மோடிஜி – ராகுல்ஜியும் – கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடியும் …!!! ( இது தேர்தல் காலம் -7 )


ஒரு சுவாரஸ்யமான தேர்தல் கால சங்கதி ஒன்றை கீழே
தந்திருக்கிறேன். ஏதோ – தேர்தல் காலம் என்பதால் இந்தப் பையன்
தப்பித்தான்.. சாதாரண காலமாக இருந்தால், பாவம் அவன் கதி
என்னவாகி இருக்குமோ…!!!

( https://tamil.oneindia.com/news/chennai/a-student-asks-pm-modi-on-his-chowkidar-prefix-video-goes-viral-344393.html )

ராகுல் காந்தி கிளப்பிய
“சௌகிதார் – சோர் ஹை” – ட்ரெண்டை மாற்ற
மோடிஜி “நானும் சௌகிதார்” என்று அவரை பின்பற்றுபவர்களை
அழைத்துக் கொள்ளச்சொன்னதும் –

தொண்டரடிப்பொடியாழ்வார்கள் அனைவரும் –
அவரவர் அப்பா பெயருக்கு பதிலாக சௌகிதார் பெயரை
போட்டுக் கொண்டு சீரியசான ராகுலின் கோஷத்தை
காமெடியாக்கி விட்டனர்.

மோடிஜியின் உத்திரவின்பேரில், பாஜக வித்தியாசமான பிரச்சாரம்
ஒன்றை செய்து வருகிறது. பிரதமர் மோடி உட்பட
பாஜக தலைவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்கு முன்னால்,
காவலர் (chowkidar) என்ற வார்த்தையை
சேர்த்துக் கொள்கிறார்கள். ( ofcourse – டாக்டர் சு.சுவாமியைத்
தவிர்த்து….. 🙂 🙂 🙂 )

நாங்கள்தான் நாட்டின் காவலர் என்று
கூறுவதற்காக இவர்கள் இப்படி பெயருக்கு முன் காவலர்
என்பதை சேர்த்துக் கொள்கிறார்கள்.
( வாலறுந்த நரி கதை நினைவிற்கு வருகிறதோ…. 🙂 🙂 )

அண்மையில், தனியார் இந்தி தொலைக்காட்சியில் ஒரு விவாதம்
நடந்தது. அதில் சில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்பது போல இந்த விவாத நிகழ்ச்சி
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது……

இதில் மாணவர் ஒருவர் கேள்வி கேட்கும் நிகழ்வு பெரிய வைரலாகி
வலைத்தளத்தில் பாப்புலர் ஆகி விட்டது. அந்த மாணவர் பாஜக
தலைவர்களை நோக்கி இந்தியில் பேசியதன் தமிழ் சாராம்சம் இதுதான் –

————–

பிரதமர் மோடி எங்களை பக்கோடா விற்க சொல்கிறார்.
அவரை அவரே – காவலர் (chowkidar) என்று சொல்லிக்கொள்கிறார்.

எங்களுக்கு காவல்காரர் தான் வேண்டும் என்றால்
நாங்கள் நேப்பாளில் இருந்து நேரடியாக கூர்க்காவை
வரவழைத்துக் கொள்வோம். காவல் வேலைக்கு
மிகச்சிறந்த கூர்க்காக்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆனால் எங்களுக்கு தேவை ஊர்க்காவலர் இல்லை.
எங்களுக்கு தேவை ஒரு பிரதமர்தான்.

இதற்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள் எல்லோரும்
நாட்டை சீரழித்துவிட்டார்கள் என்று மோடி கூறுகிறார்.

– ஆனால் அவர் பிறப்பதற்கு முன்பே
பாபா அணு ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட்டு விட்டது….

– மோடி, சிறுபிள்ளையாக வீட்டில் கோலி விளையாடும்போதே –
பக்ரா நங்கல் அணை முன்னாள் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது…

– என்பதை எல்லாம் அவர் மறந்து விடக்கூடாது….!!!

