விஷ(ம)மான கொள்கை கொண்டவர்கள்…. ( இது தேர்தல் காலம் – 8 )


இது கொஞ்சம் கடுமையான கருத்துகளை கொண்ட
கட்டுரை. இந்த கட்டுரையை நான் எழுதவில்லை.

இதில் சொல்லப்பட்டிருப்பதை –
நான் முழுமையாக ஏற்கவில்லை. ஆனால், இந்த கட்டுரை
சில நிஜங்களையும் உள்ளடக்கி இருக்கிறது என்பது என் கருத்து.
அந்த உண்மைகள் – இங்கே விவாதிக்கப்பட வேண்டும் என்று நான்
விரும்புகிறேன். விவாதத்திற்கான தளம் தானே இது.

தமிழ்நாட்டின் சீனியர் ஜர்னலிஸ்ட் ஒருவர் எழுதிய கட்டுரை இது.
அவர் யார் என்பதை இப்போதே சொன்னால் –
கட்டுரையை படிக்கும்போது உங்கள் கண்ணோட்டம் மாறக்கூடும்.

எனவே, எந்தவித முன்முடிவுமின்றி –
கட்டுரையை படியுங்கள்…
கருத்து தெரிவிக்க விரும்பிவோர்,
பின்னூட்டங்களின் மூலம் தெரிவியுங்கள்…
– இதை எழுதியவர் யார் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன்…!!!

——————————————————————————–

-இந்த தேர்தல் ஒரு சிக்கலான தேர்தல்!

இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். மற்ற தேர்தல்களை
போல் இல்லாமல் இந்த தேர்தலில் இரண்டு லேயர் இருக்கிறது.
இதை நாம் சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே இதில் நாம் வெல்ல
முடியும்.

முதல் லேயர்:

2014ல் முதல் முறையாக இந்துத்துவ நாஜிகள்
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தனர்.
இந்த ஐந்து ஆண்டுகளில் நாஜிகளால்
என்ன செய்ய முடியுமோ, முடிந்தவரை செய்தும் விட்டனர்.

இப்போது மீண்டும் ஆட்சி அமைத்து இந்தியாவை
நாஜி ஜெர்மனி போல் உருவாக்க துடித்துக்கொண்டு
இருக்கின்றனர். அதற்கு பல்வேறு தில்லு முல்லுகள்
செய்ய முயற்சி செய்வார்கள்.

இரண்டாம் லேயர்:

இதுதான் மிகவும் ஆபத்தான லேயர்.
2014ல் – முதல் முறையாக இந்துத்துவ நாஜிகள்
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும்
அதற்கு முழுக்க முழுக்க காரணம் மோடிதான்.

நாஜிகளுக்கு ஒரு விற்கும் முகம் தேவைபட்டது –
அது மோடியாக அன்றைக்கு உருவெடுத்தது.

ஆனால் மோடி முழுக்க முழுக்க ஒரு
இந்துத்துவ நாஜியா? என்றால் அப்படி சொல்ல முடியாது.
மோடி ஒரு பாசிஸ்ட். தான் அதிகாரத்துக்கு வர நாஜிகளை
பயன்படுத்திக் கொண்ட பாசிஸ்ட் அவவளவுதான்.

RSSதான் மோடியை ஆட்டுவிக்கிறதா என்றால் இல்லை.
அந்த கட்டத்தை பாசிஸ்ட் மோடி எப்போதோ
கடந்து விட்டார். இன்னும் சொல்லப்போனால் RSSக்கும்
மோடிக்கும் இடையே ஒரு பெரிய போரே
நடந்து கொண்டு இருக்கிறது.

மோடிக்கு FACE VALUE இருக்கு.
தொண்டர் பலம் இல்லை.

RSSக்கு தொண்டர் பலம் இருக்கு.
FACE VALUE இல்லை.

இவர்களில் யாராவது ஒருவர் கையை விட்டால் கூட
இருவரும் மண்ணை கவ்வுவார்கள்.
இதனை நன்கு உணர்ந்தே பொது வெளியில்
இவர்கள் சண்டையிடாமல் அமைதிகாக்கின்றனர்.

இவர்கள் பிரச்சனையில் நமக்கு என்ன பேராபத்து என்றால் –

இந்த ஐந்து வருடத்தில் தனக்கு இருக்கும் அதிகாரத்தையும்
செல்வாக்கையும் வைத்து மோடி மிக அதிகமாக ஆட்டம்
போட்டுவிட்டார். மோடி தான் பாஜக, பாஜக தான் மோடி
என்ற நிலை வந்து விட்டது. இதை RSS சிறிதும்
விரும்பவில்லை. அதை எதிர்பார்க்கவில்லை.

மோடி ஆட்சி முதல் ஆண்டு முடிவில் பாராளுமன்றத்தில்
நடைபெற்றுக்கொண்டு இருந்த போதிலும்
அங்கு யாரும் செல்லாமல், RSS தலைமையில் நடந்த
‘பாஜகவின் ஒரு வருட ஆட்சி” ரிப்போர்ட் கார்டை
கொடுக்க சென்றனர்.

ஆனால் அதற்கு பிறகு ரிப்போர்ட் கார்டு நடைமுறை
நடக்கவே இல்லை. ஏனெனில் மோடியின் அதிகாரம்
முழுமையாக விரிவடைந்தது. தன்னையும் அமித்ஷாவையும்
தாண்டி யாருமில்லை என்று பாஜகாவிற்குள்ளையே
ஒரு நிலையை ஏற்படுத்திய பின்னர்
பல தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.

மோடி மற்றும் அமித்ஷா மீது கடும் அதிருப்தியிலும்
கோபத்திலும் இருந்தாலும் கூட மோடியை வைத்துதான்
அதிகாரம் என்பதால் RSS/பாஜக தலைவர்கள்
அமைதி காக்கின்றனர்.

இது மோடிக்கும் நன்றாக தெரியும். ஆனால் மோடிக்கு
என்றைக்கு அதிகாரம் கைவிட்டு போகிறதோ அன்று
அவரை RSS தூக்கி எறிந்துவிடும். பாஜகவிலேயே பலர்
பழிவாங்க காத்து இருக்கின்றனர்.

200 சீட்டுக்கு குறைவாக பாஜகவிற்கு கிடைத்தால்
RSS கண்டிப்பாக மோடியை முன்மொழியாது.
மேலும் மோடிக்கு, தனக்கு முன் இருந்த
அத்வானி வாஜ்பாய் போன்றவர்களுக்கு என்ன நேர்ந்தது
என்றும் தெரியும்.

2004ல் வாஜ்பாய் தோற்ற பின் அவர் காணாமல் போனார்.
2009ல் அத்வானி தோற்ற பின் அவர் காணாமல் போனார்.

ஆனால் இவர்கள் யாரும் தங்கள் கட்சிக்குள்ளையே
விரோதத்தை வளர்த்தறுக்கவில்லை அதற்கு மோடி
அளவிற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடைக்காதது கூட
காரணமாக இருக்கலாம்.

இந்த தேர்தலில் மோடி தோற்றால் மன்மோகன் சிங்கை
காங்கிரஸ் மரியாதையாக நடத்துவது போல் பாஜக/RSS
கண்டிப்பாக நடத்தாது. சுவடே இல்லாமல் செய்துவிடும்.

இதை நன்கு உணர்ந்து இருக்கிறார் மோடி.
அதனால்தான் இது பேராபத்து.

தான் தோற்றுவிட்டால் தன் சொந்த கட்சியினரே
பழிவாங்குவார்கள் என்று மோடிக்கு தெரியும்.
அதனால் இந்த தேர்தலில் ஜெயிக்க அவர் எதையும் செய்வார்.
அதனால்தான் பாகிஸ்தானுடன் போருக்கு செல்ல கூட
அவர் தயங்கவில்லை.

நம் பார்வையில் –
இந்த தேர்தலில் இந்தியாவின்
எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும்.

ஆனால் மோடியின் பார்வையில் –
அவரின் எதிர்காலம் காப்பாற்றபடவேண்டும்.
அதற்காக எதையும் செய்வார்
என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் .

ஒரு விஷமமான கொள்கை கொண்டவரிடம் கூட
ஒரு நிதானம் இருக்கும். ஆனால் தன் இருப்பை
தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முற்படுபவர்
மிக மிக ஆபத்தானவர்.

ஏனெனில் அவர்களது பார்வை ஒரு சுத்தியலை போலானது !
தன்னை தவிர அனைத்துமே சுத்தியலுக்கு ஆணியாகவே
தெரியும். எனவே, எச்சரிக்கை தேவை !

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to விஷ(ம)மான கொள்கை கொண்டவர்கள்…. ( இது தேர்தல் காலம் – 8 )

  1. true_indian's avatar true_indian சொல்கிறார்:

    வெகு சுவாரசியமான கற்பனை வளம்.மிகவும் பயந்து போய உள்ளார் போலும்.

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    கொஞ்சம் மிகை இருந்தாலும் கூட, அடிப்படையில் உண்மையைத் தான் சொல்கிறது இந்த கட்டுரை. இப்போது பாஜக என்கிற கட்சியை முழுவதுமாக ந.மோவும், அமீத்தும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள். அவர்கள் சொல்வது தான் சட்டம் அங்கே.

    இந்த நிலை நீடிப்பதை RSS விரும்பாது என்பது உண்மையே. தேர்தல் முடியும் வரை கவனம் சிதறடிப்பதை RSS தலைமை விரும்பாது.
    ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, பாஜக தலைமையில் மாற்றம் நிச்சயம் வரும். ஏற்கெனவே RSS மறைமுகமாக கட்கரியை project செய்ய ஆரம்பித்து விட்டது என்பதை டெல்லி தொலைக்காட்சி பேட்டிகளின், போக்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  3. true_indian's avatar true_indian சொல்கிறார்:

    உண்மையில் அரசியலில் தோற்று போனால் எல்லா கட்சியிலையும் ஓரம் கட்ட படுவார்கள்.இக்கட்டுரையாளர் என்னமோ , மோடி தோற்று போனால், வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்விக்காக ஓரம் கட்ட படுவார் என்று வர்ணிக்கிறார். அதீதமான கற்பனை தான். பயத்தை வெளி காட்டி கொள்கிறார் இந்த கட்டுரையாளர்.

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… மாற்றுக்கருத்தை வரவேற்பீர்கள் என்பதால் இதனை எழுதியிருக்கிறேன். படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும், நான் எழுதியது நியாயமா இல்லையா என்று.

    //இந்தியாவை நாஜி ஜெர்மனி போல் உருவாக்க துடித்துக்கொண்டு இருக்கின்றனர்.// – இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது? பாஜகவோ இல்லை மோடி அரசோ மற்ற மதத்தினருக்கு எதிராக என்ன செய்திருக்கின்றனர்? அதேசமயம், இந்து மதத்திற்கு எதிராக ‘நாஜிப் படையினரைப்போல்’ சிறுபான்மையினருக்கு மட்டும் ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் செயல்படவில்லையா, இப்போதும் அதுதானே அவர்களின் அஜெண்டா? திமுகவின் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன? கொடநாடு கொலையில் நடந்தது என்ன?

