…
…

…
இன்று மாலை/இரவு விகடன்.காம் செய்தி தளத்தில் வெளியான
செய்திக் கட்டுரை ஒன்று கீழே….
உளவுத்துறையில் அதிகபட்ச அதிகாரம் உள்ள ஒரு அதிகாரிக்கு
கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லாத ஒரு விஷயத்தை ( “கப்சா”வை )
– ஒரு நிருபரைக் கொண்டு “தயாரிக்க” வைத்து அதை சுடச்சுட
“உண்மை போலவே” வெளியிட்டிருக்கும் விகடன் செய்தித்தளத்தின் நம்பகத்தன்மை எத்தகையது…?
இது வெளியிடும் மற்ற செய்திகளில் எந்த அளவிற்கு
உண்மை இருக்கும்…?
உண்மையிலேயே உளவுத்துறை இத்தகைய ஒரு ரிப்போர்ட்டை
தயார் செய்திருந்தால், அது இந்த நிருபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு
இருக்கிறதா…?
உண்மை போலவே “கதை” விடும் இத்தகைய
அரசியல் கட்டுரைகளை ஆர்வமுடன் படித்து நம்புபவர்களும்
இருப்பதால் தானே, அந்த தளமும் தன்னுடைய நம்பகத்தன்மை
கேள்விக்கிடமாகி விடுமே என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் –
“தயாரித்து” வெளியிடுகிறது…?
தங்கள் தளத்திற்கு வருபவர்களை எல்லாம் முட்டாள்கள் அல்லது
கூமுட்டைகள் என்று இவர்கள் நினைத்துக் கொள்கிறார்களா…?
இது வெறும் fake news மட்டும் தானா அல்லது
paid (fake) news – ஆ…?
———————————————————————————————————————
`நம்புவதா… வேண்டாமா?’ – ஐ.பி ரிப்போர்ட்டால்
அதிர்ச்சியில் பி.ஜே.பி!
அ.சையது அபுதாஹிர்
வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (28/03/2019)
——————
உளவுத்துறை… ஐ.பி எனப்படும் அமைப்பானது
அரசின் ஓர் அச்சாணியாக இருப்பது.
உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையிலேயே
அரசின் முடிவுகள் பெரும்பாலும் எடுக்கப்படும்.
உளவுத்துறையை அரசின் முதுகெலும்பு என்றுகூடச் சொல்லலாம்.
அதுவும் தேர்தல் நேரத்தில் உளவுத்துறையின்
ஒவ்வொரு அறிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும்.
இந்த நிலையில் தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்குச் சென்ற
உளவுத்துறையின் ஓர் அறிக்கை, மத்திய பி.ஜே.பி அரசை
அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஐ பி ரிப்போர்ட்
தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன. தி.மு.க தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிரணியில் களத்தில் நிற்கின்றன. இந்த இரு கூட்டணியைத் தவிர, டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் மக்கள் நீதி மய்யம் தனித்தும் தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றன. வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து, தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க அணியைவிட
தி.மு.க அணியே முந்திக்கொண்டு உள்ளது
பரவலாகத் தெரிய வருகிறது.
புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் எப்படியும்
20 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிட வேண்டும்; 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10 தொகுதிகளுக்கு மேல்
வென்றுவிட வேண்டும் என்று அ.தி.மு.க தரப்பு துடித்துக்
கொண்டிருக்கிறது.
மேலும், மத்தியில் பி.ஜே.பி மீண்டும் ஆட்சி அமைக்குமா, அமைக்காதா என்கிற சந்தேகம் அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கே உள்ள நிலையில், அ.தி.மு.க-வுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது. கடந்த தேர்தலில் வீசிய மோடி அலை இந்த முறை இல்லை. பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் கணிசமான வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பி.ஜே.பி கூட்டணி உள்ளது.
அந்த வகையில் தமிழகத்திலிருந்து 20 தொகுதிகளுக்கும் மேல் தங்கள் அணிக்குக் கிடைக்க வேண்டும் என்று பி.ஜே.பி எதிர்பார்க்கிறது.
அதற்காகவே தமிழகத்தில் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடவும்
பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
கரன்சி விஷயத்தில் அ.தி.மு.க தரப்பு ஒருபுறமும் பி.ஜே.பி தரப்பு மறுபுறமும் தேர்தல் களத்தில் இறக்கத் தயாராக இருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள
மத்திய உளவுத்துறையான ஐ.பி-யிடம் தேர்தல் நிலவரம் குறித்து,
கடந்த வாரம் ரிப்போர்ட் கேட்டுள்ளது மத்திய அரசு.
