என்ன கொடுமை சார் இது…? குமரி அனந்தன் “நாடார்….? “


தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளருக்கான
ஆதரவு கோரும் ஒரு போஸ்டர் இது….

இந்த போஸ்டர் நமக்கு ஒரு புதிய தகவலை தருகிறது.. ..!!!

திரு.குமரி அனந்தன் அவர்களுக்கு அவரது 86-வது வயதில்
புதிதாக “நாமகரணம்” நடைபெற்றிருக்கிறது.

புதிய பெயர் – குமரி அனந்தன் ” நாடார் ”

………………

………………..

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to என்ன கொடுமை சார் இது…? குமரி அனந்தன் “நாடார்….? “

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    ஜாதி, மதங்களின் அடிப்படையில் ஓட்டு கேட்கக்கூடாது என்பது
    தேர்தல் விதிகளின் அடிப்படை. இங்கு பச்சையாக அது மீறப்படுகிறது.
    ஆனால் இதையெல்லாம் யார் கேட்கப்போகிறார்கள் ?

  2. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் எதை advantage என்று நினைத்து இங்கே
    போட்டியிட முன்வந்தாரோ, அதுவே அவருக்கு எதிராகப் போகிறதே ?

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஜாதியை, மதத்தை வைத்து வாக்குகளைக் கவர நினைக்கும் கட்சிகளும், அதன் அடிப்படையில் மட்டும் வாக்கை அளிக்கும் கூட்டமும் இருக்கும்வரை இத்தகைய போக்கு இருந்தே தீரும். கனிமொழி, தான் ‘நாடார்’, தன் அம்மா ‘நாடார்’ இனத்தைச் சேர்ந்தவர், அம்மாவுக்கு பக்தி அதிகம், தனக்கு இந்துமதம் பிடிக்காது என்று பல்வேறு மத வாக்குகளுக்கும் சாதி வாக்குகளுக்கும் முனைந்து ஈடுபடும்போது இத்தகைய போக்கினைத் தவிர்க்க முடியாது. இங்கு தூத்துக்குடி வாக்காளர் தமிழிசை, தானும் பரம்பரை நாடார் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார். அரசியலில் இதெல்லாம் “ஜ க ஜ ம்”

    இந்த போஸ்டர்ல மிஸ் ஆனதைக் கவனிக்கலையே கா.மை சார். உங்களுக்கான நான் அதைச் சொல்கிறேன். இரண்டாம் வரியில், ‘பெருந்தலைவர் காமராச நாடார் அவர்களின் நண்பன்’ என்று சொல்லி காமராசரைக் கீழிறக்காமல், ‘காமராசர்’ என்று மட்டும் போட்டிருக்கும் பெருந்தன்மையை (:-) ) கவனித்தீர்களா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      முன்பே கவனித்தேன்… நல்லவேளை தலைவர் காமராஜர் தப்பித்தார்.

      அவருக்கு இடப்பட்டுள்ல “புதிய நாமகரணம்” குறித்து யாராவது திரு.குமரி அனந்தன் அவர்களிடம் கருத்து கேட்டால் தேவலை…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! பொன்னை [ தங்கத்தை ] நாடார் — பொருளை நாடார் புகழை நாடார் — தன் பெயரில் ஜாதியை போட நாடார் என்று பலதிலும் நாட்டம் இல்லாதிருந்த காமராஜரின் சீடர்களில் ஒருவர் திரு குமரி அனந்தன் … ! அவரது வாரிசு ஓட்டு பொறுக்க இப்படியெல்லாம் நடக்கவேண்டிய காலக்கொடுமையை என்னவென்று சொல்வது — ” தாத்தா – தந்தை பெயர்களில் ” நாடார் ” என்று போட்டவர்கள் தமிழிசைக்கு என்னவென்று போடுவார்கள் — நாடாத்தி என்றா …?

    இந்த நாட்டில் ஆண்களின் பெயருக்கு பின்னால் போடுகிற ஜாதி — பெண்களின் பெயருக்கு பின்னால் போடாதிருப்பது ஏன் …. ? அட பதறுகளா… !! இந்திய தேர்தல் அரசியலில் ஜாதி சார்பற்ற வேட்பாளர்களை தேடுவது — மக்களின் —- ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      ஜாதிகள் ஒழிய வேண்டுமென்று சொல்பவர்கள் கூட, தேர்தல் வந்தால் ஜாதி பார்த்து தானே வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்… பெண்களின் பின்னால் ஜாதி அடைமொழிகள் இல்லையென்பதால் தானே, ஜாத்ப்பெயருடன் இருக்கிற தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை எல்லாம் போஸ்டரில் போட்டுக் கொள்கிறார்கள்…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.