———————–

ஒரு சீரியசான குற்றச்சாட்டை இதெல்லாம் சேர்ந்து –

கவுண்டமணி-செந்திலின்
வாழைப்பழ ஜோக் அளவிற்கு இட்டுச்சென்று
விட்டது இல்லையா….? ( ஒரே ஒரு சின்ன சந்தேகம்…
இந்த இரண்டு பேரில் –
யார் கவுண்டமணி, யார் செந்தில்…. 🙂 🙂 🙂 )

.
——————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to மோடிஜி – ராகுல்ஜியும் – கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடியும் …!!! ( இது தேர்தல் காலம் -7 )

  1. true_indian's avatar true_indian சொல்கிறார்:

    ஒருவேளை இந்த் சோவ்கித்தார் பட்டத்தை பார்த்து மக்கள் பொங்கி எழுந்து காங்கிரஸ் காரர்களுக்கு வோட்டு போட்டு விடுவார்கள் என்று
    பாவம் ராகுல் காந்தி. இன்னமும் நம்பி கொண்டு இருப்பதை பார்த்தல் பரிதாபம் தான் மேலிடுகிறது.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // Selvarajan சொல்கிறார்:
    1:48 பிப இல் மார்ச் 17, 2019
    அய்யா …! ” சவ்கிதார் ” என்பது நன்றாக இருக்கிறதா …? :

    6:27 முப இல் மார்ச் 22, 2019
    சவ்கிதார் அதாங்க பாதுகாவலன் தான் மட்டுமே என்கிற எண்ணத்தில் மாேடி பதிவிட பாேய் …பாஜக தலைவரில் இருந்து காமெடி பீசு சேகர் வரை அனைவரும் ஏதாே பத்ம விருது பாேல தங்களின் பெயர்களில் சேர்த்து பெருமைப்பட கடைசியில் இது ஒரு தமாஷாக நாறிப்பாேய்விட்டது …தான் மட்டுமே என்கிற அவரின் நினைப்பை வீணாக்கியவர்கள் ..அவரது கட்சியினரே …அடுத்து வேற ஏதாவது புதுசா வருமா …? // …. முன்பே இரண்டு பின்னூட்டங்கள் இட்டிருந்தேன் — அப்போது ” நோ ரெஸ்பான்ஸ் ” …

    என்ன தன் கட்சியினர் — அபிமானிகள் அனைவரும் காவலாளி என்று போட்டுக்கொண்டதை கண்ட ” சௌகிதார் ” பொங்கி எழுந்து – எதையோ பிடிக்க போய் ஏதுவாகவோ மாறி போச்சே என்கிற கடுப்பில் { உள்ளுக்குள் இருக்கலாம் } உண்மையான நாடு முழுவதும் உள்ள 25 லட்சம் காவலாளிகளுடன் ஆடியோ கான்பிரன்சிங் நடத்தி அவரது கட்சியினருக்கு புரிய வைக்க வேண்டிய விதத்தில் புரிய வைத்து விட்டார் மோடிஜி … ? அடுத்து ” யோக்கியன் ” என்று போட்டால் மற்றவர்கள் போட்டுக்கொள்வார்களா …? அது போன்ற ஒன்றை தேர்வு செய்து தேர்தலுக்குள் பட்டமாக்கி கொண்டால் நல்லது தானே …?

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // Selvarajan சொல்கிறார்:
    1:48 பிப இல் மார்ச் 17, 2019
    அய்யா …! ” சவ்கிதார் ” என்பது நன்றாக இருக்கிறதா …? சொல்கிறார்:

    6:27 முப இல் மார்ச் 22, 2019
    சவ்கிதார் அதாங்க பாதுகாவலன் தான் மட்டுமே என்கிற எண்ணத்தில் மாேடி பதிவிட பாேய் …பாஜக தலைவரில் இருந்து காமெடி பீசு சேகர் வரை அனைவரும் ஏதாே பத்ம விருது பாேல தங்களின் பெயர்களில் சேர்த்து பெருமைப்பட கடைசியில் இது ஒரு தமாஷாக நாறிப்பாேய்விட்டது …தான் மட்டுமே என்கிற அவரின் நினைப்பை வீணாக்கியவர்கள் ..அவரது கட்சியினரே …அடுத்து வேற ஏதாவது புதுசா வருமா …? // …. முன்பே இரண்டு பின்னூட்டங்கள் இட்டிருந்தேன் — அப்போது ” நோ ரெஸ்பான்ஸ் ” …

