…
…

…

..

..

..

..

.
——————————————————————————————————————————-
…
…

…

..

..

..

..

.
——————————————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். நான் பல மாதங்களாக தமிழ்மணத்தில் இந்தத் தளம் முதல் ரேங்கில் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
உங்கள் கருத்தில் சிலருக்கு/பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் உங்கள் பார்வையில் தவறில்லை என்றே நினைக்கிறேன். எந்த ஒரு செய்திக்கும் இருவேறு பக்கங்கள் இருக்கக்கூடும். உங்கள் அனுமானத்தை வைத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள், அதனை விமர்சிப்பதும் மாற்றுக்கருத்து எழுதுவதும் படிப்பவர்களது உரிமை என நீங்கள் செயல்படுத்துவதும் இந்தத் தளத்திற்கான ஹிட்ஸ்களுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
சோ, அவரது கருத்துக்களுக்காக பாராட்டப்படவில்லை. அவரது கருத்துகளில் இருந்த நேர்மைக்காக, சொந்தக் காரணங்களுக்காக எழுதாத தன்மைக்குத்தான் பாராட்டப்பட்டார். அந்த வழியிலேயே நீங்கள் எழுதுகிறீர்கள் என்றே நான் நினைக்கிறேன் (அதில் பலவற்றை ஏற்றுக்கொள்ளாதபோதிலும்)
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.
புதியவன்,
உங்கள் மனம் திறந்த கருத்துகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
சோ சார் எனக்கு மானசீக குரு.
(அவரையும் கூட சில சமயங்களில்
திட்டி இருக்கிறேன்…!!! )
அவர் அளவிற்கெல்லாம் நான் கனவில் கூட போக முடியாது
ஆனால், என் முயற்சிகளில், அவரது சாயல் தென்படலாம்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பலவருடங்களாக நானும் உங்களை தொடர்கிறேன். புதியவன் அவர்கள் சொன்னதுதான் என் கருத்தும். தங்களின் நேர்மை தங்களை தொடர்வதன் முக்கிய காரணம். எல்லா மீடியாக்களும் ஒரு சார்பு நிலை எடுக்கும்போது, தங்களை போன்றவர்களின் பதிவுகள் உண்மையை பிரதி பலிக்கின்றன. விரைவில் 50 லக்ஷத்தை தொட வாழ்த்துக்கள்.
நண்ப bandhu,
உங்களை பல வருடங்களாக உங்கள் பின்னூட்டங்களின் மூலம் சந்தித்து வருகிறேன்…!
நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எழுத்தாளர் சாரு நிவேதிதாவை விட ரேங்கில் முன்னணியில் இருக்கின்ரீர்கள்
வாழ்த்துக்கள்
ரிஷபராஜ் ராஜேந்திரா,
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீங்கள் விமரிசனம் தளத்திற்கு முன்பிருந்தே வருகிறீர்களா…?
பின்னூட்டங்கள் எழுதுவது உண்டா…? எனக்கு நினைவில் இல்லை.
சாரு நிவேதிதாவுக்கு நிறைய வாசக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர் எல்லா விஷயங்களையும் தொடுவார்.
நான், அவர் தொடும் சில விஷயங்களின் பக்கமே போக மாட்டேன்… 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வாழ்த்துக்கள் அய்யா. இந்தத்தளம் மென்மேலும் பரிமளிக்க வேண்டும்.
நன்றி கார்த்திக்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வாழ்த்துக்கள் அய்யா!
நன்றி நண்ப மாறன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா … ! ஆரம்பித்தது ஜூலை 2009 — இருந்து மார்ச் 2010 ற்குள் ஒன்பது மாதங்களில் நூறு இடுகைகள் … அதுவரை வாசக நண்பர்களுக்கு யார் என்று தெரியாமல் இருந்த ” காவிரிமைந்தன் ” தன்னை பற்றி கூறியது : —
// இனி என்னைப்பற்றி சில வார்த்தைகள் –
காவிரிமைந்தன் – புனைப்பெயரிலிருந்தே
யூகித்துக்கொண்டிருபீர்கள் –
பிறப்பு -காவிரிக்கரை – சோழத் தலைநகர் !
