பாஜக – அது ஒரு கனாக் காலம் ….


மாலையில் வெளிவந்த செய்தி –

– குஜராத் இரட்டையர்களின் முடிவின்படி –
டாக்டர் முரளி மனோகர் ஜோஷிக்கும் –
-கதவு அடைக்கப்பட்டது.

– நான் கூட பாஜகவை மிகவும் விரும்பி நேசித்த
ஒரு காலமும் இருந்தது….

உத்தமர்கள் நிறைந்த கட்சியாக பாஜக இருந்த –
அது ஒரு கனாக் காலம்…

.
———————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to பாஜக – அது ஒரு கனாக் காலம் ….

  1. M.Thevesh's avatar M.Thevesh சொல்கிறார்:

    நீங்களும் மோடி எநிர்ப்பு வாதிதான் நடுநிலை வாதி இல்லை.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      திவேஷ் – உலகத்தில், இந்தியாவில் ‘நடுநிலை வாதி’ என்று ஒருவருமே இருக்க முடியாது. கைகாட்டிகள் எப்போதும் இடத்துக்கு அழைத்துச் செல்வதில்லை. ஒருவன் நடுநிலை என்று சொன்னால், அவனால் இந்த உலகில் ஒன்றையுமே செய்யமுடியாது. நம் குடும்பத்திலேயே நம்மால் நடுநிலையாக இருக்கமுடியாது, நியாயமாக இருக்கமுடியாது. நிற்க…

      கா.மை. சார், அவருடைய மனநிலைக்கு ஏற்ப, அன்றைய செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார். ஏன் இந்தச் செய்தியை பகிர்ந்துகொள்ளவில்லை, ஏன் இந்த மாதிரி இந்த நிகழ்ச்சியை நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்று கேட்பதில் அர்த்தம் இல்லை. நம் இண்டெர்ப்ரெடேஷனை இங்கு வெளியிடலாம். இதற்கு இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

      1. மோடி அவர்கள், இந்த வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார். அதனால் முரளிமனோகர் ஜோஷிக்கும் அத்வானிக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை. இப்படித்தான் நான் பார்க்கிறேன். ஒருவேளை ராஜ்ஜியசபாவில் அவர்கள் குரல் ஒலிக்கலாம், இல்லை அங்கும் வாய்ப்பு மறுக்கப்படலாம். என்னைப் பொருத்தவரையில் இந்த முடிவில் தவறில்லை. கா.மை சார், அவர்கள் இருவரும் ஒதுக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறார்.

      2. ராகுல் காந்தி, ஏற்கனவே ஒரு பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படமாட்டாது என்று சொன்னார். (அவரும், சோனியாவும் வெவ்வேறு குடும்பம். அவர்கள் இருவரும் கொள்கைகளுக்கு வாரிசுகள். அதனால் வாய்ப்பு. அது இந்திய திமுக). அப்படி 40க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ப.சி., தன் ஜாமீனில் இருக்கும் மகனுக்காக மிரட்டி இந்த ரூலை மீறி சீட் பெற்றுக்கொண்டார். இந்தச் செய்தியை, காங்கிரசுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் மட்டும்தான் வெளியிடுவார்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      M.Thevesh,

      கெட்டவற்றிற்கும், நல்லவற்றிற்கும் இடையே மோதல் ஏற்பட்டால் –
      நாம் எதையும் செய்யாமல், சும்மா – நடுவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது தான் நடுநிலைமை என்று
      நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்.

      அத்தகைய சூழ்நிலையில் கெட்டவற்றை எதிர்த்து செயல்பட வேண்டும் என்று என் மனசாட்சி சொல்கிறது.
      சுயநலமற்று, மனசாட்சி சொல்கிற வழியில் செல்கிறேன் நான்.

      அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடை போட்டுக்கொள்ளுங்கள்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    SO WHAT ?