தமிழகத்தில் ஐ.பி அமைப்பானது,
வர்மா என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் செயல்படுகிறது.
மேலும், தமிழகத்தில் ஐ.பி அமைப்பில்
முக்கியப் பொறுப்பில் பலரும் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகளாக
உள்ளார்கள். மத்திய அரசு ரிப்போர்ட் கேட்டதும்,
தமிழக ஐ.பி அதிகாரிகள் தீவிரமாக விசாரணையில் இறங்கினார்கள்.
பி.ஜே.பி. கூட்டணி – ஐ பி ரிப்போர்ட்
ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு யாருக்கு போன்ற பல்வேறு தகவல்களைத் திரட்டி சென்னையில் உள்ள ஐ.பி அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்கள். அந்த ரிப்போர்ட்டை அலசிப் பார்த்தபோது, தி.மு.க கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.
மீண்டும் ஐ.பி. அதிகாரிகள் மற்றொரு ரிப்போர்ட்டை கீழ்நிலை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்கள். அந்த ரிப்போர்ட் அ.தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளார்கள். இதற்குக் களத்தில் இருந்த அதிகாரிகள், ‘நிலைமை அவ்வாறு இல்லை. அ.தி.மு.க அணி 10 தொகுதிகளைப் பிடிப்பதே இப்போது உள்ள நிலையில் சந்தேகம்.
இறுதிக்கட்டத்தில் இந்த நிலை கொஞ்சம் மாறி
அ.தி.மு.க அணிக்குச் சாதமாக இருக்கலாம்’
என்று சொல்லியுள்ளார்கள்.
ஆனால், மேல்மட்டத்தில் இந்த ரிப்போர்ட்டைக் கொடுத்தால்,
நமக்குச் சிக்கலாகும். நாம் நல்லமுறையில் அனுப்பிவிடுவோம்.
தேர்தல் வந்த பிறகு, பார்த்துக்கொள்ளலாம் என்று
அதிகாரிகள் பேசி முடித்துள்ளார்களாம்.
அந்த அடிப்படையில், `தமிழகத்தில் அ.தி.மு.க.
தலைமையிலான அணி 24 முதல் 28 இடங்கள்வரை
வெற்றிபெறும்’ என்று ஒரு ரிப்போர்ட்டை
ரெடிசெய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். அந்த ரிப்போர்ட்
பி.ஜே.பி தரப்புக்குத் தெரிந்து உற்சாகமாகிவிட்டார்களாம்.
ஆனால், தமிழக நிலவரம் குறித்து வந்த
ஐ.பி ரிப்போர்ட்டைப் பார்த்த தென்மாநிலத்தைச் சேர்ந்த
பி.ஜே.பி நிர்வாகிகள் “கள நிலவரம்
தெரியாமல் நீங்கள் இந்த ரிப்போர்ட்டைப் பார்க்க வேண்டாம்.
பி.ஜே.பி-யை உள்ளடக்கிய அ.தி.மு.க அணி 24 சீட்களை எல்லாம் வெல்வது உறுதியில்லை. நீங்கள் ஐ.பி-யிடம் சொல்லி மீண்டும் சரியான ரிப்போர்ட் கேளுங்கள்” என்று சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது பி.ஜே.பி தலைமை.
இந்த ரிப்போர்ட் விவகாரம் குறித்து ஐ.பி அதிகாரிகளிடம் கேட்டால், “நாங்கள் உண்மையான கள நிலவரத்தைச் சொன்னால் எங்கள் மீது கோபத்தைக் காட்டுவார்கள். எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய தேர்தல் பணியில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. அரசுக்கு ஆதரவாக இப்போது ரிப்போர்ட் கொடுத்துவிட்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பணத்தால் நிலைமை மாறிவிட்டது என்று சொல்லிவிட்டுப்போகிறோம்” என்கிறார்கள் கூலாக.
உளவுத்துறையை வைத்து உளவு பார்த்தால் இந்த நிலைமைதான்போல…
( link – https://www.vikatan.com/news/politics/153609-intelligence-bureau-report-shocks-bjp-high-command.html )
.
————————————————————————————————————–



விகடன் செய்தி ஆசிரியரின் முகத்தில் காரித்துப்ப வேண்டும் போல் இருக்கிறது.
இந்த C Voters என்று பாஜக பம்மாத்து செய்து கொண்டிருக்கே… அதற்காக இப்படி ஓன்றாக இருக்குமோ…?