    //இந்த தேர்தலில் ஜெயிக்க அவர் எதையும் செய்வார்.// – இது ராகுலுக்குப் பொருந்தாதா? ஜாமீனில் உள்ள தலைவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கிறார். இதுவரை செய்யாத ‘இலவசங்களை’ முன்மொழிகிறார். கிறிஸ்துவ வாக்குகளை அறுவடை செய்ய நேரடியாக முற்படுகிறார். மசூச் அசாரைக்கூட மரியாதையாகக் கூப்பிடும் அளவு அவர்களிடம் டீல் வைத்திருக்கிறார். இதெல்லாம் ஜெயிப்பதற்காகச் செய்யும் செயல்கள் இல்லையா? இங்கு ஸ்டாலின் என்ன செய்கிறார்? எப்போதும் இந்துக்களுக்கு எதிராகப் பேசிவிட்டு, நேரடியாக இஸ்லாமியரைப் பாராட்டிவிட்டு, இப்போது பம்முகிறாரே. ஏன்… சாதாரண அரசியல்வாதி கனிமொழி என்ன செய்கிறார்? இந்துக்களை, அவர்கள் கடவுள்களை அவமதித்துவிட்டு, இப்போது அம்மாவை வைத்து திருச்செந்தூர் கோவிலில் தஞ்சம் புகும் காரணம் என்ன? கம்யூனிஸ்ட் கட்சி என்ன செய்கிறது? எங்கே ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வெகுவாக முயன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள், சனவரியிலிருந்து பம்மி இருப்பதன் காரணம் என்ன? ‘லீலாவதி’ கொலை, அவர்களுக்கு இப்போது மறக்கப்பட்ட அத்தியாயம்.

    //அதனால்தான் பாகிஸ்தானுடன் போருக்கு செல்ல கூட அவர் தயங்கவில்லை// – இதில் என்ன உண்மை இருக்கிறது? மும்பை தாக்குதலின்போது, இந்தியாவின் கவுரவத்தை விட்டுக்கொடுத்து, கிடைத்த பயங்கரவாதிகளையும் பல்லாண்டுகள் சிறையில் வைத்து அவர்களைப் பாதுகாத்து, கடைசியில் தேர்தலுக்காக அப்சல் தூக்குத்தண்டனை நிறைவேற்றியவர்கள் யார்? தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது, பாஜக பாகிஸ்தானுடன் போரிடவில்லை, தீவிரவாத கேம்புகளின் மீது போர் தொடுத்தது. ஸ்டெர்ன் டெசிஷன் எடுத்தது பாஜக அரசா இல்லை இந்தியாவின் கவுரவத்தை விட்டுக்கொடுத்த காங்கிரஸ் அரசா? உடனடியாக மோடி சொன்னது, இராணுவத்திற்கு முழு அதிகாரம் கொடுத்துவிட்டேன் என்பதுதான். அவர் போய் போரிடவில்லை. இராணுவம் எதைச் செய்ய நினைக்கிறதோ அதனைச் செய்யவிட்டார். அதில் என்ன தவறு? – இதனையே ஈழப் போரில் என்ன நடந்தது என்று பாருங்கள்… தங்கள் சொந்தப் பழிவாங்குதலுக்காக சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழர்கள் அனைவரையும் ஒழித்தது காங்கிரஸ் மற்றும் திமுக. எதிரி நாட்டுடன் சேர்ந்துகொண்டு, தன் நாட்டு உறவுகளை இனப்படுகொலை செய்தது. யார் செய்தது நியாயம்?

    //மோடிக்கு என்றைக்கு அதிகாரம் கைவிட்டு போகிறதோ அன்று அவரை RSS தூக்கி எறிந்துவிடும்// – இது அரசியல் அறியாதவர்களின் பேச்சு. அரசியல் கட்சியில் ஒரு தலைவன் தொடர்ந்து தோல்வியையே கொடுத்தால், அவன் கீழ் கட்சி இருப்பது கடினம். மோடி அவர்கள் படுதோல்வி அடைந்தாலோ அல்லது அவரது முகம், பாஜக கட்சிக்கு பாதகமாக இருக்க ஆரம்பித்தாலோ, கட்சி அவரை மாற்றத் தயங்காது. இப்போதும் ஏன் பிரியங்காவை உள்ளே கொண்டுவந்திருக்கிறார்கள்? அதனால் கட்சிக்கு வாக்குகள் அதிகமாகும் என்று. எப்போது அவர் கட்சிக்கு ஒரு லயபிலிட்டி ஆக மாறுகிறாரோ, அப்போதே அவரை கட்சி கழட்டிவிடும்.