  3. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    உண்மை தான். வாஜ்பாய் காலத்தில் இருந்த பாஜகவுக்கும்
    இப்போது இருக்கும் பாஜகவுக்கும் எத்தனை வித்தியாசம்.
    இப்போது கட்சி ராட்சதர்களின் பிடியில் சிக்கி விட்டது.

  4. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    தமிழ் நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி வரக்கூடாது. இந்திய அளவில் காங்கிரஸ் அளவுக்கு ஊழல் பண்ணியவர்கள் யாரும் இல்லை. விளம்பர பித்து, பண மதிப்பிழப்பு சொதப்பல் தவிர பெரிய அளவு பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ரபேல் என்னை பொறுத்தவரை ஒரு poorly written contract! வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

    அதனால், என் தேர்வு பிஜேபி தான்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      bandhu,

      நீங்கள் இந்தியாவில், குறைந்த பட்சம் தமிழ் நாட்டில் – வசிப்பவராக எனக்குத் தெரியவில்லை.

      //விளம்பர பித்து, பண மதிப்பிழப்பு சொதப்பல் தவிர பெரிய அளவு பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. //

      ஆக, மோடிஜி ஆட்சியில் மக்கள் பரம சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள் என்கிறீர்கள்….?

      அப்படியானால், ஏகப்பட்ட கட்சிகளை துணைக்கு அழைத்துக்கொண்டு, 40 சீட்டுகளில் 5 கொடுத்தால் கூடப்போதும்
      என்று ஏற்றுக் கொண்டு தேர்தலில் நிற்பது ஏன்…?

      40-திலும் ‘தில்’லாக நிற்க வேண்டியது தானே….?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • bandhu's avatar bandhu சொல்கிறார்:

        கண்டிப்பாக மகிழ்ச்சியாக இல்லை. என்ன பண்ணுவது. நமக்கிருப்பதெல்லாம் பிஜேபி யா இல்லை காங்கிரெஸ்ஸா என்ற இரு சாய்ஸ் மட்டும். இவற்றில் பிஜேபி பரவாயில்லை என்று பார்க்கிறேன்.

        இதனால், பிஜேபி வலிமையாக இருக்கிறது. தனியாகவே நிற்கலாம் என்று சொல்லவில்லை. தமிழகத்தில் தனியாக நின்றால் நோட்டாவை விட அதிகம் வாங்கலாம். அவ்வளவுதான்.

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        சாரி….காமை சார்… இப்படிக் கேட்பதற்கு…. மோடி ஆட்சி மட்டுமல்ல எந்த ஆட்சியிலுமே மக்கள் பரம சந்தோஷத்துடன் இருக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்தவரையில், ஜெ. தவிர, கடந்த 60 வருடங்களில், தனியாக தில்லாக நின்று வென்ற கட்சி எதுவுமே இல்லை.

        உங்கள் வாதப்படியே, மோடி ஆட்சியில் மக்கள் துயரமும் துக்கமும் கஷ்டமுமாக இருக்கிறார்கள் என்று எல்லோரும் (பாஜக தவிர) நம்பினால், காங்கிரஸ் தனியாகவே நின்றிருக்கலாமே, திமுக தனியாக நிற்கலாமே, மாயாவதி/அகிலேஷ் தனித்தனியாக நிற்கலாமே.. ஏன் அப்படி நிற்கலை?

        தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக போடும் ‘சீட்களை’ வாய்பொத்தி வாங்கிக்கொண்டு பேசாமல் போகும் நிலையில்தான் எல்லா உதிரிக் கட்சிகளும் இருக்கின்றன, காங்கிரஸ், பாஜக உள்பட. கூட்டணி சேருவதால்தான் வாக்குவங்கியைப் பொறுத்து (திமுக விஷயத்தில் காங்கிரஸின் மிரட்டலுக்குப் பயந்து அல்லது பணம் பண்ண டீல் போட்டுக்கொண்டு) ஒவ்வொரு கட்சிக்கும் சீட்டுகள் அதிமுக, திமுகவால் ஒதுக்கப்படுகின்றன.