அரைத்த வரையில் மாவு ; திரித்த வரையில் கயிறு !
விகடன் சொல்வது உண்மையாக இருக்குமா ?
ஐ பி என்ற உளவுத்துறை இந்த லட்சணத்தில்தான் உள்ளது .
இன்று நாட்டு நடப்பு அப்படி இருக்கின்றது .
ஒரு வேளை உண்மையாக கூட இருக்கலாம் .
பொய்யாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது .
பொய் எது உண்மை எது என்ற சொல்ல முடியவில்லை .
Fake News பரவுதற்க்கு காரணம் இதுதான் .
இதெல்லாம் ஒருவகை சாமர்த்தியம்.
பணம் பண்ணும் சாமர்த்தியம்.
புண்ணிய காரியத்திற்கா பத்திரிகை நடத்துகிறார்கள் ?
பாதி பெய்டு நியூஸ் ; மீதி ப்ளாக் மெயில்.
நாலு நடப்புச் செய்திகளுக்கிடையில்
இந்த மாதிரி “இட்டுக்கட்டியகதை” ஒன்றையும் செய்தியாக கொடுத்தால்,
படிப்பவர்கள் போகிற அவசரத்தில்
இதையும் செய்தியாக மூளையில் வாங்கிக் கொண்டு செல்வார்கள்.
இவர்களுக்கு சுவாரஸ்யமான செய்தி கொடுத்த மாதிரியும் ஆயிற்று.
பணம் பண்ணிய மாதிரியும் ஆயிற்று.
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.
Ananda vikatan group has lost its credibility and most of the subscribers have withdrawn as it is
pro dmk and is very biased and always for anti indian supporters..Its journalists are paid
money, liquor and other “incentives” for publishing false reports. It has stooped to the level
of Nakkeeran in the guise of investigative journalism. Roughly about 50 channels are working
for DMK and these channels working day and night to create false propaganda to remove Edapadi and Modi. Dont believe these channels News 7, sun, kalaignar, jaya, Sathiyam (a christian owned)
Puthiya thalaimurai, and thanthi . Ananda vikatan group is tightlipped about rs 26000 crores
of investment of Jagathrakshagan in a Srilankan oil refinery Why cant they invesigate this?.
தேர்தல் நேர ஜுர செய்திகள்…? பத்திரிக்கைகள் ஏன் அனைத்து ஊடகங்கள் …மாபெரும் அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் செய்கின்ற மக்களை ஏமாற்றும் பம்மாத்து வேகைள் …எல்லா தேர்தல்களிலும் நடக்கின்ற கேலிக்கூத்து …!
தேர்தல் நேர ஜுர செய்திகள்…? பத்திரிக்கைகள் ஏன் அனைத்து ஊடகங்கள் …மாபெரும் அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் செய்கின்ற மக்களை ஏமாற்றும் பம்மாத்து வேகைள் …எல்லா தேர்தல்களிலும் நடக்கின்ற கேலிக்கூத்து…!
விகடன், திமுக சார்பு (அல்லது அந்தக் கட்சியைச் சேர்ந்த) பத்திரிகை என்பதில் தவறில்லை. அது அவர்களது விருப்பம். ஆனால், பலப் பல வருடங்களாக, ‘விளம்பரச் செய்திகளை’, செய்திகளின் இடையே ஒரு சில பக்கங்களில் வெளியிடுவதில்தான் அவர்களது கயமைத் தனம் இருக்கிறது. படிக்கிறவர்களுக்கு எது விளம்பரம் எது உண்மைச் செய்தி என்று தெரியாதபடி இந்த ஃப்ராடை பலப் பல வருடங்களாக விகடன் குழுமம் அரங்கேற்றி வருகிறது (இதைத் தொடர்ந்து கல்கி குழுமமும் இந்த ஃப்ராடுத்தனத்தைச் செய்துகொண்டுள்ளது).
அவர்களது தளத்திலும்கூட பல செய்திகளை ‘Sponsored content’ என்பதை சட் எனக் கண்டுபிடிக்கமுடியாதபடி போட்டிருப்பார்கள். நேற்றுகூட ஒரு பெண்மணியைப் பற்றி ஆஹா ஓஹோ என்று பெரிய செய்திக் கட்டுரை போட்டிருந்தார்கள். படித்துவிட்டு, இந்தப் பெண்மணியைப் பற்றி நான் எங்குமே படித்ததில்லையே என்று பார்த்தால், அது ஸ்பான்ஸர்டு செய்தி. இது முற்றிலும் கயவாளித்தனம்.
