நினைவுக்கு வருது). அவரது வீடியோ வெளியானதால், தேர்தல் காலம் என்பதால் நடவடிக்கை எடுப்பதுபோல் தெரிகிறது. ரொம்ப ஆராய்ந்து பார்த்தீங்கன்னா, கட்சி நிதி வாங்கின எந்தக் கட்சியும், தனக்குக் காசு கொடுத்தவனுக்கு ஆதரவாகத்தான் செயல்படும். அது காங்கிரஸோ, பாஜகவோ, மற்ற கட்சிகளோ….. அதனால், பாஜக, ஒருவேளை நீரவ் மோடியை இந்தியாவிற்குக் கொண்டுவந்தால், கிரெடிட் பாஜகவுக்குக் கிடையாது. எப்போ இவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, முழுச் சொத்தையும் பறிமுதல் செய்து-குடும்பச் சொத்துக்களை, உள்ளே ஜாமீனில் வெளிவராதபடி வைத்தால்தான் பாஜக அதற்கான கிரெடிட் எடுத்துக்கொள்ள முடியும். இதை எந்தக் கட்சியும் செய்யப்போவதில்லை…..

  5. பெருமாள் கருப்பையா's avatar பெருமாள் கருப்பையா சொல்கிறார்:

    நீரவ் மோடி கைது செய்யப்பட காரணம் தளபதி ஸ்டாலின் அவர்களே
    அவர்தான் தகவல்களை வழங்கினார்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      பெருமாள் கருப்பையா,

      ஒருக்கணம் நான் திகைத்து விட்டேன்… நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள் என்பது தெரியாமல்… 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.