        என்னைப் பொறுத்தவரையில் எல்லாம் சுகமாக இந்த ஆட்சியில் இல்லை. ஆனால் பரம நிச்சயமாக 2004-2014 காங்கிரஸ், திமுக ஆட்சிபோல தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல ஆட்சியில் இருந்தவர்களெல்லாம் பல்லாயிரம் கோடிகளுக்குச் சொந்தக் காரராக ஆகவில்லை. ஜெ. இருந்தால் தனித்துக் களம் கண்டிருப்பார், அமோகமாக மீண்டும் வெற்றி பெற்றிருப்பார்.

        (அதுனால பாஜக கூட்டணி கொஞ்சமாவது ஜெயிக்கும் என்று நான் நம்பவில்லை. கிறித்துவ+இஸ்லாமிய மொத்த வாக்குகளினாலும், தினகரன் கட்சியினால் அதிமுக வாக்குகள் பிரிவதாலும், திமுக+காங்கிரஸ் கூட்டணி 40ஐ நெருங்கினாலும் ஆச்சர்யமில்லை. அதைப்பொறுத்து வரும்காலங்களில் தமிழகத்தில் கட்சிகளுக்கான ஆதரவுத்தளம் நிச்சயம் மாறும்.)

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          புதியவன்,

          ////விளம்பர பித்து, பண மதிப்பிழப்பு சொதப்பல் தவிர பெரிய அளவு பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. //

          -என்று நண்பர் bandhu சொன்னதற்கான எனது re-action…தான்….

          – மோடிஜி ஆட்சியில் மக்கள் பரம சந்தோஷத்துடன்
          வாழ்கிறார்கள் என்கிறீர்களா….?

          என்று நான் கேட்டது –

          ———————————————————————-

          சர்வாதிகாரிகள், அடிப்படைவாதிகள் ஆகியோரின் கைகளில் சிக்கி, ஜனநாயகம் சிதைந்து விடக்கூடாது என்றால் –
          ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் சாய்சை – மக்கள் அவசியம் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தல் வருகிறது.

          எந்த கட்சியையும் நல்ல கட்சி என்று
          நான் certify செய்யத் தயாரில்லை.

          ஆனால், தொடர்ந்து தவறுகளை இழைத்து வரும்
          ஒரு கட்சியை, ஆட்சியை –

          கண்களை மூடிக்கொண்டு – மத அபிமானம் ஒன்றை மட்டுமே தகுதியாக வைத்துக்கொண்டு மீண்டும் தேர்ந்தெடுப்பது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

          என்னைப் பொருத்த வரை அரசியல் வேறு, மதம் வேறு தான்.
          அரசியலில் மதமோ, மதத்தில் அரசியலோ கலக்கப்படுவதை
          நான் ஏற்கவில்லை…

          ஏற்பது என்று மற்றவர்கள் தீர்மானித்தால்,
          அதில் நான் செய்வதற்கொன்றும் இல்லை.

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

          • bandhu's avatar bandhu சொல்கிறார்:

            நான் சொன்ன விதத்தில் பிரச்சனை எதுவுமில்லாத உத்தம அரசு இது என்ற தொனி இருந்தது என் தவறு. வருந்துகிறேன். மற்றபடி, இருக்கும் இரு காட்சிகளில் பிஜேபி மேல் என்றே கருதுகிறேன்.

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காலம் செல்லச் செல்ல முந்தைய தலைமுறை இன்னும் சிறந்தவர்கள் என்று தோன்றுவது இயற்கை. ஆனால் அவர்களைத் தோற்கடித்தது யார்? நாம்தாம்.

    இன்றைக்கு காமராசர் ஆட்சி வேணும் என்று கேட்கும் அருகதை 80% தமிழரகளுக்குக் கிடையாது. அரசியலிலிருந்து அவரை அப்புறப்படுத்தியவர்கள் அவர்கள்.