தற்போதைய இருப்பு – சென்னை மாநகரம் !
வயது – ஐம்பதுக்கு மேல் (மேலே எவ்வளவு
வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் !)
படிப்பு – பிழைப்புக்காகப் படித்தது
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் –
(பொருளாதாரத்திலும், உலக சரித்திரத்திலும்)
அறிந்துக்கொள்ள் வேண்டும் என்கிற ஆர்வத்தில்
படித்தது -மைசூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் !
( ஆனால் வழக்குரைஞராகத் தொழில்
புரிவதில் ஆர்வமில்லை )
தெரிந்த மொழிகள் – பேச, படிக்க, எழுத
தெரிந்த மொழிகள் – தமிழ்,ஆங்கிலம்,இந்தி
தாய் மொழி – அமுதத் தமிழ்
பேசினால் புரிந்துக்கொள்ளக்கூடிய மொழிகள் –
மலையாளம், தெலுங்கு, மராத்தி.
பணி நிமித்தமாக இந்தியாவில் பல மாநிலங்களில்
இருந்ததால் – பலதரப்பட்ட மக்களுடன்,
அவர்கள் கலாச்சாரத்துடன் பழக்கம் உண்டு.
இந்தியாவின் முக்கிய நகரங்கள்
அனைத்துடனும் ஓரளவு பரிச்சயம் உண்டு.
வெளிநாட்டு அனுபவம் – 3 முறை சிங்கப்பூர்
சென்று வந்த அனுபவம் உண்டு.
எனக்குப் பிடித்தவர்கள் – பாரதியும், பெரியாரும் !
இருப்பவர்களில் – நிறைய பேர் !
(அவ்வப்போது அவர்களைப் பற்றி
எழுதுகிறேனே !)
எனக்குப் பிடித்தவை – எழுத்தும்,சமுதாய நலனும்.
நிறைய படிப்பேன்.
இன்னும் படிக்க வேண்டும்.
அதற்கு இன்னும் நேரம் வேண்டும் !
இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி எழுத வேண்டும்.
எழுத வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாகவே
உண்டு. ஆனால் எழுத ஆரம்பித்தது
என்னவோ கடந்த 10 மாதங்களாகத்தான். என்று தன்னைப்பற்றி ஒரு அறிமுகம் செய்துகொண்டார் —
அதில் எந்த மாற்றமும் இல்லாமல் சமுதாய கடமையோடு — நடு நிலையான செய்திகளோடு — மக்களின் நலனில் அக்கறையோடு — பல தரப்பட்ட அரசியல் – சமூக – பொதுப்பணி – நலத்திட்டங்களை நாடுவோர் இன்னும் பலரைப்பற்றி அவ்வப்போது தளத்தில் அவர்களின் இயல்புகளை பாகுபாடின்றி இடுகைகளாக பதிவேற்றி வந்ததையும் — தளத்தின் மேன்மைக்கு ” எந்த சார்பு பங்கமும் ” ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டு நீண்டு – நிலைத்து இருப்பதும் திரு கா.மை அவர்களின் நிலைப்பாடு என்பதில் எம்மை போன்றவர்களுக்கு மாற்று கருத்து கிடையாது …
ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை அதிமான எண்ணிக்கையையில் எழுதியது சென்ற ஆண்டு நவம்பர் 2018 ல் மட்டும் 56 இடுகைகள் — ஒரு வேலை அது இந்த மாதம் அதிமமாகுமோ என்னவோ …!!!
அய்யா .. ! தற்போது தங்களின் கையெழுத்தில் சில மாற்றங்கள் தோன்றுகின்றன — இயல்பானது தான் { வயது ..?}
நீங்கள் தற்போது குறிப்பிட்டுள்ள தீவிரமாக பங்கேற்ற பழைய நண்பர்கள் யார் என்பது எம்மைப்போன்றவர்களுக்கு அத்துப்படி … தற்போதைய நண்பர்கள் அவர்களைப்பற்றி அறிய முந்தைய இடுகைகளை புரட்டினால் காணலாம் — அந்த அதி தீவிர நண்பர்கள் வருவார்கள் — என்கிற நம்பிக்கை எமக்குண்டு …! பிணக்கு என்பது எம்மை போன்றவர்களுக்கு ஒருசில நேரங்களில் ஏற்பட்டு விலகியதுண்டு என்பதை யாம் தெரிவித்தே ஆக வேண்டும் இந்த நேரத்தில் —
இந்த தளத்தை பொருத்தவரையில் நண்பர்களின் நல்ல கருத்துக்களை ” இடுகையாக ” வெளியிட்டு அவர்களின் எழுதும் திறனை வெளிக்காட்டுவதில் தனி சிறப்புடையவர் திரு.கா.மை அவர்கள் — எடுக்காட்டாக யாம் கிறுக்கிய ஒரு சிலதும் வெளிவந்ததை நினைவு கூர்வது எமது கடமை … அதில் ஒன்று சில நாட்களுக்கு முன் அய்யா குறிப்பிட்டு இருந்தாரே // அது ஒரு கனாக்காலம் // என்று — அதே தலைப்பில் எமது கிறுக்கல் ஒன்றும் இங்கே இருக்கிறது என்பது எனக்கு பெருமையே —