    என்ன தன் கட்சியினர் — அபிமானிகள் அனைவரும் காவலாளி என்று போட்டுக்கொண்டதை கண்ட ” சௌகிதார் ” பொங்கி எழுந்து – எதையோ பிடிக்க போய் ஏதுவாகவோ மாறி போச்சே என்கிற கடுப்பில் { உள்ளுக்குள் இருக்கலாம் } உண்மையான நாடு முழுவதும் உள்ள 25 லட்சம் காவலாளிகளுடன் ஆடியோ கான்பிரன்சிங் நடத்தி அவரது கட்சியினருக்கு புரிய வைக்க வேண்டிய விதத்தில் புரிய வைத்து விட்டார் மோடிஜி … ? அடுத்து ” யோக்கியன் ” என்று போட்டால் மற்றவர்கள் போட்டுக்கொள்வார்களா …? அது போன்ற ஒன்றை தேர்வு செய்து தேர்தலுக்குள் பட்டமாக்கி கொண்டால் நல்லது தானே …?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      அந்த பட்டத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை,
      ராகுல் காந்தி ஏற்றால் தான் சரியாக இருக்கும்…
      ராகுலுக்கு நல்ல ராசி….
      அவர் கொடுக்கும் பட்டங்கள் வெகு சீக்கிரம் புகழ் பெற்று விடுகின்றன…. 🙂 🙂

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. true_indian's avatar true_indian சொல்கிறார்:

    ஒருவேளை “யோக்கியன்” என்று மோடி முழங்கினாலும், அதையும் நாடு முழுவதும் கொண்டு சென்று, அவருக்கு விளம்பரம் தேடி கொடுப்பது பிஜேபி எதிர்ப்பாளர்களின் கடமை என்பதை நாம் மறக்க கூடாது.
    அவர் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் , ஏதோ ஒரு கூட்டத்தை கவர உபயோக படுத்திய வார்த்தைகளை நாம் உலகம் முழுவதும் எடுத்து சென்று பரப்புவோம்.
    பாவம் ராகுல் காந்திக்கு அது போல் விளம்பரம் கிடைப்பதில்லை.அவர் தனிப்பட்ட முறையில், அவர் காங்கிரஸ் கட்சியின் சிறப்புகளை கூறுவதை விட்டு விட்டு , மோடி என்ன கூறுகின்றார் என்பதையே முழுநேரமாக கவனித்து , கவனித்து சோர்ந்து போய்விடுவார் போலும்.
    நல்ல தேர்தல் பிரசாரம்.

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … நீங்க எப்ப சு.சுவாமியை பற்றி எழுத ஆரம்பிக்கிறீர்களோ — அப்ப அவரும் படு சுறு- சுறுப்பாக இயங்க ஆரம்பித்து விடுகிறார் — சில நாட்களுக்கு முன் மோடிஜிக்கும் — அருண்ஜெட்லிஜி க்கும் பொருளாதாரம் பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் — இன்று சௌகிதார் பற்றி : — // நான் பாதுகாவலனாக முடியாது.. ஏனென்றால் நான் பிராமணன்.. சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு //
    Read more at: https://tamil.oneindia.com/news/delhi/i-am-brahmin-i-couldnt-be-chowkidar-says-subramanian-swamy-344890.html — இது ஒரு ” தனி ரகம் ” …?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      ” நான் பிராமணன்…நான் சவுக்கிதாராக முடியாது நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே
      பாதுகாவலர்களின் பணியாகும்”

      -என்று திருவாளர் சு.சுவாமி கூறுவது, பொதுவாக அல்ல – மோடிஜிக்காக
      ( என்னை ஜால்ரா வரிசையில் சேர்க்காதீர்கள் என்று….. ) சொல்லப்பட்ட செய்தி என்று தான்
      எனக்குத் தோன்றுகிறது… 🙂 😉

      ஏனெனில், கேள்வி மோடிஜியை முன்வைத்து தானே கேட்கப்பட்டது…? அது சு.சுவாமியின் சுயமரியாதையை hurt பண்ணுகிற வகையில் இருக்கவே, யோசிக்காமலே -உள்ளத்தில் இருந்தது பட்டென்று வெளிவந்து விட்டது பதிலாக …!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.