    FACE VALUE என்று பேசுவதில் அர்த்தமே இல்லை. ஒரு கட்சிக்கு வாக்காளர்களை ஈர்க்கும் முகம் வேண்டும். அல்லது அவருக்கு கரிஷ்மா இருக்கவேண்டும். அதனால்தான், சொந்தமாக ஒரு வார்டு கவுன்சிலராகக்கூட ஆகமுடியாத மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, அனைத்து கட்சித் தலைவர்கள், மந்திரிகள், அதிகாரிகள் என்று பணம் பண்ணினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியில், என்றைக்கு பிரகாஷ் காரத் லயபிலிட்டி என்று நினைத்தார்களோ அப்போது யெச்சூரிக்குப் போய்விட்டார்கள். இப்போ பிரகாஷ் பேச்சே வெளிவருவதில்லை. இதே கதைதான் அச்சுதானந்தனுக்கும். ஆனால் பாஜகவில், தற்போதுவரை கட்சியை மோடி/அமித்ஷா அவர்கள் கண்ட்ரோலில் வைத்துள்ளார்கள். எப்போது வாக்காளரை ஈர்க்கும் சக்தி போகிறதோ அப்போது அவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை முன்னிறுத்துவார்கள். இதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை.

    பொதுவாக, தளங்களில், மோடி பாதுகாப்பில் குறை வைத்துவிட்டு பாகிஸ்தானையோ தீவிரவாதிகளையோ குற்றம் சொல்கிறார். பாதுகாப்பில் கோட்டை விட்டது அவர் தவறு என்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். இந்த ஆர்கியூமெண்ட், ராஜீவ் காந்தி கொலைக்குப் பொருந்தாதா? மும்பை தாக்குதலுக்குப் பொருந்தாதா? தங்களுக்கு ஏற்றவாறு பேசுவதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கம்…. தேசபக்தி என்பது அவர்களிடம் கிடையவே கிடையாது.

    இப்படி நான் எழுதினாலும், மோடி அல்லது பாஜக அரசு, நன்றாக நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்ததில், நீதி வழங்காததில் அவர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

    ஆனாலும், /இந்த தேர்தல் ஒரு சிக்கலான தேர்தல்!// என்று எழுதுவதில் எழுதியவரின் ஆசைதான் தெரிகிறதே தவிர, நியாயம் என்பது தெரியவே இல்லை.

  5. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    இந்த கட்டுரை சிலரின் வயிற்றெரிச்சலை கிளப்பியுள்ளது தெரிகிறது.
    நடுநிலை போல் காட்டிக்கொண்டு, பாஜகவுக்கு வக்காலத்து வாங்கும் சிலரது நிலையும் வெளியில் தெரிகிறது. மதவாதத்தை பூசி மெழுகி மறைக்க முயல்வதும் புரிகிறது.

    • true_indian's avatar true_indian சொல்கிறார்:

      ஒருவேளை நமக்கு பிடித்தவர்களை மட்டுமே புகல்பவர்களையும், நமக்கு பிடிக்காதவர்களை காரி உமிழ்பவர்களையும் தான் நாம் நடுநிலைமை வாதிகள் என்று ஏற்று கொள்வோமோ?

