…
…

…
தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காது என்று
டாக்டர் சு.சுவாமி கணிக்கிறார்.
பாஜகவுக்கு அப்படி மெஜாரிடி கிடைக்காத பட்சத்தில்,
மோடிஜி அல்லாத வேறு ஒருவர் பிரதமராக பொறுப்பு ஏற்க
வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி…
கூட்டணி கட்சிகள் ஏற்கக்கூடிய வகையில் –
நிதின் கட்கரியோ, தகுதியுள்ள வேறு யாராவதோ அடுத்த பிரதமர்
ஆகக்கூடும்….
சு.சுவாமிக்கு, மோடிஜி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு
செயல்படும் விதத்தில் அதிருப்தி இருப்பது பேட்டியில்
வெளிப்படையாகவே தெரிகிறது.
தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு தனி மெஜாரிடி
கிடைக்கவில்லையென்றால், அதை பயன்படுத்திக்கொண்டு,
அடுத்த பிரதமரை உருவாக்குவதில்
டாக்டர் சு.சுவாமி முக்கிய பங்கு வகிப்பாரென்று கூட தோன்றுகிறது.
மாயாவதி, மம்தா பேனர்ஜி ஆகியோர் கூட பிரதமர் பதவிக்கு
தகுதியானவர்கள் தான்….என்று சு.சுவாமி இந்த கட்டத்தில் கூறினால்,
அதன் அர்த்தமென்ன….?
தந்தி டிவி ஹரி கெட்டிக்காரர்….
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பதில்
தனி சாமர்த்தியம் காட்டுகிறார். சு.சுவாமியோடு, இணங்கிப்போய்,
அவருக்கு பிடித்தமான முறையில் கேள்விகளை கேட்டு,
அவர் மனதில் இருப்பவற்றை வெளிக்கொண்டு வரும் முயற்சியில்
வெற்றி பெற்றிருக்கிறார்…
சனிக்கிழமை (23/03/2019) இரவு தந்தி டிவியில் வெளியான –
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், ஹரி – டாக்டர் சு.சுவாமியை
பேட்டி கண்ட நிகழ்வு வெளிவந்தது.
டாக்டர் சு.சுவாமியைப்பற்றிய நமது அபிப்பிராயங்களை
ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் –
பேட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று தான்
சொல்ல வேண்டும்….
இதுவரை பேட்டியை பார்க்காத நண்பர்களுக்காக –
அதனை கீழே பதிவிட்டிருக்கிறேன்…
…
…
.
—————————————————————————————————————



//தேர்தலுக்குப்பின் – மோடிஜி அல்லாத வேறு ஒருவர் பிரதமராக வரக்கூடும்… – டாக்டர் சு.சுவாமி …!!! //
உங்கள் தலைப்பே ஒருவித நிம்மதியையும், மன அமைதியையும்
தருகிறது. இது பலித்திட, நிஜம் ஆக, அனைவரும் வேண்டுவோம்.
சுப்ரமணியம் சுவாமியைப்பற்றிய விமர்சனத்தையும் தாண்டி, அவருடைய பேட்டி வியக்கவைக்கிறது. He is the man of construction if he wants to, otherwise predominantly he is the man of destruction. அதே சமயம், அவருடைய நிலைப்பாட்டை பெரும்பாலும் மாற்றிக்கொள்ளாதவர் அவர்.
1. 7 பேர் விடுதலை – சு.சுவாமி சொன்ன விளக்கம், வெகு அருமை. அதாரிடேடிவ். இதுல ராகுல் காந்தி பொய் சொல்லுகிறார் என்பதும் உண்மை.
2. நீட், கல்வி மாநிலப்பட்டியல் என்பதெல்லாவற்றிலும் சு.சுவாமி சொல்வது சிறப்பா இருப்பதாகத்தான் எனக்குப்படுகிறது.
சுப்ரமணியன் சுவாமி புத்திசாலி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால்,
அவர் மண்டை முழுவதும் Negative Thoughts -களால் நிரம்பி இருக்கிறது.
அவரால் ஒரு நல்ல காரியத்தை செய்யவே முடியாது.
செய்திருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ந.மோ.வுடனான டாக்டர் சு.சுவாமியின் ஹனிமூன் முடிவடைந்து விட்டது என்று தோன்றுகிறது…. இந்த தேர்தலில் சு.சுவாமி பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று சொல்லி விட்டார்.
மெஜாரிடி கிடைக்கவில்லையென்றால், பாஜக ஆதரவு அமைப்பினர் –
சங் பரிவார் பரிந்துரைக்கக்கூடிய வேறு எவராவது பிரதமர் ஆகக்கூடும் என்றும் சொல்கிறார்.
கூடவே, மாயாவதி, மம்தா ஆகியோரும் prime minister material
தான் என்றும் சொல்கிறார்.
எனவே, சு.சுவாமி ஏதோ திட்டம் போடுகிறார்
என்று தோன்றுகிறது… 🙂 🙂
.
-காவிரிமைந்தன்
சுப்பிரமணியம் சுவாமி கூறுவது அவருடைய சொந்த கருத்து .
அதே சமயம் இதையே RSS அமைப்பும் நினைக்கிறது .
சத்ருகன் சின்கா , யஸ்வந்த் சின்கா , நிதின் கட்கரி போன்றவர்களும்
அவரவர் பங்குக்கு கொழுத்திப் போட்டு உள்ளனர் .