” தடம் பார்த்து நடப்பவன் மனிதன் { எம்மைப்போல } தடம் பதித்து நடப்பவன் மா மனிதன் திரு கா. மை அவர்களைப்போல — இந்த சாமானிய ” பாமரன் ” — பாமரன் செல்வராஜன் — செல்வராஜன் ” என்கிறவனின் வாழ்த்துக்கள் ….!!! — என்ன நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எழுதுவீர்கள் — யாம் இருந்து வாசிக்க இறைவன் அருள வேண்டும் ….அருளுவான் ???
செல்வராஜன்,
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..
இந்த அளவு பாராட்டுதல்களுக்கு நான் தகுதியானவன் இல்லை.
உங்கள் நட்புணர்வும், பரந்த மனதும் தான் இந்த வாழ்த்துதல்களுக்கு காரணம்
என்றே நான் எடுத்துக்கொள்கிறேன்…
நான் ஏற்கெனவே சொன்னது போல், உங்களைப்போன்ற, நல்ல சிந்தனையோட்டமும்,
ஞாபக சக்தியும் உள்ள சில நண்பர்கள் தான் இந்த விமரிசனம் வலைத்தளத்தின் சொத்து.
அவர்களால், இந்த வலைத்தளம் கூடுதல் பலமும், பரிணாமமும் பெறுகிறது.
உங்கள் பெயரில் சேர்த்துக்கொள்ளும் “பாமரன்” அடைமொழியை நீக்கி விடுங்கள்..
நீங்கள் எனக்கு செல்வராஜன் மட்டும் தான் என்று நீண்ட நாட்களுக்கு
முன்பே சொன்னேனே…!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
BEST WISHES to you sir.
What happened to our old friend ‘ today and me’. Is he still in contact with you?
I terribly miss his wise writings/comments.
நன்றி Sharron.
நமக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு அவ்வளவு சீக்கிரம் மறந்து விடக்கூடியதல்ல.
உங்களைபோலவே தான் நானும் நண்பர் todayandme -க்காக காத்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதா விட்டாலும், குறைந்த பட்சம் இந்த இடுகைக்காகவாவது அவர் எங்கேயிருந்தாவது திடீரென்று தோன்றி – ‘உள்ளேன் அய்யா’ என்று attendance -ஆவது கொடுப்பாரென்று நம்புகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
i am your regular reader,you are like common man (r,k,laxman) .sorry i donot have tamil keyboard to express lot.
நன்றி கோபால் மோஹன்.
நீங்களும் தமிழில் பின்னூட்டங்களின் மூலம் கருத்து சொல்லும் காலம் விரைவில் வருமென்றே நம்புகிறேன்.
கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
congratulation
நன்றி ஆவுடையப்பன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
30 lacs hits! My God, What a wonderful achievement, KM. Heartiest congrats! I might not have commented on many of your articles but I never failed to go through your posts every day during the last few years. Some times I look up to your columns more than once a day,like I open The Hindu’s page. On a few occasions, I didn’t agree with your take on certain personalities in the political field, but surprisingly, I found that you proved to be right ultimately. Both of us are 100% on the same page on being ardent fans of Sivaji Ganesan, and also your choice of songs from the golden age of Tamil Cinema. Please do continue your service for the sake of readers like me. Great going indeed!
சந்திரமௌலி,
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