      • Mani's avatar Mani சொல்கிறார்:

        true_indian,

        நாடகம் ஆடாதீர். நீர் மூன்று டூப்ளிகேட் பெயர்களில் வந்த அன்றே
        கே.எம்.சார் கேட்டாரே. ஏன் உம்மிடமிருந்து இன்று வரை பதிலில்லை.
        ஒரே ஆசாமி 3 பெயர்களில் கருத்தூட்டம் போட்ட அன்றெ உம் வேடம்
        கலைந்து விட்டதே. பாஜக ஜால்ரா என்பது தெரிந்துவிட்டதே.

        • true_indian's avatar true_indian சொல்கிறார்:

          ஒருவேளை, தாங்கள் பொங்குவதை பார்த்தால் , தாங்கள் காங்கிரஸ் அனுதாபியாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். ஆனால், அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

          • Mani's avatar Mani சொல்கிறார்:

            If you are really – true_indian

            //மூன்று டூப்ளிகேட் பெயர்களில் ஏன் எழுதினீர் ? // – answer this first.

  6. Mani's avatar Mani சொல்கிறார்:

    கட்டுரையாளர் கொஞ்சம் குழப்புவதாக தோன்றுகிறது.
    ஜெர்மனியை பொருத்தவரையில் நாஜி கட்சி தான் ஹிட்லர்.
    ஹிட்லர் தான் நாஜி கட்சி.
    ஆனால், இங்கே அதை இரண்டாக உருவகம் செய்கிறார்.
    நாஜி கட்சி வேறு; அதன் தலைமை வேறு; பாஜக வேறு; அதன் தலைமை
    வேறூ என்று.
    RSS விரும்புபவர் தான் இங்கே பாஜக தலைமைப்பொறுப்பிற்கு வர முடியும்.
    RSS விரும்பும் வரை தான் அவர் நீடிக்க முடியும். எனவே இங்கும் RSS உம் பாஜகவும் ஒன்றே தான். ஒன்று இயக்கத்தின் முகம்; மற்றொன்று அதன் அரசியல் முகம்.

  7. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இந்த கட்டுரையை நான் ஏற்கனவே படித்துவிட்டேன். இதை எழுதியவர் யார் என்றும் தெரியும். ஜுவி, நக்கீரன் தொடங்கி பீடு நடை போட்ட காலத்தில் இந்த பத்திரிக்கையும் தொடங்கப்பட்டு இவர் அதன் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

    அவர் யார் என்பதை காமை ஐயாவே சொன்னால் சரியாக இருக்கும் என்று நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

    இங்கு வந்து தன் குப்பைகளை கொட்டும் ஆர்ஆர்எஸ்/பாஜக/மோடி பக்தர்கள் தாங்கள் அவர்களின் பக்தர்கள் தான் என்று தங்களை வெளிப்படுத்தி கொள்வதில் என்ன தயக்கம். ஏன் இந்த வேஷம்.

    இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் எவ்வளவு நேர்மையானவர்கள் ஏன்று. அது அவர்களுக்கு ஊட்டபட்ட போதனை அப்படி.

  8. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இந்த கட்டுரையை நான் ஏற்கனவே படித்துவிட்டேன். இதை எழுதியவர் யார் என்றும் தெரியும். ஜுவி, நக்கீரன் தொடங்கி பீடு நடை போட்ட காலத்தில் இந்த பத்திரிக்கையும் தொடங்கப்பட்டு இவர் அதன் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

    அவர் யார் என்பதை காமை ஐயாவே சொன்னால் சரியாக இருக்கும் என்று நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

    இங்கு வந்து தன் குப்பைகளை கொட்டும் ஆர்ஆர்எஸ்/பாஜக/மோடி பக்தர்கள் தாங்கள் அவர்களின் பக்தர்கள் தான் என்று தங்களை வெளிப்படுத்தி கொள்வதில் என்ன தயக்கம். ஏன் இந்த வேஷம்.

    இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் எவ்வளவு நேர்மையானவர்கள் ஏன்று. அது அவர்களுக்கு ஊட்டபட்ட போதனை அப்படி.

    • true_indian's avatar true_indian சொல்கிறார்:

      அய்யா,
      தாங்கள் ஒருவேளை காங்கிரஸ் அனுதாபியாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் உங்களின் மீது ஏதும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லையே. ஏன் தாங்கள் மட்டும் பிஜேபி பக்தர்களை ஆட்சேபம் தெரிவிக்கிறீர்கள்.
      பொதுவெளியில், அவர்களின் கேள்விகளுக்கு கட்டுரையாளர் பொறுப்பேற்று பதில் அளிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு, ஆட்சேபம் தெரிவிப்பதில் அர்த்தமில்லை. பிடிக்க வில்லை என்றால், நாம் பொது வெளியில் கட்டுரை எழுதுவதை மறு சிந்தனை செய்து கொள்ள வேண்டியதுதான்.

      • Mani's avatar Mani சொல்கிறார்:

        If you are really – true_indian

        //மூன்று டூப்ளிகேட் பெயர்களில் ஏன் எழுதினீர் ? // – answer this first.

        • Mani's avatar Mani சொல்கிறார்:

          If you are really – true_indian

          //மூன்று டூப்ளிகேட் பெயர்களில் ஏன் எழுதினீர் ? // – answer this first.

  9. Praba's avatar Praba சொல்கிறார்:

    Modi win with help of electronic voting machine & divert all thro controversy

    • true_indian's avatar true_indian சொல்கிறார்:

      அய்யா,
      சமீபத்தில் voting machine நாம் யாருக்கு வோட்டை போடுகிறோமோ, அந்த சின்னம் ஒரு அச்சடிக்க பட்ட காகிதத்தில் நமக்கு காண்பிக்க படும் வகையில் வசதியை ஏற்படுத்தி யுள்ளனர். அச்சிடப்பட்ட அந்த துண்டு காகிதம் அந்த voting macine லேயே தங்கி விடும்.ஆதலால் நாம் அளிக்கும் வோட்டு , voting machine இல் பதிவாகும் எண்ணிக்கை, மற்றும் இந்த அச்சிடப்பட்ட காகிதங்கள் எண்ணிக்கை மூலம் இருமுறை சரி பார்க்க படும். ஆதலால் தாங்கள் கூறுவதை போல், கள்ள வோட்டு போடுவது இனி சாத்தியம் இல்லை. எனவே ஒரு வேளை பிஜேபி ஜெயிக்கும் பட்சத்தில் , நாம் வேறு காரணத்தை தான் கூறி புலம்ப வேண்டியிருக்கும்

  10. Rishabraj Rajendra's avatar Rishabraj Rajendra சொல்கிறார்:

    திமுவை உருவாக்கிய அண்ணாத்துரை இன்று திமுகவில் ஸ்டாம்ப் சைஸ்
    ஆனால் நேத்து வந்த உதயநிதி மெகா சைஸ்

    ஈவேரா தடயமே திமுக விழாக்களில் இல்லை

  11. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! இந்த கட்டுரைக்கான லிங்க்கை காெடுத்திர்கள் என்றால் இங்கே அதி அற்புதமான கருத்துகளை கூறியவர்கள் நேரடியாக அந்த நபருக்கே தெரிவித்து அவருடன் விவாதம் செய்ய ஒரு வாய்ப்பை உண்டாக்கி காெடுங்ளேன்

  12. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் செல்வராஜன் விருப்பப்படியே –

    மேற்கண்ட கட்டுரையை –

    ” இரண்டு லேயர் இருக்கும் இந்த தேர்தல் ஒரு சிக்கலான தேர்தல்! ”
    என்கிற தலைப்பில் – முதலில் எழுதியவர்
    மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம் அவர்கள் –

    தளம் லிங்க் – http://www.heronewsonline.com/rss-vs-modi/

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.