    இப்போதுள்ள கட்சித் தலைவர்கள் 80%விகித மக்களுக்குப் பொருத்தமானவர்களே. மக்கள் குவாலிட்டிக்கு ஏற்றபடிதான் தலைவர்கள் உருவாகிறார்கள்.

    • R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

      Sad but true!!!
      மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        கார்த்திக்,

        இப்படியும் ஒரு சொல் உண்டு –

        “யதா ராஜா – ததா ப்ரஜா”

        அதாவது, அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி…!

        நாடு குட்டிச்சுவராக, ஆள்பவர்களே காரணம்.

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      இதை நீங்கள் படித்ததில்லையா என்ன…?

      “யதா ராஜா – ததா ப்ரஜா”

      தலைமை எவ்வழி, குடிமக்களும் அவ்வழி.

      ஓட்டுக்கு துட்டு கொடு என்று முதலில் மக்கள் கேட்டார்களா அல்லது
      துட்டு கொடுக்கிறேன் – எனக்கு ஓட்டு போடு – என்று அரசியல்வாதிகள் சொன்னார்களா…?

      மக்களை கெடுத்தது சுயநலவாத அரசியல் தலைவர்கள் தான்.
      சுதந்திரத்திற்கு முன்னால் மக்கள் எப்படி இருந்தார்கள்…?
      இப்போது எப்படி, ஏன், மாறினார்கள்…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        காமை சார்… பழமொழி சரி, உங்கள் புரிதல் தவறு.

        ராஜாக்கள் காலத்தில் அவங்கதான் நாட்டின் தலைவர்கள். அதுனால அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.

        குடியரசில், ராஜா, மக்கள்தாம். அவர்கள் நினைத்தால் நீங்களோ இல்லை நானோகூட அரசனாகிவிட முடியும். அதனால் குடியரசில் யதா ப்ரஜா ததா ராஜா. மக்கள்தான் தவறு. தலைவர்களிடம் தவறில்லை. — மக்கள்தாம், தங்களுக்கு காமராசர் தேவையில்லை என்று சொன்னது. மக்கள்தாம் டாஸ்மாக், இலவச தொலைக்காட்சி போதும், நாங்கள் வாக்களிப்போம், வாக்குக்குக்கு காசு கொடுத்தால் ஊரிலிருந்து ரெயில் பிடித்து வந்து கொத்தாக காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்போம் என்று காண்பித்தது. குறை, மக்களிடம்தான்.

  6. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    DMK and Cong alliance should not come back to power for obviouis reasons. From 2004 to 2014
    they looted and indulged in all sorts of scams and stashed all the loot in real estate and
    investment in foreign countries . Just see their MP candidates jagath, a raja, kanimozhi, dayanidhi ,
    T R Baalu, and last but not the least Mr Karthi Chidambaram (jameen specialist) all tainted persons
    bit still the party has the got the guts to field them. The only way we voters can rebutt them is by defeating all of them and pave way for some good governance, ofcourse we are left with only
    BJP. for that choice.

  7. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Unfortunately, there is an extremely limited choice available for the voter, so he is forced to pick best from the worst. But again, even that choice doesn’t win ultimately for lack of mass support!!

  8. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! // உத்தமர்கள் நிறைந்த கட்சியாக பாஜக இருந்த –
    அது ஒரு கனாக் காலம்…// அப்போதும் மோடிஜியும் — ஷா ஜி யும் மற்றும் பலரும் அதில் இருந்தார்கள் தானே — ? தற்போது ” கனாக் காலமாக ” மாறியது எதனால் — ஏன் ..?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      அப்போது ‘அமாவாசை’ யாக இருந்தவர்கள்
      இன்று தலைமைக்கு வந்து விட்டார்களே…
      அது தான் காரணம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.