உங்களைப் போலவே தான், இந்த விமரிசனம் தளம் எதாவது ஒரு விதத்தில், அதன் வாசக நண்பர்களுடன்
இணைந்து பயணிக்கிறது. நீங்கள் சொன்னது போல், நம்மிடையே பல விஷயங்களில் ரசனை ஒத்துப்போகிறது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
My honest blessings to you Mr.KM to reach one million readers before end of this year. I think
I started reading your site accidentally while I was in abroad somewhere in 2010. From that time
I never missed a day reading your article. Then I told my entire family members (my brothers&sisters) to follow your articles.They are also reading it till now. Mostly I agree with your
views except a few. Also, somehow, I don’t have interest in other subjects except politics.
even then, I read it fully wherever I am. Wish you all the best Sir.
R.Gopalakrishnan
கோபாலகிருஷ்ணன்,
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்கள் விருப்பம் எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால்,
நான் அரசியல் அல்லாத மற்ற தலைப்புகளில் இடுகை எழுதும்போதெல்லாம் உங்களை நினைத்து
பயந்துகொண்டே தான் எழுதுவேன்…. 🙂 🙂 🙂
வெளிநாடுகளிலிருந்து நிறைய நண்பர்கள் விமரிசனம் படிக்கிறார்கள் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
அமெரிக்காவிலிருந்து மட்டுமே சராசரியாக தினமும் 200 நண்பர்களுக்கு மேல் படிப்பது
என் dashboard லிருந்து தெரிய வருகிறது. என் நன்றியும், வாழ்த்துகளும் அவர்களுக்கும் சேர்த்து தான்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
I forgot to tell you that I also read fully the comments of our viewers.
ஆமாம்… பின்னூட்டங்கள் இந்த தளத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம்.
விரிவான விவாதங்கள் தளத்திற்கு வலு சேர்க்கின்றன.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வாழ்த்துக்கள் சார்! தொடர்ந்து எழுதுங்கள்
மிக்க நன்றி mekaviraji.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வாழ்த்துகள்! உங்கள் கையெழுத்து அழகாக உள்ளது!
நண்ப Peppin,
-உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
என் கையெழுத்து – ஒரு காலத்தில் நன்றாக இருந்தது… ஆனால் இப்போது இல்லை.
முக்கியமான இரண்டு காரணங்கள் –
பணியிலிருந்து ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகி விட்டதால்
தினமும் எழுதுகிற வழக்கம்/அவசியம் நின்று விட்டது.
Modern Technologies வந்து – யாருக்கும் கடிதங்கள்
எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் செய்து விட்டன.
கடைசியில் இன்னொரு காரணமும் – வயது காரணமாக,
கை – நினைக்கிறபடி இயங்குவதில்லை….!!! 🙂 🙂 🙂
-இத்தனை இருந்தாலும் – எனக்கு இவற்றைப்பற்றி குறையேதும் இல்லை;
இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்போமே…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஐயா. முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் கூகுளில் வேறெதோ தேடுமபோது தங்கள் தளத்தைக்காண நேர்ந்தது. அன்றிலிருந்து தினமும் இங்கு இடுகைகளைப் படித்து வருகிறேன். தங்கள் எழுத்துக்களில் உள்ள நேர்மை மிகவும் பாராட்டத்தக்கது. கடவுள் அருளால் தாங்கள் நெடுநாள் சிறப்பாக வாழ்ந்து இந்நற்பணியை சமன நிலையுடனேயே தொடர வேண்டும். நன்றி.
Congrats sir
Hearty congratulations. I used to read all your article with comments. All are excellent. You use to write many things which are not appearing in press. I will pray to God to keep you with good health.
திரு.பையா,
திரு.ரகுராமன்,
திரு.வெங்கட்ரமணன் –
உங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Ayya
Your words are more powerful and meaningful. I probed you few times and your reply was simply fantastic and loved to read many times. Valga mahilvudan ( valth avayathu illai).
கார்த்திக்,
உங்கள் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை .சார்
உங்கள் எழுத்தில் பாசாங்கு இல்லை – நன்றாக இருக்கிறது .
தொடர்ந்து எழுதுங்கள் – வாழ்த்துக்கள் .
பி கு – கையெழுத்து நன்றாகவே உள்ளது –
நீங்கள் இன்னும் முதுமை அடையவில்லை .
நண்ப மெய்ப்பொருள்,
உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற நிச்சயம் முயற்சி செய்வேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
vazhthukkal Ayya, Nan ungal thalathai kadantha pala varudankalaga padikiran,
Nandri
Venkatesan
Houston
Houston வெங்கடேசன்,
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்.
இந்த விமரிசனம் வலைத்தளத்தை உலகெங்கும் உள்ள தமிழர்கள் படிப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது.
தினமும் 200-க்கு குறையாத நண்பர்கள் அமெரிக்காவிலிருந்து படிக்கிறார்கள் என்பது எனக்கு தெரிய வந்தாலும்
ஊர் பெயரை எழுதும்போது தான் யார் எங்கிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து பின்னூட்டம் எழுதும் நண்பர்கள், இது போல் தங்கள் ஊர்-நாடு ஆகியவற்றை தெரிவித்தால்,
எனக்கு inter-act செய்வது கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும்… பெயரை எழுதுவது அவரவர் விருப்பம்…
ஆனால், ஊர், நாடு ஆகியவற்றை குறிப்பிட முயற்சி செய்யுமாறு அந்த நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Best wishes.
நன்றி நண்ப கோபாலசாமி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வாழ்த்துகள் சார் 🙂 மென்மேலும் பல கருத்துகளை ஒருதலைப்பட்சமாக இல்லாமல் வழக்கம் போல தர வேண்டுகிறேன்.
கிரி – மிக்க நன்றி.
ரொம்ப நாட்களாயிற்றே உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து..!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
As Voltaire didn’t say, “”I disapprove of what you say, but I will defend to the death your right to say it” (wrongly credited to him, always, but coined by Evelyn Beatrice Hall, written under the pseudonym S. G. Tallentyre in her 1906 biographical book The Friends of Voltaire), I always appreciate your writings, would comfortably say, “a fan of your writings”! I wish you from the bottom of my heart to keep doing what you have been doing for the past 20 years, establishing the freedom of pen!
Best wishes, and Congratulations!!
மிக்க நன்றி கௌரி கௌரிஷங்கர்.
நான் நன்றாக எழுதுவதாகச் சொல்கிறீர்கள்…
ஆனால், உங்கள் ஆங்கிலம் – எழுத்து நடை மிக நன்றாக இருக்கிறது என்று
சொல்லாமல் வெறுமனே கடந்து போக என்னால் முடியவில்லையே …!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்