விகடன் ஏன், 18000 கோடி இன்வெஸ்மெண்டைப் பற்றி எழுதலை, வைகோவின் பல்டிகளைப் பற்றி எழுதலை, தயாநிதியின் ஊழல் வழக்குகளைப்பற்றி எழுதலை, பொள்ளாச்சி புகழ் வீடியோக்களில் ஈடுபட்ட திமுக பிரமுகர்களைப்பற்றி எழுதுவதில்லை என்றெல்லாம் கேட்பதில் அர்த்தமே இல்லை. பங்குகள் திமுக வசம் இருக்கும்போது, அவர்கள் சொல்படி தலையாட்டுவதுதான் விகடனின் வேலை. எப்போது ‘காசு’க்காக சன் தொலைக்காட்சி ஸ்லாட்டுக்காக மாறன்களிடம் கையேந்தினார்களோ அப்போதே அவர்களது செய்திகள் எல்லாமே மாறன், திமுக சார்புள்ளதாக வர ஆரம்பித்துவிட்டது. இப்போ முழுக்க முழுக்க அது திமுக பத்திரிகை. நடுநிலை என்று காண்பிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களைப் புறக்கணிக்காமலும் அப்போ அப்போ திருமாவளவன் பேட்டி/கட்டுரை, வைரமுத்து பற்றிய செய்திகள் என்று போடுவார்கள்.
இன்னொன்று.. உளவுத்துறையை வைத்து தேர்தல்ல மக்களின் எண்ணவோட்டத்தை அறிவது. இது மிக மிகத் தவறான ஒரு செயல். கட்சித் தலைவர்களுக்குமே இது தெரியணும். ஆளும் கட்சி என்பதால் அடக்கி வாசித்து உண்மையைச் சொல்லமாட்டார்கள், பொய் கணிப்புகளைச் சொல்லுவார்கள். என்ன இருந்தாலும் ‘கருத்துக் கணிப்புகள்ல’ நடக்கலைனா கேள்வி கேட்க முடியாதல்லவா (கடைசி நேர பணப் பறிமாற்றம், அல்லது வேறு செய்திகள் என்று குழப்பிவிடலாம்). இன்னொன்று, தந்தி தொலைக்காட்சி போன்றவை தேர்தல் கணிப்பில் ஈடுபடும்போது, உதாரணமா, திமுகவுக்கு 45%, அதிமுகவுக்கு 30%, கமல் கட்சிக்கு 5%, நாம் தமிழருக்கு 4% , பிறருக்கு 16% என்று வந்தால், ஆளும் கட்சியாக அதிமுக இருப்பதால், அவங்களுக்கு 37% என்று காண்பிப்பார்கள். திமுகவுக்கு 42% என்று சொல்வார்கள். அப்போ கட்சிகளுக்கும் திருப்தி, அவங்களுக்கும் ஓரளவு உண்மை சொல்லிட்டோம் என்ற திருப்தி. இதுவே கட்சி சார்புன்னா, திமுகவுக்கு 52%, அதிமுகவுக்கு 25% என்று அடித்துவிடுவார்கள் நக்கீரனைப் போல. பிறகு ரிசல்ட் வந்ததும் வெளியில் தலைகாட்ட முடியாமல் கேவலப்படுவார்கள்.
விளையாட்டுக்குச் சொல்லவில்லை. செய்திகளைப் படித்து இந்த மாதிரி உண்மைபோல் புளுகும் கட்டுரைகளை என்னாலும் எழுதமுடியும். ஆனால் அப்படிப் புளுகி காசு சம்பாதிப்பதற்குப் பதிலாக உலகத்தில் வேறு நல்ல தொழில்கள் இருக்கின்றன என்பதை இத்தகைய பத்திரிகைகளுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.
வைரமுத்து, திமுக இல்லையோ?
உண்டு ஆனால் இல்லை 🙂 🙂
இது கற்பணை பதிவு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா…. நாம் தமிழர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையே…. அதற்கு பிறகு உதயமான மநீம பற்றி கூட ஒரு வரி வருகிறது…. இதற்குப் பெயர்தான் இருட்டடிப்பா?
sonata1007,
நான் எதிர்பார்க்கவே இல்லை… இப்படிக்கூட ஒருவருக்கு குறை இருக்க முடியுமென்று…!!! 🙂 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
“கதை விடும்” பத்திரிகைகளும் அதை அப்படியே படித்து ஆதாரம் தேடாமல் ஏப்பம் விடும் வாசகர்களும் (வாக்காளர்களும்) இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவிலும் தாராளமாக உள்ளனர். 😦