…
…

…
திமுக தலைவர் திரு.ஸ்டாலின், அண்மைக்காலங்களில்
அடிக்கடி வெளிப்படுத்தும் வார்த்தை இது –
” உங்களுக்கு வெட்கமாக இல்லை….?”
தனக்கு எதிரணியில் இருக்கும் எந்த அரசியல் தலைவரையும்
அவர் விட்டு வைப்பதில்லை… இந்த வார்த்தையை அவர்களை
நோக்கி தினமும், வீசிக் கொண்டே இருக்கிறார்….
வலைத்தள நண்பர்கள் சிலர் எனக்கு அடிக்கடி
மீம்ஸ்’களை அனுப்பி, விமரிசனத்தில் போடுங்களேன்
என்று சொல்வதும் உண்டு. அப்படி வருவதில்
சில அருமையாக இருக்கும்.
போடலாமென்று நப்பாசை கூட தோன்றும்….
இருந்தாலும், ஏதோ ஒரு இடத்தில் கொஞ்சம் வரம்பு மீறுவது
போல் தோன்றும்… வேண்டாமென்று விட்டு விடுவேன்.
ஆனால் நேற்று வந்த மீம்ஸ் ஒன்று எனக்கு திரு.ஸ்டாலினின்
“வெட்கமில்லையா”வை நினைவுபடுத்தியது.
அந்த மீம்ஸ், திரு.வைகோ-வை கிண்டலடித்து தயாரிக்கப்பட்டது
என்றாலும் கூட, அது ஸ்டாலினுக்குத்தான் மிகவும் பொருந்தும்
என்று எனக்குத் தோன்றுகிறது…
எனவே, அந்த மீம்ஸ் கீழே – திரு.ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக…
இப்படியெல்லாம் தன்னைப்பற்றி சில மாதங்கள் முன்பு வரை
பேசியவரின் தயவில் தான் –
தேர்தலில் ஜெயிக்க வேண்டிய அசிங்கமான சூழ்நிலையில்
“தான்” இருக்கிறோம் என்பதை திரு.ஸ்டாலின்
உணர வேண்டும்….
இந்த வைகோவின் தயவு வேண்டுமென்று தானே
அவருக்கு 2 சீட் கொடுத்து, வெட்கம் இல்லாமல் தன் பக்கத்தில்
வைத்துக் கொண்டிருக்கிறார்…???
…
…
.
————————————————————————————————————



தேர்தல் அரசியலை முழுமையாக ஏற்றுக் கொண்ட மனம், ” வெட்கம் — மானம் ” எல்லாம் பார்ப்பதில்லை என்பதால் ” நிலைகெட்டு போன { இந்த } நயவஞ்சகர்களின் நாக்கு ” களுக்கு இதெல்லாம் சகஜம் தானே … ? தேர்தல் நேர சந்தர்ப்பவாத கூட்டணி அரசியலை ஏற்றுக்கொண்டு அதற்குள் யோக்கிய தன்மையை இவர்கள் தேடுவார்களா … தேடவே மாட்டார்கள் …! இந்த வெட்கமே இல்லாத வெட்கம் கெட்டவர்கள் …..!
காமை சார்… உங்க இடுகை மூலமா நான் புரிந்துகொள்வது,
1. வைகோ சகதிதான். அவருக்கு நேர்மை, நியாயம் என்று எதுவும் கிடையாது. அவர் ஒரு வீணான, நாக்கை விற்கும் அரசியல்வியாதி. ஸ்டாலினைவிட இன்னொருவர் அதிகமாக காசு கொடுப்பார் என்றால், அவருடைய கட்சியில் சேர்ந்து மற்றவர்களை வசைபாடத் தயங்கமாட்டார்.
2. ஆனால் ஸ்டாலின் இத்தகைய நயவஞ்சகர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளலாமா என்று கேட்கிறீர்கள்.
நீங்கள் ஸ்டாலினை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மனதில் வஞ்சம் வைத்திருப்பதில் ஸ்டாலின், அவருடைய அப்பா கருணாநிதி மாதிரி. இப்போ பாருங்க, வைகோ என்பவருக்கு கட்சி என்று ஒன்று கிடையாது. தேர்தலில் வெற்றிபெற்றால், கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னம்/திமுக, வைகோ, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர். மதிமுகவுக்கு வைகோவை நம்பி வந்தவர்களுக்கும், அந்தக் கட்சிக்காக உயிரை விட்டவர்களுக்கும் கவுண்டமணி பாஷையில் ‘ஊஹூ’ என்ற ஊளைதான்.
வைகோவின் தயவில் யாரும் வெற்றி பெறப் போவதில்லை. ஆனால் இதற்கு முன்னால் திமுக பிரமுகர்களின் மீது பலப் பல குற்றச் சாட்டுகளைக் கூறிய வைகோவின் வாயாலயே, ‘திமுக ஆஹா ஓஹோ கட்சி, ஸ்டாலின் மாபெரும் தலைவர், கனிமொழி பெரிய தலைவி, திமுக ஒன்றுதான் தமிழ்நாட்டிற்கான கட்சி’ என்று பிரச்சாரம் செய்ய வைத்துவிட்டது, ஸ்டாலினின் திறமைதானே?
ஸ்டாலின் மதிமுகவை அழித்துவிட்டார். பிறகு குஷ்புவுக்கும் சீட் இல்லாமல் செய்துவிட்டார். அதுக்குப் பிறகு இனி வைகோவுக்கு ‘ஜிங் சக் ஜிங் சக்’ தவிர வேறு வேலை கிடையாதே….
// பிறகு குஷ்புவுக்கும் சீட் இல்லாமல் செய்துவிட்டார். //
– 🙂 🙂 🙂
-ஆனால், திருமதி குஷ்பு, இவரது மேடையில் அமர்வதை தடுக்க முடியவில்லையே…!!!
வெட்கம், மானம், சூடு , சொரணை , பற்றி பா ம க, அ தி மு க கூட்டணி
உருவாகும் போது ராமதாஸை ஸ்டாலின் சாடினார், வைகோவின்
இந்த பேச்சுக்களை கேட்கும் போது ஸ்டாலினுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை
இல்லையா என்று பா மக வினர் கேட்கிறார்கள். தனக்கு என்று ஒரு நியாயம்
அதே மற்றவர்களுக்கு அது இல்லை, ராதாரவியை சின்மயி ஆபாசமாக பேசுகிறார்
என்று குற்றம் சாட்டும் போது வராதவர் இப்போது நயனதாரா என்பதால் வரிந்து கொட்டி கொண்டு வருகிறார்.
சோ அவர்களின் பாஷையில் சொல்வதானால் “யாருக்கும் வெட்கமில்லை” – நம்மையும் சேர்த்துத்தான் – ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு.